தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  செட்டிநாடு நண்டுகுழம்பில் வயாக்ராவின் குணமிருக்கிறதாமே! குழம்பு செய்வது எப்படி?

செட்டிநாடு நண்டுகுழம்பில் வயாக்ராவின் குணமிருக்கிறதாமே! குழம்பு செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil
Mar 09, 2023 01:41 PM IST

உடல் மற்றும் உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டும் குணம் செட்டிநாடு நண்டு குழம்பில் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்தக் குழம்பு செய்முறை குறித்து இங்கு காண்போம்.

செட்டிநாடு நண்டுகுழம்பு
செட்டிநாடு நண்டுகுழம்பு

ட்ரெண்டிங் செய்திகள்

நண்டில் உடலுக்குத் தேவையான எல்லா அத்தியாவசிய கொழுப்புகள், ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள், கனிமங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

நாள்பட்ட இதய நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் நண்டு சாப்பிடுவதால் இதயக் கோளாறுகள் குறைவதாகக் கூறப்படுகிறது என்றாலும் அதற்கான ஆய்வுப்பூர்வமான ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் உடலுக்கு நல்ல ஆற்றலை நண்டு அளிக்கிறது.

அணுக்கள் சேதமடையாமல் பார்த்துக் கொள்வதோடு உடலில் உள்ள பாலுறுப்புகளைத் தூண்டி, உடலை கிளர்ச்சியடையச் செய்து பாலுறவு ஆர்வத்தைத் தூண்டிவிடும் தன்மையும் இதற்கு உண்டு. வயாக்ரா செயற்கை கிளர்ச்சியூட்டி என்றால் நண்டை இயற்கை கிளர்ச்சியூட்டியாகக் கூறினால் தப்பில்லை.

உடல் உஷ்ணத்தைத் தூண்டும் என்பதால்தான் இயல்பாகவே குளிர்காலத்தில் நண்டை அதிகம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த நண்டை உட்கொள்ளலாம்.

நண்டு இறைச்சியில் உள்ள செலெனியம், நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது.

பாலியல் ஆர்வத்தைத் தூண்டும் தன்மையுடைய நண்டிலிருந்து செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது எப்படி என்று இனி பார்ப்போம்

செட்டிநாடு நண்டு குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்:

நண்டு – 1 கிலோ

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜைக் கரண்டி

தக்காளி – 5

வெங்காயம் – 400 கிராம்

மிளகாய்த் தூள் – 5 டீஸ்பூன்

கரம் மசாலாத் தூள் – 2 டீஸ்பூன்

தேங்காய் – 1

பச்சை மிளகாய் – 15

சோம்பு – 3 டீஸ்பூன்

கொத்தமல்லி- சிறிதளவு

கறிவேப்பிலை- சிறிதளவு

உப்பு -தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

 

செட்டிநாடு நண்டு குழம்பு செய்முறை:

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியைப் போட்டு லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

வதக்கியவற்றை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

கடலைப் பருப்பையும் வறுத்து எடுத்து, துருவியத் தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலைத் தாளிக்க வேண்டும்.

இதில் சுத்தம் செய்த நண்டு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள்,

தக்காளி வெங்காயம் விழுது மற்றும் நண்டு நனையும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.

நண்டு வெந்ததும் தேவையான உப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லி தூவிப் பரிமாற வேண்டும்.

சுவையான நண்டு குழம்பு சாதத்துக்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசைக்கும் நன்றாக இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்