Home Decors Idea : படுக்கை அறைக்கு இந்த வர்ணங்களை தீட்டுங்கள்! மனநிலையும் மாற்றும்; உறக்கமும் சிறக்கும்!
Home Decors Idea : படுக்கை அறைக்கு இந்த வர்ணங்களை தீட்டுங்கள், ‘உங்கள் மனநிலையையும் மாற்றும்; உறக்கமும் சிறக்கும். உங்களின் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
உங்கள் வீட்டின் படுக்கை அறைக்கு குறிப்பிட்ட சில வர்ணங்களைத் தீட்டினால், அது உங்கள் மனநிலையையும் மாற்றும். உங்களின் உறக்கத்தின் தரத்தையும் அதிகரிக்கும்.
படுக்கை அறைக்கு சிறந்த வர்ணம்
உங்கள் படுக்கை அறைக்கு நீங்கள் கொடுக்கும் வண்ணம்தான், நீங்கள் எப்படி உறங்கி எழப்போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. உங்கள் நாள் முழுவதிலும் நீங்கள் எவ்வாறு இருக்கப்போகிறீர்கள் என்பதையும் காட்டுகிறத. எனவே உங்களுக்கு அதற்கு சில யோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
வெளிர் ஊதா, ஸ்கை ப்ளூ கலர்
உங்கள் படுக்கை அறைக்கு ஊதா என்பது ஒரு சிறப்பான தேர்வு ஆகும். இது உங்கள் படுக்கை அறையில் ஒரு நல்ல இதமான சூழலை உருவாக்கித் தரும். இது உங்கள் மனநிலையை அமைதிப்படுத்தும். அது உங்களின் இரவு உறக்கத்தை மேம்படுத்தும்.
வெளிர் மஞ்சள், வெந்தய நிறம்
பலருக்கு மஞ்சள் வண்ணம் என்றாலே பிடிக்காது. உங்கள் படுக்கை அறைக்கு சாதாரணமான மஞ்சள் வண்ணம் என்பது, நல்ல ஒரு இதத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும். இது பிரகாசமான, மனதுக்கு உற்சாகமளிக்கும் நிறம். இது உங்கள் மோசமான நாளையும், நல்ல நாளாக மாற்றும். இந்த நிறம் தரும் இதம் உங்கள் மனநிலையை மாற்றும்.
லைலக்
லைலக் என்பது லாவண்டர் மற்றும் பர்பிளுக்கு மத்தியில் உள்ள ஒரு நிறம். இதை நீங்கள் படுக்கை அறையில் அடித்திருந்தால், அது உங்கள் படுக்கை அறையை மேலும் அழகாக்கும் மற்றும் உங்கள் கண்களுக்கு இதமளிக்கும். உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த வண்ணமாக இது இருக்கும்.
வெளிர் பச்சை
அடர் பச்சை நிறம் அல்ல வெளிர் பச்சை நிறம் உங்கள் படுக்கை அறைக்கு இயற்கை அழகைத் தரும். பசுமை என்றாலே இயற்கைதானே. எனவே உங்கள் படுக்கை அறையே இயற்கையான சூழலில் உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இயற்கையே உங்கள் படுக்கை அறைக்கு வந்துவிட்டதுபோன்ற தோற்றத்தைதரும். சுவரில் பசுமை வண்ணம் மற்றும் அறைக்கும் சில செடிகள், என அறை முழுவதும் உங்களின் மனதை அமைதிப்படுத்தும்.
பழுப்பு
பழுப்பு வண்ணம் வெள்ளைக்கு மிகவும் நெருக்கமான வண்ணம். இது இரண்டு லுக்கையும் கொடுக்கும் வண்ணம். கண்களுக்கு இதம் தரும் ஒரு நிறம். உங்கள் சுவர்களில் இந்த வர்ணத்தை தீட்டுவது உங்களுக்கு நல்ல இதமான உணர்வைத்தரும்.
க்ரே
க்ரே வர்ணத்தை பெரும்பாலும் யாரும் உபயோகிக்க மாட்டார்கள். ஏனெனில் அது உங்கள் வீட்டுக்கு அழுக்கு தோற்றத்தை தரும். ஆனால், இது மிகவும் அழகான வர்ணம். இதை நீங்கள் பயன்படுத்தும் விதத்தில் அதன் எழில் மேலும் கூடும். எனவே உங்கள் படுக்கை அறையில் உள்ள சுவர்களை க்ரே வர்ணத்தில் தீட்டினால், உங்களுக்கு அது உங்களை ரிலாக்ஸ் ஆக்கி, உங்கள் மனதுக்கு இதமளித்து, நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.
பீச்
பீச் என்பது ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் இரண்டும் மத்தியிலி உள்ள ஒரு வர்ணம் என்று சொல்லலாம். பிரகாசமான வர்ணம். உங்கள் படுக்கை அறைக்கு ஒரு இதத்தை தரும். உங்கள் அறையை இதமாக்கும், நல்ல தோற்றத்தை ஏற்படுத்தி தரும். ஒரு கடும் பனி காலத்தில் இந்த வர்ணம், உங்களுக்கு ஒரு நல்ல அமைதியைத் தரும். நல்ல உறக்கத்தை கொடுத்து உங்களின் மனதை அமைதிப்படுத்தும்.
வெளிர் பச்சை
வெளிர் பச்சை வண்ணம் அழகான ஒரு நிறம். உங்கள் வீட்டின் எழிலை அதிகரிப்பது மட்டுமல்ல புத்துணர்ச்சியையும் தரும். தனித்தன்மையான ஒரு வண்ணம். இது உங்கள் வீட்டுக்கு நேர்மறையான எண்ணத்தைக் கொண்டுவரும் ஒர வர்ணம் ஆகும். இது உங்கள் மனதை அமைதிப்படுத்தும். உங்கள் கண்கள் மற்றும் மனதுக்கு இதத்தை தரும் வண்ணம். உங்களின் மோசமான நாட்களில் உங்களின் மனநிலையை மாற்றி, உங்களை உற்சாமாக்கும் ஒரு வண்ணம் ஆகும்.
கிரீம்
கிரீம் வண்ணமும் உங்கள் படுக்கை அறைக்கு இயற்கையான அழகைத்தரும். ஆனால் இந்த நிறத்தை அதிகம் பயன்படுத்த மாட்டார்கள். இது அழகான, இதமான வண்ணமாக இருந்தால், விரைவில் அழுக்காகிவிடும். குறிப்பாக உங்கள் வீட்டில் பால்கனியுடன் படுக்கை அறை இருந்தால், அது விரைவில் தூசி படியும். ஆனால், உங்கள் வீட்டுக்கு நீங்கள் கிரீம் வண்ணம் பூசினால், இது உங்கள் படுக்கை அறையை அழகாகவும், உங்களை படுக்க வரவேற்கும் வகையிலும் இருக்கும்.
மென் பவள வண்ணம்
இது பிங்க், பீச், பவளத்தின் நிறம் என அனைத்து வண்ணங்களும் கலந்த ஒரு கலவை இந்த வண்ணத்தில் உங்கள் படுக்கை அறை இருந்தால், அது புத்துணர்ச்சியுடனும், அழகான நேர்மறை தோற்றத்தையும் தரும். இந்த படுக்கையறைக்கு கொடுக்கப்படும் மென் பவள வண்ணம், மகிழ்ச்சியைத் தரும். இயற்கை எழிலைக்கொண்டுவரும். இது உங்களின் மன ஆற்றலை அதிகரிக்கும். இந்த வர்ணம் உங்கள் படுக்கை அறையின் அழகை அதிகரிக்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்