தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Sesame-urad Podi One Pod Is Enough Both Breakfast And Lunch Can Be Amazing

Sesame-Urad Podi : ஒரே பொடி போதும்! ப்ரேக் பாஸ்ட், லன்ச் இரண்டும் செஞ்சு அசத்திடலாம்!

Priyadarshini R HT Tamil
Feb 06, 2024 10:46 AM IST

Sesame-Urad Podi : ஒரே பொடி போதும்! ப்ரேக் பாஸ்ட், லன்ச் இரண்டும் செஞ்சு அசத்திடலாம்!

Sesame-Urad Podi : ஒரே பொடி போதும்! ப்ரேக் பாஸ்ட், லன்ச் இரண்டும் செஞ்சு அசத்திடலாம்!
Sesame-Urad Podi : ஒரே பொடி போதும்! ப்ரேக் பாஸ்ட், லன்ச் இரண்டும் செஞ்சு அசத்திடலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

(கருப்பு எள் 100 கிராம்; வெள்ளை எள் 100 கிராம்)

உளுந்து – 150 கிராம்

(இதை நன்றாக அலசி காய வைக்க வேண்டும்)

கறிவேப்பிலை – 2 கைப்பிடி

வர மிளகாய் – 10

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் – 2 கட்டி

கல் உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயை சூடாக்கி, அதில் கருப்பு எள், வெள்ளை எள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து உளுந்தை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், நன்றாக அலசி காய வைத்த கறிவேப்பிலையை பொரிய வறுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்த பின் வர மிளகாயை சேர்த்து நல்ல பலூன் போல் உப்பு வரும்வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே கடாயில் உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்த்துவிட்டு, அடுப்பை அணைத்துவிடவேண்டும். கடாய் சூட்டிலே உப்பும், பெருங்காயமும் பொரிந்து வந்துவிடும்.

தனித்தனியாக வறுத்து எடுத்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஆறவிட்டு, காய்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக ஒரு ஸ்பூன் பொடித்த வெல்லம் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். வெல்லம் முற்றிலும் உங்களுக்கு தேவையெனில் மட்டும் சேர்க்கலாம்.

சுவையான எள்ளு, உளுந்து பொடி தயார்.

இதை காலையில் இட்லி, தோசைக்கு ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து பரிமாற சுவை அள்ளும்.

மதிய உணவுக்கு வடித்த சாததத்தில் கொஞ்சம் எள்ளுப்பொடியை சேர்த்து, ஒரு தாளிப்பு கரண்டியில் நல்லெண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு என அனைத்தும் தலா ஒரு அரை ஸ்பூன் சேர்த்து அனைத்தும் பொரிந்தவுடன் அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை, 2 காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்து தாளித்து, சாதத்தில் கொட்டி கிளறினால், சுவையான எள்ளுப்பொடி சாதம் ரெடி.

இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம், ஊறுகாய் கூட போதுமானது. ஒரு அவசரமான நாளில், இதுபோல் சிம்பிளாக ப்ரேக் பாஸ்ட் மற்றும் லன்ச் செய்துவிட்டு வேலையை தொடரலாம்.

எள்ளின் நன்மைகள்

நார்ச்சத்துக்கள் நிறைந்தது. 30 கிராம் எள் 3.5 கிராம் நார்ச்சத்தை கொடுக்கிறது. இது 12 சதவீத தினசரி தேவையை பூர்த்தி செய்கிறது. தினமும் எள் சாப்பிடுவது உங்கள் நார்ச்சத்து எடுத்துக்கொள்ளும் அளவை அதிகரிக்கிறது. நார்ச்சத்து உங்கள் உடலின் செரிமானத்துக்கு உதவுகிறது.

கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசிரைட்களை குறைக்கிறது. தாவர புரதத்தின் ஊட்டச்சத்து கூடமாக எள் உள்ளது. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. வீக்கத்துக்கு எதிராக போராடி, அதை குறைக்கிறது. வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்தது. 

ரத்த செல்கள் உற்பத்திக்கு உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உதவுகிறது. ஆர்த்ரடிஸ் மூட்டு வலியை குணப்படுத்துகிறது. 

தைராய்ட் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உங்கள் உடலில் தைராய்ட் ஹார்மோன் சுரக்க இதில் உள்ள செலினியம் உதவுகிறது. பெண்களுக்கு மெனோபாஸ் நேரத்தில் உதவுகிறது

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்