தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Drumstick Leaves Poriyal Increases Virility Eliminates Infertility Spinach Fries

Drumstick Leaves Poriyal : ஆண்மையை அதிகரிக்கும்! குழந்தையின்மையை போக்கும்! முருங்கைக்கீரை பொரியல்!

Priyadarshini R HT Tamil
Mar 13, 2024 10:28 AM IST

Drumstick Leaves Poriyal : வாரத்தில் ஒருநாள் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நலக்குறைபாடுகள் தீரும். முக்கியமாக வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. பொரியல், கூட்டு மட்டுமல்லாமல் சூப் செய்தும் சாப்பிடலாம்.

Drumstick Leaves Poriyal : ஆண்மையை அதிகரிக்கும்! குழந்தையின்மையை போக்கும்! முருங்கைக்கீரை பொரியல்!
Drumstick Leaves Poriyal : ஆண்மையை அதிகரிக்கும்! குழந்தையின்மையை போக்கும்! முருங்கைக்கீரை பொரியல்! (Subbus kitchen)

ட்ரெண்டிங் செய்திகள்

வேகவைத்த துவரம் பருப்பு – கால் கப்

தேங்காய்த்துருவல் – அரை கப்

மிளகாய் வற்றல் – 2

சீரகம் – அரை ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 5

பூண்டு பற்கள் – 3

மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

முருங்கைக்கீரை இலைகளை தண்டுகள் இல்லாமல் உருவி தண்ணீரில் கழுவிக் கொள்ளவேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்த்துருவல், மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சீரகம் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

கனமான கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின் முருங்கைகீரை இலைகளை சேர்த்து கைவிடாமல் வதக்கவேண்டும்.

கீரை நன்றாக வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் தெளித்து மிதமான சூட்டில் வேகவிடவேண்டும்.

கீரை வெந்ததும் மஞ்சள்தூள், உப்பு, வேகவைத்த துவரம்பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கலந்து பிரட்டி விடவேண்டும்.

சீரகத்தின் பச்சை வாசனை போனதும் கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சமமாக கிளறி அடுப்பை அணைக்கவும். ஆரோக்கியமான முருங்கைக்கீரை பொரியல் தயார்.

நன்றி - விருந்தோம்பல்.

முருங்கைக்கீரையில் உள்ள நன்மைகள்

முருங்கைக் கீரை மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு கீரை. இதில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக இரும்புச்சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ளன.

முருங்கையின் கீரை மட்டுமல்லாமல் அதன் பூவையும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல எலும்புகளும், பற்களும் வலிமை பெற உதவும். கண் கோளாறுகள், பித்தம் தொடர்பான நோய்களில் இருந்து நிவாரணம் பெற்றுத் தரக்கூடியது முருங்கைக்கீரை. அதேபோல் முருங்கையின் ஈர்க்கும்கூட மருத்துவ குணம் நிறைந்தது.

வாரத்தில் ஒருநாள் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நலக்குறைபாடுகள் தீரும். முக்கியமாக வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. பொரியல், கூட்டு மட்டுமல்லாமல் சூப் செய்தும் சாப்பிடலாம்.

இதுபோன்று அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தால் சாதாரண தலைவலியில் தொடங்கி இருமல், சளித்தொல்லைகளில் இருந்து விடுபடலாம். காரணம் இந்தக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. உடல் வலி ஏற்பட்டால் முருங்கைக்கீரையில் ரசம் அல்லது சூப் வைத்துக் குடித்து வந்தாலே நிவாரணம் கிடைக்கும்.

குழந்தை பெற்ற தாய்மாருக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. முக்கியமாக தாய்ப்பால் ஊறுவதற்கு முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தாலே போதும். குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்க முருங்கைக்கீரை சமைத்துச் சாப்பிட வேண்டியது அவசியம்.

மேலும் முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் தாய்மாருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் நன்மை கிடைக்கும். அதாவது வாயுவை உண்டாக்கக்கூடிய உணவுகளை தாய்மார் சாப்பிட்டால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

முக்கியமாக குழந்தைகளின் வயிறு கல் போன்று வீங்கி உப்பிக்கொண்டு மிகுந்த தொல்லையை கொடுக்கும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தும். இது போன்ற நேரங்களில் முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிடுவது பலன் தரும்.

குழந்தையின்மை, ஆண்மைக்குறை பிரச்சினை உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். முருங்கைக்கீரை மட்டுமல்லாமல், முருங்கைப்பூவையும் சமைத்துச் சாப்பிடலாம். முருங்கைப்பூவை பாலில் போட்டு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு போதுமான பலம் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel