Home Decors Idea : ரொமான்ஸ் பெர்ஃபார்மென்ஸை அதிகரிக்க வேண்டுமா? படுக்கை அறையில் இந்த வண்ணங்களை தீட்டுங்கள்!
Home Decors Idea : ரொமான்ஸ் பெர்ஃபார்மென்ஸை அதிகரிக்க வேண்டுமா? படுக்கை அறையில் இந்த வண்ணங்களை தீட்டுங்கள்!

உங்கள் படுக்கையறைக்கு இந்த வண்ணங்களைத் தீட்டினால் அது புதுமணத் தம்பதிகளோ அல்லது தம்பதிகளோ யாராக இருந்தாலும் அவர்களின் ரொமான்ஸ் அதிகரிக்கும். சிறப்பான தம்பதிகளுக்கு சிறப்பான படுக்கையறை வண்ணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். வீட்டின் படுக்கையறையில்தான் அனைவரும் அமர்ந்து உறங்கி, ஓய்வெடுப்பார்கள். அந்த படுக்கையறைக்கு இதமான வெளிர் நிறங்களை அடிக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கு ஓய்வைத்தரும். அங்கு கடுமையான அடர்நிறங்களை நீங்கள் தேர்வு செய்தால், அது அந்த இடத்தின் ரம்மியத்தைப்போக்கி, உங்களின் ஓய்வை குலைக்கும். உங்கள் வீட்டின் படுக்கை அறைக்கு சரியான வண்ணம் எது என்று இங்கு ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் படுக்கையறையின் அழகை அதிகரியுங்கள்.
பீச்
பீச் வண்ணம், வெளிர் ஆரஞ்சு பிரகாசமாக இருந்தால் எப்படியிருக்கும். அதுதான் பீச் வண்ணம். இது உங்கள் கண்களுக்கு இதமாக இருக்கும். பீச் வண்ண படுக்கை அறையில் எப்போதும் ரொமாண்டிக் ஆற்றல் நிறைந்திருக்கும். இந்த வண்ணத்தை நீங்கள் எந்த அறைக்கு அடித்தாலும், அது அறை அழகாக இருக்கும். அந்த அறையில் உள்ள அத்தனை பொருட்களுடனும் இந்த வண்ணம் தொடர்புடையதாகவே இருக்கும்.
