Girl Baby Names : செல்லமாகத்தான் அழைப்பீர்கள் என்றாலும், உங்கள் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்களின் பட்டியல்!-girl baby names a list of names that are perfect for your baby girl even if you call them cute - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Girl Baby Names : செல்லமாகத்தான் அழைப்பீர்கள் என்றாலும், உங்கள் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்களின் பட்டியல்!

Girl Baby Names : செல்லமாகத்தான் அழைப்பீர்கள் என்றாலும், உங்கள் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்களின் பட்டியல்!

Priyadarshini R HT Tamil
Aug 25, 2024 10:43 AM IST

Girl Baby Names : செல்லமாகத்தான் அழைப்பீர்கள் என்றாலும், உங்கள் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Girl Baby Names : செல்லமாகத்தான் அழைப்பீர்கள் என்றாலும், உங்கள் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்களின் பட்டியல்!
Girl Baby Names : செல்லமாகத்தான் அழைப்பீர்கள் என்றாலும், உங்கள் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்களின் பட்டியல்!

இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.

மீரா

மீரா என்றால் செல்வம் என்று பொருள். கண்ணனின் காதலி. உங்கள் வீட்டில் செல்வம் நிறைந்து சிறக்கவேண்டுமெனில் உங்கள் பெண் குழந்தைக்கு மீரா எனப்பெயரிடுங்கள்.

ஷ்ரேயா

ஷ்ரேயா அதிர்ஷ்டம் மற்றும் மங்களகரமான என்று பொருள். அதிர்ஷ்டம் பெற்றவர். உங்கள் வீட்டின் அதிர்ஷ்டம் உங்கள் மகள் என்றால் அவர்களுக்கு இந்தப் பெயர் பொருத்தமானது. பிரபலமான என்பதையும் இந்தப்பெயர் குறிக்கிறது.

ப்ரிஷா

ப்ரிஷா என்றால் அன்பான, நேசிக்கக்கூடிய என்று பொருள். நேசம் நிறைந்தவர் என்பதை குறிக்கிறது.

தனிஷா

தனிஷா என்றால் ஆசை மற்றும் இலக்குகளைக் கொண்டவர் என்று பொருள். உங்கள் பெண் குழந்தைகள் லட்சியவாதிகளாக வேண்டுமெனில் அவர்களுக்கு இந்தப் பெயரை வைக்கலாம். அது அவர்களின் வாழ்வை வளமாக்கும்.

அனிகா

அனிகா என்றால் இனிமையான, கருணை நிறைந்த, புத்திசாலியான என்ற அர்த்தங்களை இந்தப்பெயர் தருகிறது. இது அனிகா என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவான பெயர். போராளி, பயமற்றவர், முகம், ராணுவம் என்பதை குறிக்கிறது. துர்கா தேவியின் எண்ணற்ற பெயர்களுள் ஒன்று. அற்புதமான, அழகான போன்ற பல அர்த்தங்களைத்தரும் பெயர். உங்கள் பெண் குழந்தைக்கு இந்தப்பெயரை சூட்டினால் அவர்கள் வாழ்வு வளமாகும்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா என்றால், செல்வம், செல்வச்செழிப்பு என்று பொருள். ஜஸ் என்றால் செல்வம், வர்யா என்றால் செழிப்பு ஐஸ்வர்யா என்றால் செல்வச்செழிப்பு என்று பொருள். இதுவும் சமஸ்கிருதப்பெயர். இந்த பெயர் வைக்கும் குழந்தைகள் வாழ்வில் செல்வச் செழிப்பு மட்டுமல்ல, பிரபலமும் ஆவார்கள்.

ரியா

ரியா என்றால் பாடகர், இனிமையான இசை என்று பொருள். இது ரிஷி என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து தோன்றிய பெயர். இதற்கு அழகான, கருணை நிறைந்த, செல்வம் நிறைந்த, பாடிக்கொண்டே ஆடும் என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது. லட்சுமி தேவியின் பெயர்.

லாவண்யா

லாவண்யா என்றால் அழகு மற்றும் கருணை நிறைந்தவர் என்று பொருள். இந்தப்பெயர் ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும் என்றாலும், இந்திய தோற்றத்தைக் கொண்ட இந்தப்பெயர் பெண் குழந்தைகளுக்கு பரவலாக வைக்கப்படுகிறது. அழகான, நேர்த்தியான என்பதை குறிக்கிறது. கருணை நிறைந்த பெண் குழந்தைகளுக்கு இந்தப்பெயர் வைக்கப்படுகிறது. வாழ்வில் நடக்கும் சிறப்பான விஷயங்களுக்கு கிடைக்கும் பாராட்டு என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. சுதந்திரமானவர், வலுவான நபர் என்பதையும் இந்தப்பெயர் சுட்டிக்காட்டுகிறது.

சான்வி

சான்வி என்பது லட்சுமி தேவியின் பெயர். உங்கள் பெண் குழந்தைக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைத்து, அவர் தான் தேர்ந்தெடுக்கும் துறையில் சிறந்து விளங்கவேண்டுமெனில் அவருக்கு இந்தப்பெயர் பொருத்தமானதாக இருக்கும்.

நவ்யா

புதிய மற்றும் இளமையான என்ற பொருள். பாராட்டத்தக்க என்ற அர்த்தத்தையும் தரும் இந்தப்பெயரும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தப்பெயரும் ஆண், பெண் இருவருக்குமே வைக்கலாம் என்றாலும், இது பெண் குழந்தைகளுக்கு பெரும்பாலும் வைக்கப்படுகிறது. இளமை, புதியது, புதிய துவக்கம், அன்றலர்ந்த, பாராட்டதகுந்த, மதிக்கத்தக்க, ரசிக்கத்தக்க என்ற எண்ணற்ற அர்த்தங்களைத்தரும் பெயர்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.