Landslide: சுவரில் வண்ணம் பூசும்போது நிலச்சரிவு ஏற்பட்டு 3 பேர் உயிரிழப்பு!
தீபாவளி பண்டிகைக்காகச் சுவரில் வண்ணம் பூசும்போது நிலச்சரிவு ஏற்பட்டு மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீபாவளி பண்டிகை என்றால் புத்தாடை அணிவதும், வீட்டைச் சுத்தம் செய்து புதுமையாக்குதலும் சகஜமான ஒன்று. அந்த வகையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சத்திர மாவட்டத்தில் பர்வா கோச்சுவா கிராமத்தில் ஒருவர் தனது குடிசை வீட்டில் இருக்கும் சுவர்களுக்கு வண்ணம் பூசும்பொழுது நிலம் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நிலச்சரிவில் நான்கு பேர் மண்ணில் புதைந்துள்ளனர். இதுகுறித்து பிரதாப்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தகவல் இருந்து சம்பவம் இடத்திற்கு வந்த பிரதாபூர் காவல் நிலைய பொறுப்பாளர் வினோத் குமார், அந்த கிராம மக்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். பின்னர் மண்ணில் புதை உண்டு கிடந்த நான்கு பேரும் மீட்கப்பட்டு பிரதாப்பூர் சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட நான்கு பேரில் சிகிச்சை பலனின்றி மூன்று பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஆர்த்தி குமார், பிங்கி குமார், முனக் குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது அவர்களது உடல்கள் உடற்கூறாய்வுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. நான்காவது நபர் உடல்நலம் சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.