Marumagal serial: அம்மாவின் புடவை வாசம்.. நெருக்கடியில் சிக்கிய பத்திரம்..அழுது வடியும் ஆதிரை! - மருமகள் சீரியலில் இன்று-sun tv marumagal serial today latest episode promo on august 30 th and 2024 thillai ready to fight with ekambaram - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: அம்மாவின் புடவை வாசம்.. நெருக்கடியில் சிக்கிய பத்திரம்..அழுது வடியும் ஆதிரை! - மருமகள் சீரியலில் இன்று

Marumagal serial: அம்மாவின் புடவை வாசம்.. நெருக்கடியில் சிக்கிய பத்திரம்..அழுது வடியும் ஆதிரை! - மருமகள் சீரியலில் இன்று

Kalyani Pandiyan S HT Tamil
Aug 30, 2024 02:13 PM IST

Marumagal serial: ஏகாம்பரத்து உடனான பிரச்சினையை நேரடியாகவே பேசி தீர்த்து விடலாம் என்று கிளம்புகிறார். ஏற்கனவே வருத்தத்தில் இருந்த பிரபு ஆதிரைக்கு போன் செய்து, என்னை மன்னித்துவிடு என்று சொல்ல, ஆதிரை உங்களை மன்னிக்க முடியாது என்று கூறி போனை வைத்தாள். - மருமகள் சீரியலில் இன்று

Marumagal serial: அம்மாவின் புடவை வாசம்.. நெருக்கடியில் சிக்கிய பத்திரம்..அழுது வடியும் ஆதிரை! - மருமகள் சீரியலில் இன்று
Marumagal serial: அம்மாவின் புடவை வாசம்.. நெருக்கடியில் சிக்கிய பத்திரம்..அழுது வடியும் ஆதிரை! - மருமகள் சீரியலில் இன்று

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

நேற்றைய எபிசோடில் ஆதிரை நிச்சயதார்த்த மோதிரத்தை போட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பிய நிலையில், அது குறித்தான கவலை, பிரபுவை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. இதற்கிடையே, தில்லை வீட்டிலும், ஏகாம்பரம் குடும்பம் செய்த காரியத்தால் சலசலப்பு நிலவியது. அனைவரும் கவலையோடு இருந்தார்கள். இதையடுத்து தில்லை ஒருமுறை நாம் சிவப்பிரகாசத்தை பார்த்து வந்து விடலாம் என்று கிளம்ப, அவரது அம்மா, தில்லையை தடுத்து போனில் பேசு என்றார்.

இதையடுத்து தில்லை சிவப்பிரகாசத்திடம் போனில் பேசினான். ஆரம்பத்தில் கல்யாண விஷயத்தில் தடைகள் வந்ததை நினைத்து வருத்தப்பட்ட சிவப்பிரகாசம், அதன் பின்னர் இந்த கல்யாணத்தை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்ற ரீதியில் பேசினார். இது தில்லைக்கு மிகப்பெரிய நிம்மதியை கொடுத்தது. இதற்கிடையே மனோகரி இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்காக நிச்சயதார்த்தத்தில் நடந்த பிரச்சினையை வீட்டிற்குள் கொண்டு வந்து, ஆதிரையின் வாழ்க்கை என்னவாகும் என்ற ரீதியில் பேசினார்.

அதற்கு சிவப்பிரகாசம் அபசகுனமாக பேச வேண்டாம் என்று சொன்னதோடு, தில்லையோடு பேசும் பொழுது ஜாடை மாடையாக, எல்லோர் வீட்டிலும் பணத்திற்கு ஆசைப்படும் ஒருவர் இருக்கிறார் என்ற ரீதியில் பேசினார். இதில் கோபமடைந்த மனோகரி, கதவை சாத்திக் கொண்டு வீட்டிற்குள் செல்ல, ஆதிரை அப்பாவை கடிந்து கொண்டாள். ஆனால் சிவப்பிரகாசம் நில பத்திரத்தை நிச்சயமாக நாம் வாங்கிதான் தீர வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உன்னுடைய கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் இது உன் அம்மாவின் ஆசை என்றார். அத்துடன் அதை அவரது அம்மா கைப்பட எழுதிய டைரியையும் அவர் கொடுத்தார். இதை பார்த்த ஆதிரை நெகிழ்ந்து கண்ணீர் வடித்தாள். அத்துடன் நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.