தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Enrich Your Oily Skin

Skin Care: எண்ணெய் வழியும் முகத்தை பளிச்சிட வைக்கும் வழிகள்

I Jayachandran HT Tamil
Jan 24, 2023 01:03 PM IST

எண்ணெய் வழியும் முகத்தை பளிச்சிட வைக்கும் வழிகள் குறித்து இங்கு காணலாம்.

எண்ணெய் வழியும் முகத்தை பளிச்சிட வைக்கும் வழிகள்
எண்ணெய் வழியும் முகத்தை பளிச்சிட வைக்கும் வழிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

சருமம் பெரிய உறுப்பு என்பதாலேயே இதில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. சூரிய ஒளியால் தோல் கருத்தல், கரும்புள்ளிகள், பருக்கள், முகப்பரு, சொறி, வறட்சி போன்ற பிரச்னைகள் உண்டாகிறது. முகம், கை, கால்களிலும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

பருவகாலத்துக்கேற்ப சருமத்தின் பராமரிப்புகளும் மாற வேண்டும். உங்கள் சருமம் எண்ணெய் பசையை கொண்டிருந்தால் நீங்கள் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சருமத்துக்கேற்ற சரியான தோல் பராமரிப்பு பொருள்களை பயன்படுத்தினாலும் அவை பருவகாலத்திலும் கடைப்பிடிக்கும் போது சில பொதுவான தோல் பராமரிப்பு தவறுகள் சரும பிரச்னையை மேலும் மோசமாக்கும். அதனால் தான் தோல் வகை மற்றும் பருவங்களுக்கு ஏற்ப பராமரிப்பும் இருக்க வேண்டும்.

கோடைகாலத்தில் டோனர்கள் சருமத்துளைகளை மூடவும் சருமத்தை புதுப்பிக்கவும் செய்கிறது. குளிர்காலத்தில் சருமத்துக்கு மாய்சுரைசர்கள் மற்றும் மென்மையாக்கிகள் தேவை. குளிர்காலத்தில் எண்ணெய் சருமத்தில் அதிக எடை கொண்ட க்ரீம்களை பயன்படுத்துவது தவறானது.

உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருந்தால் நீங்கள் இன்னும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

எண்ணெய் பசை சருமம் கொண்ட பெரும்பாலான மக்கள், எண்ணெய் தோற்றத்தை குறைக்கும் என்று சோப்பு அடிக்கடி பயன்படுத்துவது உண்டு. இதனால் எண்ணெய் பசை போகாது.

சோப்புகள் இயற்கையில் காரத்தன்மை வாய்ந்தவை. அதிகப்படியான சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவுதல் தோலின் சாதாரண அமில கார (பிஹெச்) சமநிலையை சீர்குலைக்கும். இதனால் சருமத்தில் மருக்கள் மற்றும் முகப்பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எண்ணெய் சருமத்தினர் சருமத்தை பளபளப்பாக்கி காட்ட க்ரீம் மசாஜ் செய்வது உண்டு. இது எண்ணெய் சுரப்பிகளை மேலும் செயல்படுத்தி அடைபட்ட துளைகள், முகப்பருக்கள் மற்றும் பருக்களை உண்டு செய்யும்.

சாதாரண மற்றும் எண்ணெய் சருமத்துக்கு ஆழமாக துளைகளை சுத்தம் செய்தல், ஸ்க்ரப் செய்தல், சரும உரித்தல் , டோனிங் , மாஸ்க் போன்றவை இந்த மசாஜில் அடங்கும்.

முகத்தில் வெடிப்புகள் இருந்தால் வீட்டு வைத்திய முறையில் அதிக கொரகொரப்பான பொருள்களை கொண்டு ஸ்க்ரப் செய்வது , முகப்பரு மற்றும் பருக்களை அகற்ற ஸ்க்ரப் செய்வதை தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் எண்ணெய் இல்லாத மேட் மாய்சுரைசர் அல்லது ஜெல் அடிப்படையிலான சன்ஸ்க்ரீன் போன்ற எண்ணெய் இல்லாத பொருள்களை பயன்படுத்த வேண்டும்.

சருமத்துக்கு ஊட்டமளிக்க இரவு நேரங்களில் க்ரீம் பயன்படுத்துவது உண்டு. இந்த க்ரீம் இரவு நேரத்தில் தடவி அப்படியே விடப்படும். சாதாரண மற்றும் எண்ணெய் சருமத்துக்கு ஊட்டமளிக்கும் க்ரீம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

WhatsApp channel