தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tv Screen Cleaning Tips: டி.வி திரையை சுத்தம் செய்வது எப்படி?.. ஈஸி டிப்ஸ் இதோ..!

TV Screen Cleaning Tips: டி.வி திரையை சுத்தம் செய்வது எப்படி?.. ஈஸி டிப்ஸ் இதோ..!

Karthikeyan S HT Tamil
Nov 07, 2023 12:47 PM IST

டி.வி திரையை சுத்தம் செய்யும் போது என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

எல்இடி டிவி (கோப்புபடம்)
எல்இடி டிவி (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

அதேநேரம், பெரும்பாலான வீடுகளில் தற்போது சுவரில் பதித்து வைக்கும் வகையிலான எல்.இ.டி டி.விக்கள் உள்ளன. இவற்றை சரியான முறையில் சுத்தம் செய்யாத பட்சத்தில் அதில் கீறல்கள் விழுவதற்கும், திரையில் வேறு ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டாகிவிடும். எனவே, திரைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் டி.வி.யை எப்படி சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.

  • எப்போது டி.வியை சுத்தம் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு முன்னதாகத் திரையை மட்டுமல்லாது, டி.விக்கு வரும் மொத்த மின்சாரத்தையும் நிறுத்த வேண்டும். இதனால் மின் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
  • டி.வி-யை ஆஃப் செய்த பின்பு, திரை கறுப்பாக இருக்கும். அப்போதுதான் அதில் படிந்துள்ள தூசிகள் தெளிவாகத் தெரியும். எனவே டிவியை ஆஃப் செய்த நிலையில்தான் சுத்தம் செய்ய வேண்டும்.
  • பெரும்பாலான டி.வி. திரைகளை சற்று அழுத்தி துடைத்தாலே அவற்றில் கீறல் விழக்கூடும். அதனால், எல்.இ.டி, ஓ.எல்.இ.டி, பிளாஸ்மா போன்ற டி.வி.களின் திரைகளை துடைப்பதற்கு மைக்ரோபைபர் துணி சிறந்தது.
  • டி.வி. திரையின் மூலைகளிலும், விளிம்புகளிலும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அதே சமயம் இந்தப் பகுதிகளில் அதிக அழுத்தம் கொடுக்காமல் மிருதுவாக துடைக்க வேண்டும்.
  • டி.வி திரையை சுத்தம் செய்வதற்கு சிலர் கெமிக்கல் ஸ்பிரே பயன்படுத்துவார்கள். அது தரமானதாக இருக்கிறதா? என்று கவனித்து வாங்குங்கள். இதை நேரடியாக ஸ்கிரீன் மீது தெளிக்காமல், துப்பதற்கு பயன்படுத்தும் துணியில் முதலில் ஸ்பிரே செய்து அதைக்கொண்டு டி.வி திரையைத் துடைக்க வேண்டும்.
  • ஸ்பிரே செய்வதற்கு முன்பு உலர்ந்த துணையைக் கொண்டு டி.வி. மீது படிந்துள்ள தூசியைத் துடைக்க வேண்டும். திரை மட்டுமின்றி, ஸ்பீக்கர்கள், போர்ட்களில் இருக்கும் தூசியையும் அகற்றி சுத்தம் செய்வது நல்லது.
  • டி.வியை சுத்தம் செய்யும் போது ஒரே வகையான இயக்கத்தில் பலமுறை துடைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் திரையின் மீது கீறல்கள் விழ வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க, கிடை மட்டமாகவோ அல்லது செங்குத்தாகவோ சீரான முறையில் லேசாக அழுத்தம் கொடுத்து துடைக்க வேண்டும்.
  • டி.வி., திரையை சுத்தம் செய்து முடித்த பின் உடனே திரையை ஆன் செய்யாமல் சிறிது நேரம் காய விடவும். அதன் பின் திரையை ஆன் செய்யவும்.

பெண்கள் வெள்ளி மோதிரம் அணிந்தால் இத்தனை அதிர்ஷ்டமா?

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்