Tamil Top 10 News: 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் முதல் அதானி குழுமம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை வரை - டாப் 10 நியூஸ்!
Afternoon Tamil Top 10 News: மிக கனமழை எச்சரிக்கை, வங்கதேச சிறுபான்மையினரை பாதுகாக்க குழு, அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 11, 14,15 ஆகிய தேதிகளில் 12-20 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். ஆகஸ்ட் 12, 13 தேதிகளில் 7-11 செ.மீ மழைக்கு வாய்ப்புள்ளதால் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்று கலந்தாய்வு முடிவு
பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நேற்று நிறைவு பெற்ற நிலையில், மொத்தமுள்ள 1.79 லட்சம் இடங்களில் இதுவரை 19,922 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக கம்பியூட்டர் என்ஜினியரிங் (CSE) படிப்பில் 4,879 பேரும், எலக்ட்ரானிஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் (ECE) படிப்பில் 2,704 பேரும் சேர்ந்துள்ளனர்.
அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமேன் கலிஃப், பாலின ரீதியாக சமூக வலைதளங்களில் தன்மீது அவதூறு பரப்பியவர்களை சட்டரீதியாக தண்டிக்க வலியுறுத்தி பிரான்ஸில் புகார் அளித்துள்ளார். இமேன் மீது இனவெறியுடன் பாலின ரீதியான அவதூறுகளை கட்டவிழ்த்து விடப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதே தங்கள் நோக்கம் என அவரது வழக்கறிஞர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வங்கதேச சிறுபான்மையினரை பாதுகாக்க குழு
வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தோ-வங்கதேச எல்லையில் தற்போதைய நிலைமையை கண்காணிப்பது, வங்கதேசத்தில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்நாட்டில் உள்ள இந்திய அதிகாரிகளுடன் இந்த குழு தொடர்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சைர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
205 தாக்குதல்
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த 5-ம் தேதி கவிழ்ந்த பிறகு சிறுபான்மையின இந்துக்கள் மீது 52 மாவட்டங்களில் 205 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக இரு இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.
வெறும் வதந்தியே
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்தப்போவதாக பரவும் தகவல் வதந்தியே என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. எந்த ஆலோசனையும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
ராமதாஸ் கோரிக்கை
ஆசிரியர் காலி பணியிடங்களில் 72% வடமாவட்டங்களில் தான். எனவே, மாவட்ட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் அறிக்கை
ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரிப்பதாக அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டில் உண்மை இல்லை என உறுதியான பிறகும், அதே குற்றச்சாட்டை மறுசுழற்சி செய்து வெளியிடப்பட்டுள்ளதாக அதானி குழுமம் கூறியுள்ளது. எங்களது வெளிநாட்டு முதலீடுகள் முற்றிலும் வெளிப்படைத்தன்மை கொண்டவை என்றும் ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள அறிக்கைகள் தவறானவை என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்