தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Diabetes Tips: என்ன பண்ணாலும் சர்க்கரை நோய் குறையலையா.. இந்த 4 விஷயம் ட்ரை பண்ணுங்க

Diabetes Tips: என்ன பண்ணாலும் சர்க்கரை நோய் குறையலையா.. இந்த 4 விஷயம் ட்ரை பண்ணுங்க

Aarthi V HT Tamil
Aug 18, 2023 10:30 AM IST

சிறிய வீட்டு குறிப்புகள் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய்

ட்ரெண்டிங் செய்திகள்

கெமோமில் பூ

உலர்ந்த கெமோமில் பூ சர்க்கரை நோய்யை கட்டுக்குள் கொண்டு வரும். இது பழங்காலத்திலிருந்தே பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் இரவில் படுக்கும் முன் ஒரு கப் கெமோமில் டீ குடிப்பது மிகவும் நல்லது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் நன்கு கட்டுப்படுத்துகிறது. 

பாதாம்

பாதாமில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இரவில் படுக்கும் முன் ஊறவைத்த5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். பாதாமில் மெக்னீசியம் மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. இதன் விளைவாக நன்கு தூக்கம் வருவதுடன் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்

வெந்தயம்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வெந்தயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெந்தயத்தில் ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகள் உள்ளன. இரவில் தூங்கும் முன் ஊறவைத்த வெந்தயத்தை சூடான தண்ணீரில் போட்டு சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

வஜ்ராசனம்

யோகாவில் இருக்கும் வஜ்ராசனம் செய்தால் நீரிழிவு நோயளிகளுக்கு நல்ல பலன் தரும். தூங்குவதற்கு முன் வஜ்ராசனம் செய்தால், ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். அதுமட்டுமின்றி ரத்த ஓட்டமும் சீராகும். 5 முதல் 10 நிமிடங்கள் வஜ்ராசனம் செய்தால் பலன் பல மடங்கு கிடைக்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்