Hormone Balances : உடலில் ஹார்மோன்களை சரியாக சுரக்கச்செய்யும் வழிகள் இவைதான்! தவறவிட்டுவிடாதீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hormone Balances : உடலில் ஹார்மோன்களை சரியாக சுரக்கச்செய்யும் வழிகள் இவைதான்! தவறவிட்டுவிடாதீர்கள்!

Hormone Balances : உடலில் ஹார்மோன்களை சரியாக சுரக்கச்செய்யும் வழிகள் இவைதான்! தவறவிட்டுவிடாதீர்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 27, 2024 08:41 AM IST

Hormone Balances : ஹார்மோன்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் நற்பழக்கங்கள் என்ன தெரியுமா?

Hormone Balances : உடலில் சரியான ஹார்மோன்களை சுரக்கச்செய்யும் வழிகள் இவைதான்! தவறவிட்டுவிடாதீர்கள்!
Hormone Balances : உடலில் சரியான ஹார்மோன்களை சுரக்கச்செய்யும் வழிகள் இவைதான்! தவறவிட்டுவிடாதீர்கள்!

உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவது, மனநிலையை மாற்றுவது மற்றும் உடல் வளர்சிதையை ஊக்குவிப்பது ஆகியவற்றுக்கு ஹார்மோன்கள் உதவுகிறது. அதற்கு நீங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில எளிமையான பழக்கங்களை கடைபிடித்தாலே போதும். உங்கள் உடல் ஆரோக்கியம் பெறும்.

ப்ரோபயோடிக் நிறைந்த உணவுகள்

தயிர், பன்னீர், ஆப்பிள் சைடர் வினிகர் போன்றவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. 

ப்ரோபயோடிக்குகள், உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உடலில் ஹார்மோன்களை சுரக்கச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான குடல், செரிமானத்தை அதிகரிக்கிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், ஹார்மோன்களை நன்றாக சமப்படுததுவதற்கும் உதவுகிறது.

சாப்பிட்ட பின் 10 நிமிடங்கள் நடப்பது

சாப்பிட்ட பின் மெதுவாக 10 நிமிடங்கள் நடக்கவேண்டும். இந்த சிறிய உடற்பயிற்சி, செரிமானத்தை தூண்டுகிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க உதவுகிறது. இது உடலில் ஹார்மோன்களை சமமாக்கவும், குறிப்பாக இன்சுலினுக்கும் நல்லது.

நீர்ச்சத்துடன் இருப்பது

எலக்ட்ரோலைட்கள், உடலில் முறையான ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே நீங்கள் போதிய அளவு தண்ணீரை நாள் முழுவதும் பருகி, உங்கள் உடல் நீர்ச்சத்து நிறைந்ததாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். 

பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதும் உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும்.

புரதச்சத்தை எடுத்துக்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்

உங்கள் தினசரி உணவில் 30 கிராம் புரதச்சத்துக்கள் இருப்பதை கட்டாயமாக்குங்கள். உங்கள் உடலில் ஹார்மோன்கள் உற்பத்திக்கு புரதச்சத்துக்கள் முக்கியமானது. 

உடலில் உள்ள திசுக்களை சரிசெய்யும். ஆட்டிறைச்சி, மீன், முட்டைகள் மற்றும் பருப்பு வகைகள் என உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடலில் ஹார்மோன் ஆரோக்கியத்துக்கு உதவும்.

மூலிகை தேநீர்

சர்க்கரை நிறைந்த பானங்களை பருகுவதைவிட்டுவிட்டு, கிரீன் டீ போன்ற மூலிகை பானங்களை அருந்துங்கள். மூலிகை டீக்களில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளது. அது வீக்கத்தை குறைத்து ஹார்மோன்கள் சமமின்மையை போக்குவதற்கு உதவுகிறது.

நார்ச்சத்துக்கள் உட்கொள்வதை அதிகரியுங்கள்

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் என நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை 2 அல்லது 3 முறை உட்கொள்ளுங்கள். நார்ச்சத்துக்கள் உங்கள் செரிமானத்தை அதிகரிக்கும். 

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்தும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடலில் உள்ள நுண்ணுயிர்களை காக்கும். இவையனைத்தும் உடலில் ஹார்மோன்களை சமப்படுத்தும்.

சப்ளிமென்ட்கள் எடுத்துக்கொள்ளுங்கள்

உங்கள் மருத்துவரை அணுகி உங்கள் உடலில் ஹார்மோன்களை சமப்படுத்த ஏதாவது சப்ளிமெண்ட்கள் தேவைப்படுகிறதா என்பதை கேட்டு, அதற்கேற்றார்போல் எடுத்துக்கொள்ளுங்கள். 

வைட்டமின் டி, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், மெக்னீசியம் மற்றும் அஸ்வகந்தா, ரோடியோலா போன்ற மூலிகைகள் உங்கள் உடலில் ஹார்மோன்களை சமப்படுத்த உதவும். எனவே அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

படுக்கை பழக்கம்

தரமான உறக்கத்துக்கு உறுதிகொடுங்கள். அந்த பழக்கத்தை கைவிடாதீர்கள். 7 முதல் 9 மணி நேர உறக்கத்தை கட்டாயமாக்குங்கள். இடையூறில்லாத உறக்கம் கட்டாயம் தேவை. ஒவ்வொரு இரவும் அதை உறுதிசெய்யுங்கள். 

போதிய உறக்கமின்மை ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஹார்மோன்கள் சமமின்மை உடலில் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

உணவை தவிர்ப்பதை தவிர்க்கவேண்டும்

ஒரு உணவுப்பழக்கத்தை கைகொள்ளுங்கள். அதை தவிர்த்துவிடாதீர்கள். முறையற்ற சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்தீர்கள் என்றால், அது உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் மறறும் உங்கள் உடலில் ஹார்மோன்கள் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். 

எனவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு உட்கொள்வதை நீங்கள் உறுதிப்படுத்துங்கள். உங்கள் உடலில் நாள் முழுவதும் ஆற்றல் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.