தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Hemoglobin Level Increase Hemoglobin Level In A Week This One Juice Is Enough

Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை ஒரு வாரத்தில் அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு சாறு போதும்!

Priyadarshini R HT Tamil
Mar 24, 2024 05:00 PM IST

எனவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து உங்கள் உடலுக்கு தேவையான நன்மைகளை பெறுங்கள். முருங்கைகீரை மட்டுமின்றி முருங்கைக்காய்கள், விதைகள் மற்றும் முருங்கை கீரையின் தண்டு என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை ஒரு வாரத்தில் அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு சாறு போதும்!
Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை ஒரு வாரத்தில் அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு சாறு போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

தேன் – தேவையான அளவு

செய்முறை

முருங்கைக்கீரையை ஆய்ந்து நன்றாக அலசி மிக்ஸியில் அரைத்து அல்லது உரலில் சேர்த்து இடித்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

எந்தளவு சாறு உள்ளதோ அதே அளவு தேன் சேர்த்து குழைத்து அதை ஒரு வாரம் பருகினால் போதும் உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.

இதை நீங்கள் காலை வெறும் வயிற்றில் பருகும்போது உங்களுக்கு அதிக பலன்களைக் கொடுக்கும். இதை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். பெரியவர்கள் 20 மில்லிலிட்டர் அளவும் சிறியவர்கள் 10 மில்லிலிட்டர் அளவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முருங்கைக்கீரையில் உள்ள நன்மைகள்

முருங்கைக்கீரையை அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கும் ஒரு கீரை. இதில் இரும்புச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இதை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தால் அது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. அது மட்டுமின்றி பல்வேறு சத்துக்களும் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் பி, பி2, சி ஆகிய சத்துகளும் நிறைந்துள்ளன.

முருங்கையின் கீரை மட்டுமின்றி அதன் பூவையும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதனால் உடல் பலம் அதிகரிக்கும். எலும்புகளும், பற்களும் வலுப்பெற உதவுகிறது. கண் கோளாறுகள், பித்தம் தொடர்பான நோய்களில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. முருங்கையின் தண்டும் மருத்துவ குணம் நிறைந்தது.

வாரத்தில் ஒருநாள் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. பொரியல், கூட்டு மட்டுமல்லாமல் சூப் செய்தும் சாப்பிடலாம்.

இருமல், சளித்தொல்லைகளில் இருந்து விடுபடவும் முருங்கைக்கீரை உதவுகிறது. இந்தக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. உடல் வலிக்கு முருங்கைக்கீரையில் ரசம் அல்லது சூப் வைத்துக் குடித்த்தால் நல்லது.

குழந்தை பெற்றவர்களுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. முக்கியமாக தாய்ப்பால் ஊறுவதற்கு முருங்கைக்கீரை உதவுகிறது. எனவே பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டு வந்தாலே, குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கும்.

அது குழந்தைகளுக்கும் நன்மை கொடுக்கிறது. முக்கியமாக குழந்தைகளின் வயிறு கல் போன்று வீங்கி உப்பிக்கொண்டு தொல்லை கொடுத்தால், மூச்சுத் திணறலையும் ஏற்படும். இதுபோன்ற நேரங்களில் முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிவேண்டும்.

குழந்தையின்மை, ஆண்மைக்குறை பிரச்னை உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சாப்பிடுவதால் நன்மை கிடைக்கும். முருங்கைக்கீரை மட்டுமல்லாமல், முருங்கைப்பூவையும் சமைத்துச் சாப்பிடலாம். முருங்கைப்பூவை பாலில் போட்டு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு போதுமான பலம் கிடைக்கும்.

எனவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து உங்கள் உடலுக்கு தேவையான நன்மைகளை பெறுங்கள். முருங்கைகீரை மட்டுமின்றி முருங்கைக்காய்கள், விதைகள் மற்றும் முருங்கை கீரையின் தண்டு என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். 

இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள். இவற்றால் தீர்வுகள் கிடைக்கும் என்று நாங்கள் உறுதியாக கூறவில்லை. ஆனால் உங்களுக்கு உகந்ததை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்