தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tips: பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா! - உங்களுக்கே அதிசயமா இருக்கும்..

Health Tips: பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா! - உங்களுக்கே அதிசயமா இருக்கும்..

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 31, 2023 11:27 AM IST

காலை எழுந்தவுடன் பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்
தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறும் சிலர். முதலில் காலை எழுந்தவுடன் ஒருமுறை பல் துலக்க வேண்டும் அடுத்து படுக்கை அறைக்குச் செல்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டும் என இரு வேலைகள் பல் துலக்கினால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பலருக்கும் படுக்கையை விட்டு எழுந்த உடனே காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. அது ஆரோக்கியத்தை மட்டுமின்றி உடல் நலத்தையும் பாதிக்கும். ஆனால் பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் என சமீபத்திய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

காலை எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் பல நன்மைகள் உண்டாகும் எனக் கூறப்படுகிறது. அப்படி என்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

நன்மைகள்

காலை எழுந்தவுடன் நமது வயிறு வெறும் வயிறாக இருக்கும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிகச்சிறந்த பழக்கம் எனக் கூறப்படுகிறது. பல் துலக்குவதற்கு முன்பு உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதற்குத் தண்ணீர் குடித்தால் அது மிகவும் உதவியாக இருக்கும் இடம் மருத்துவர்கள் கூறுகின்றேன்.

பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் உடலில் ஜீரண சக்தி அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல பல்வேறு வகையான நோய்களும் விளக்கும் எனக் கூறப்படுகிறது.

பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சரும நோய் உள்ளிட்டவை ஏற்படாது எனக் கூறப்படுகிறது.

அதேபோல பளபளப்பான சருமம் பெறவும் இது மிகவும் உதவியாக இருக்கும் எனக் குறிப்பிடுகிறது. பல் துலக்காமல் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடித்தால் மலச்சிக்கல் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் நமது வாழ் பகுதியில் குவியும் பாக்டீரியாக்களை இது தடுக்கும் எனவும், பல் சொத்தை ஏற்படுவதைத் தடுக்கும் எனவும் கூறுகின்றனர்.

பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் கொடுத்தால் வாயில் ஏற்படக்கூடிய துர்நாற்றத்தை போக்கலாம். முக்கியமாக உமிழ்நீர் இல்லாத நேரத்தில் வாய் வறண்டு விடும். அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் எனவே காலையிலிருந்து பல் துலக்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரைக் குடித்தால் அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம்.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

https://twitter.com/httamilnews

 

https://www.facebook.com/HTTamilNews

 

https://www.youtube.com/@httamil

 

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்