Cooker Veg Biriyani : ஈஸியான குக்கர் வெஜ் பிரியாணி! சட்டுன்னு செஞ்சு சாப்பிடுங்க!-cooker veg biriyani easy cooker veg biriyani eat a quick bite - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cooker Veg Biriyani : ஈஸியான குக்கர் வெஜ் பிரியாணி! சட்டுன்னு செஞ்சு சாப்பிடுங்க!

Cooker Veg Biriyani : ஈஸியான குக்கர் வெஜ் பிரியாணி! சட்டுன்னு செஞ்சு சாப்பிடுங்க!

Priyadarshini R HT Tamil
Mar 02, 2024 01:39 PM IST

Cooker Veg Biriyani : ஈஸியான குக்கர் வெஜ் பிரியாணி! சட்டுன்னு செஞ்சு சாப்பிடுங்க!

Cooker Veg Biriyani : ஈஸியான குக்கர் வெஜ் பிரியாணி! சட்டுன்னு செஞ்சு சாப்பிடுங்க!
Cooker Veg Biriyani : ஈஸியான குக்கர் வெஜ் பிரியாணி! சட்டுன்னு செஞ்சு சாப்பிடுங்க!

தண்ணீர் – ஒன்னே முக்காள் கப்

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை டேபிள் ஸ்பூன்

கேரட் – கால் கப் (அரை வட்டங்களாக நறுக்கியது)

பீன்ஸ் – கால் கப் (நீளமாக நறுக்கியது)

உருளைக்கிழங்கு – 1 சிறியது

பச்சை பட்டாணி – கால் கப்

சோயா உருண்டைகள் – 10

புதினா – ஒரு கைப்பிடி

கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி

மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்

மல்லித்தூள் – அரை ஸ்பூன்

பிரியாணி மசாலா தூள் – ஒரு ஸ்பூன்

கெட்டியான தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – அரை டேபிள் ஸ்பூன்

பட்டை – 3 சிறிய துண்டு

பிரிஞ்சி இலை – 2

ஏலக்காய் – 3

நட்சத்திர சோம்பு – 1

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

சீரக சம்பா அரிசியை மூன்று முறை நன்றாக கழுவி 20 நிமிடங்கள் அரை கப் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவேண்டும்.

சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டு நன்றாக பிழிந்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, நட்சத்திர சோம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவேண்டும்.

பின் கீறிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து தொடர்ந்து வதக்க வேண்டும்.

இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசம் போகும் வரை வதங்கியதும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து வதக்கவேண்டும். அத்துடன், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.

தக்காளி நன்றாக குழைத்து வதங்கியதும் மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து பிரட்டி நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி மற்றும் பிழிந்த சோயா உருண்டைகளை சேர்த்து வதக்கவேண்டும்.

காய்கறிகள் சிறிது வதங்கியதும், கெட்டித்தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும். இப்போது ஊறவைத்த சீரக சம்பா அரிசியை தண்ணீரை முழுவதும் வடிகட்டி காய்கறிகளோடு சேர்ந்து கிளறவேண்டும்.

அவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து வதங்கியதும், ஒன்னே முக்கால் கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.

அதில் பிரியாணி மசாலா தூள் சேர்த்து கலந்து கடைசியாக எலுமிச்சை சாறை சேர்த்து குக்கரை மூடிவைத்து மிகக் குறைவான சூட்டில் சரியாக 12 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவேண்டும்.

பத்து நிமிடங்களுக்கு பின் குக்கரை திறந்து ஓரங்களிலிருந்து மெதுவாக கிளறி பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும்.

ஒருவேளை 12 நிமிடத்திற்குள் குக்கரில் விசில் வந்துவிட்டால் ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவேண்டும். விருப்பப்பட்டால் கடைசியில் சிறிது நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துக் கொள்ளலாம்.

காய்கறிகள் நறுக்குவது, இஞ்சி பூண்டு விழுது அரைப்பது, அரிசி ஊறவைப்பது போன்ற எல்லா வேலைகளையும் தயார் செய்துவிட்டு சமைக்க ஆரம்பித்தால் சரியாக 20 நிமிடத்தில் இந்த வெஜ் பிரியாணி தயார் செய்திடலாம்.

பிரியாணிக்கு மஞ்சள்தூள் சேர்க்கக்கூடாது. பிரியாணிக்கு மிக முக்கியமானது இஞ்சி-பூண்டு விழுது. பூண்டு பற்களின் தோலை முழுவதும் உரிக்காமல் சேர்த்தால் பிரியாணி மணமாக இருக்கும்.

திருமண விருந்துகளில் செய்யும் பிரியாணியில் இஞ்சி மற்றும் பூண்டை தனித்தனியாக அரைத்து சேர்ப்பார்கள். அப்படி செய்யும்போது பிரியாணி எவ்வளவு நேரமானாலும் மணமாக இருக்கும்.

நன்றி – விருந்தோம்பல்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.