Morning Quotes : அரிசி மற்றும் ரவையில் செய்திருப்பீர்கள்! பிஸிபேளாபாத்தை சேமியாவில் செய்யலாம் தெரியுமா? இதோ ரெசிபி!
Morning Quotes : அரிசி மற்றும் ரவையில் செய்திருப்பீர்கள், பிஸிபேளாபாத்தை சேமியாவில் செய்யமுடியும் தெரியுமா? இங்குகொடுக்கப்பட்டுள்ள ரெசிபி அதற்கு உங்களுக்கு உதவும்.
பிஸிபேளாபாத்தை இதுவரை நீங்கள் அரிசி வைத்துதான் சமைத்திருப்பீர்கள். இப்போது நீங்கள் சேமியாவை பயன்படுத்து செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். சேமியாவிலும் கிச்சடி மட்டும்தான் செய்வது வழக்கம். ஆனால் நவீன சமையலில் சேமியாவில் தயிர் சாதம், லெமன் சாதம், சாம்பார் சாதம் என பல்வேறு வெரைட்டிகள் செய்யப்படுகிறது. நவீன சமையலில் சம்பா ரவையில் பிரியாணி கூட சமைக்கப்படுகிறது. அந்தளவுக்கு சமையல் கலை நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டும், தன்மை புதுப்பித்துக்கொண்டும் வருகிறது. இந்த சமையல் மாற்றங்கள் நமது நாவின் சுவை அரும்களுக்கு விருந்தாகிறது. அது ஒரு வகையில் நல்லதுதான். ஏனென்றால் ஒரேபோன்ற சமையல் நமக்கும் போர் அடிக்கும் விஷயமாகும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரெசிபியை கட்டாயம் செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்றாக அமையும். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி ருசிப்பீர்கள்.
தேவையான பொருட்கள்
சேமியா – 200 கிராம்
துவரம் பருப்பு – 50 கிராம்
பட்டாணி – 50 கிராம்
புளி – நெல்லிக்காய் அளவு
கேரட் – அரை
பீன்ஸ் – 6
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
இடித்த வெல்லம் – ஒரு ஸ்பூன்
முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
பிஸிபேளாபாத் பொடி – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
கருப்பு உளுந்து – அரை ஸ்பூன்
வர மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
புளியை கால் மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அதன் சாறை எடுத்துவைக்கவேண்டும். கேரட் பீன்ஸ் இரண்டையும் கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும். துவரம் பருப்பை குக்கரில் போட்டு 3 விசில்கள் வரும்வரை அடுப்பில் வைத்து நன்றாக வேகவைக்கவேண்டும். கடாயில் சேமியாவைச் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றவேண்டும்.
அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு வேகவிடவேண்டும். சேமியாவை ஒட்டாமல், குழையாமல் முக்கால் பதத்தில் வேகவிட்டு, வெந்ததும் நீரை வடித்து சேமியாவைத் தனியே வைக்கவேண்டும்.
நறுக்கியக் காய்கறிகளுடன் பட்டாணி மற்றும் உப்பு சேர்தது வேகவைக்கவேண்டும். காய்கள் வெந்த பின்னர், கரைத்த புளி, வெல்லம், பிஸிபேளாபாத் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறிவிடவேண்டும். பின்னர் வெந்த பருப்பை சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.
இது கூட்டுபோல் வந்தவுடன், வெந்த சேமியாவை சேர்த்து பின்னர் பிஸிபேளாபாத் பதம் வரும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்துவிடவேண்டும். சேமியா அதிகம் குழையாதவாறு அடுப்பில் வைத்து கிளறிக்கொண்டே வேகவிடவேண்டும்.
தாளிப்புக் கரண்டியில் நெய் ஊற்றி சூடானவுடன், தாளிக்கும் பொருட்கள் மற்றும் முந்திரியை சேர்க்கவேண்டும். முந்திரி சிவந்தவுடன், இதை சேதியாவில் ஊற்றி இறக்கவேண்டும். ருசியான அசத்தலான சேமியா பிஸிபேளாபாத் தயார்.
குறிப்புகள்
ப்ரேக் ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் என மூன்று வேளைக்கும் இதை சாப்பிடலாம்.
இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம் மற்றும் வடகங்களே போதும். காரா பூந்தி, சேவு, சூடான குட்டி மசால்வடை, உருளைக் கிழங்கு வறுவல், அவரை, கேரட், கோஸ் போன்ற பொரியல் வகைகளும் நன்றாக இருக்கும்.
கேரட், பீன்ஸ், தவிர உங்கள் விருப்பமான காய்கறிகளை இதனுடன் சேர்த்தும் சமைக்கலாம்.
விருந்துகளில் பரிமாற ஏற்றதும் கூட. வித்யாசமான டிஷ்ஷாக இருக்கும்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.
தொடர்புடையை செய்திகள்