Drumstick Tree Leaves: ஆண்மை சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த சூப்பை மட்டும் மிஸ் பண்ணீடாதீங்க
முருங்கை கீரை சூப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் சரியாகும். ஆனாலும் தேவைப்படும் பட்சத்தில் உரிய மருத்துவரின் ஆலோசனையும் பெறுவது நல்லது.
தினமும் முருங்கைக்கீரை சூப்பை குடித்து வருவதால் உடலில் ரத்தசோகை ஏற்படாது. இதனால் உடலில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க தினமும் முருங்கைக்கீரை சூப் எடுத்துக் கொள்ளலாம். மேலும் உடலில் ரத்த சோகை உள்ளவர்கள் முருங்கை கீரை சூப் உற்சாகத்தை ஏற்படுத்த உதவும்.
அதே சமயம் இன்றைய இளைஞர்களிடையே அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அந்த நேரங்களில் முருங்கைப்பூவை கஷாயம் வைத்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும்.
அதேபோல் தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லாமல் சிலர் உள்ளனர். இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும். முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து அதே ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்க வாய்ப்புள்ளது.
முருங்கைப்பூக்களுடன் பால், பாதாம் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு விந்து முந்துதல் பிரச்னை குறையும்.
அதேபோல் முருங்கைக்கீரை சூப் பெண்கள் தொடர்ந்து 20 அல்லது 25 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் வித்தியாசத்தை உணர முடியும். அந்த அளவுக்கு இந்த முருங்கை கீரை சூப் சத்து மிகுந்தது.
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. ஆஸ்துமா, மார்புசளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். இதுபோன்ற முருங்கை கீரை சூப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் சரியாகும். ஆனாலும் தேவைப்படும் பட்சத்தில் உரிய மருத்துவரின் ஆலோசனையும் பெறுவது நல்லது.
தேவையான பொருட்கள்:
1.முருங்கைக் கீரை - 3 கொத்து
2.சீரகம் - 2¼ ஸ்பூன்
3.மிளகு - 2 ஸ்பூன்
4.உப்பு - தேவையான அளவு
5.கறிவேப்பிலை - 2 கீற்று
6. தண்ணீர் - தேவையான அளவு
7.சின்ன வெங்காயம் ஒரு கைபிடி
8. தக்காளி 1
9. பூண்டு 4 பல்
10. நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் முருங்கைக் கீரை மற்றும் கறிவேப்பிலையை நன்றாக அலசி உருவிக் கொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகத்தை, பூண்டு தக்காளி, சின்ன வெங்காயம், ஆகியவந்றை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.
குக்கரில் முருங்கைக் கீரை,ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். மிதமான தீயில் வைத்து குக்கரில் ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கி விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து ஒரு சேர நன்கு கலந்து விட்டு தேவையான உப்பு சேர்ந்து பரிமாறலாம் .
இதுபோன்ற முருங்கை கீரை சூப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் சரியாகும். ஆனாலும் தேவைப்படும் பட்சத்தில் உரிய மருத்துவரின் ஆலோசனையும் பெறுவது நல்லது. அப்புறம் என்ன முடிந்த வரை முருங்கை கீரை சூப்பை வாய்ப்புள்ள போது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.