புதினாவையும், கத்தரிக்காயையும் வைத்து ஒரு வித்யாசமான லன்ச் பாக்ஸ் ரெசிபி இதோ! சூப்பர் சுவையில் அசத்தும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  புதினாவையும், கத்தரிக்காயையும் வைத்து ஒரு வித்யாசமான லன்ச் பாக்ஸ் ரெசிபி இதோ! சூப்பர் சுவையில் அசத்தும்!

புதினாவையும், கத்தரிக்காயையும் வைத்து ஒரு வித்யாசமான லன்ச் பாக்ஸ் ரெசிபி இதோ! சூப்பர் சுவையில் அசத்தும்!

Priyadarshini R HT Tamil
Nov 06, 2024 05:50 AM IST

புதினாவையும், கத்தரிக்காயையும் வைத்து ஒரு வித்யாசமான லன்ச் பாக்ஸ் செய்ய முடியும். அதற்கான ரெசிபி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதினாவையும், கத்தரிக்காயையும் வைத்து ஒரு வித்யாசமான லன்ச் பாக்ஸ் ரெசிபி இதோ! சூப்பர் சுவையில் அசத்தும்!
புதினாவையும், கத்தரிக்காயையும் வைத்து ஒரு வித்யாசமான லன்ச் பாக்ஸ் ரெசிபி இதோ! சூப்பர் சுவையில் அசத்தும்!

தேவையான பொருட்கள்

வடித்த சாதம் – 2 கப்

பச்சை கத்தரிக்காய் – 8 (நீளவாக்கில் நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (நீளவாக்கில் நறுக்கியது)

புளி கரைசல் – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

புதினா – அரைக்கட்டு

மல்லித்தழை – அரைக்கட்டு

பச்சை மிளகாய் – 4

பூண்டு – 6 பல்

செய்முறை

தேங்காய்த்துருவல், புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாய், பூண்டு என அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் மற்றும் நெய் நேர்த்து நன்றாக சூடானவுடன் அதில், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவேண்டும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். சேர்க்கப்படும் காய்கறிகள் அனைத்தும் நன்றாக சுருண்டு வரவேண்டும். உப்புத்தூள், மஞ்சள் தூள் மற்றும் அரைத்த விழுது என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

பின்னர் பச்சை வாசம் போனவுடன், புளிக்கரைசலை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். கொதித்தவுடன் இறக்கி, உதிரியாக வடித்த சாதத்தில் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். சூப்பர் சுவையான கத்தரிக்காய், புதினா, மல்லி சாதம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு ரோஸ்ட் போதும்.

இந்த சாதத்தை உங்கள் குழந்தைகளின் லன்ச் பாக்ஸில் வைத்து விட்டீர்கள் என்றால், அவர்கள் கட்டாயம் முழுவதும் காலி செய்து விடுவார்கள். லன்ச் பாக்ஸை காலி செய்யாமல் வரும் குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வு ஆகும். மேலும் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுமே விரும்பி சாப்பிடுவார்கள்.

ஒருமுறை ருசித்தால், நீங்களே மீண்டும், மீண்டும், செய்து சாப்பிடுவீர்கள். அனைவரையும் சாப்பிடத் தூண்டும் அத்தனை சுவை நிறைந்ததாக இந்த சாதம் இருக்கும். வெரைட்டி ரைஸ் பிரியர்கள் வெளுத்து வாங்குவார்கள். அப்பளம், ஊறுகாய், ரைத்தா கூட போதுமானதுதான்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை ஹெச்டி. தமிழ் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.