Blurred Vision : கண் பார்வை மங்கலாகிவிட்டதா? அனீமியா, ஃபேட்டி லிவரால் அவதியா? அப்போ இந்த ஜூஸ் கட்டாயம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Blurred Vision : கண் பார்வை மங்கலாகிவிட்டதா? அனீமியா, ஃபேட்டி லிவரால் அவதியா? அப்போ இந்த ஜூஸ் கட்டாயம்!

Blurred Vision : கண் பார்வை மங்கலாகிவிட்டதா? அனீமியா, ஃபேட்டி லிவரால் அவதியா? அப்போ இந்த ஜூஸ் கட்டாயம்!

Priyadarshini R HT Tamil
Jul 02, 2024 07:00 AM IST

Blurred Vision : கண் பார்வை மங்கலாகிவிட்டதா? அனீமியா, ஃபேட்டி லிவரால் அவதியா? அப்போ இந்த ஜூஸ் கட்டாயம் தேவை. நாம் அதிகம் எடுத்துக்கொள்ளாத இந்தப்பழம் குறித்து கேள்விப்பட்டூள்ளீர்களா?

Blurred Vision : கண் பார்வை மங்கலாகிவிட்டதா? அனீமியா, ஃபேட்டி லிவரால் அவதியா? அப்போ இந்த ஜூஸ் கட்டாயம்!
Blurred Vision : கண் பார்வை மங்கலாகிவிட்டதா? அனீமியா, ஃபேட்டி லிவரால் அவதியா? அப்போ இந்த ஜூஸ் கட்டாயம்!

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

கல்லீரலுக்கு பாதுகாப்பு தரும், மங்கலான பார்வையை குணமாக்கும், அனீமியாவை அடித்துவிரட்டும் வழிகள் என்னவென்றுதான் இன்று பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்

கிரீன் ஆப்பிள் – 1

கேரட் – 1

பீட்ரூட் – 1 (சிறியது)

எலுமிச்சை பழம் – 1

தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

கீரின் ஆப்பிள், கேரட், பீட்ரூட் என அனைத்தையும் நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். அதை வடிகட்டிக்கொள்ளலாம். வடிகட்டாமல் ஸ்மூத்தியாகவும் வைத்துக்கொள்ளலாம்.

அதில் ஒரு எலுமிச்சை சாறையும், தேனையும் கலந்து அப்படியே பருகவேண்டும். இதை வாரத்தில் மூன்று நாள் கட்டாயம் பருகவேண்டும். தினமும் வேண்டுமானாலும் பருகலாம்.

இது உங்கள் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. தலைமுடி மற்றும் சருமத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் மங்கலான கண் பார்வை, ஃபேட்டி லிவர் பிரச்னை மற்றும் அனீமியாவை அடித்து விரட்டுகிறது.

வழக்கமாக ஏபிசி சாறில் சாதாரண ஆப்பிள் இருக்கும். இதில் அதற்கு பதில் கிரீன் ஆப்பிள் சேர்க்கப்படுகிறது. இது மூளையில் உள்ள செல்களை புதுப்பிக்க உதவுகிறது. 

பல வகை புற்றுநோய்களையும் துரத்துகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. ஆஸ்துமாவை அடித்து விரட்டி உடல் எடையை முறையாக பராமரிக்க உதவுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரித்து கண்களில் ஏற்படும் பிரச்னைகளைப் போக்குகிறது. மேலும் உடலில் தங்கும் கழிவுகளை நீக்க கல்லீரலுக்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள கழிவுகள் நீங்குகிறது. வலி மற்றும் வீக்கத்தைப்போக்குகிறது.

வயோதிகம், பக்கவாதம், தொற்று, ரெட்னாவில் ஏற்படும் பிரச்னைகள், கண்களுக்கு கொடுக்கப்படும் அதிக அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பார்வை மங்கலாகத் தெரிகிறது. 

அதை நாம் சரியாக கண்டுகொள்ளவில்லையென்றால் அது கண்களில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி, இறுதியில் கண் பார்வையே பறிபோகும் நிலைக்கு கொண்டு செல்லும்.

எனவே கண் பார்வை மங்கலால் அவதிப்படுபவர்கள் அதில் கட்டாயம் கவனம் செலுத்தவேண்டும். எனவே இதுபோன்ற இயற்கை தீர்வுகளையும் அவர்கள் முயற்சிக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரையும் அவசியம். இனிய வாழ்க்கை வாழ்வதற்கு இதுபோன்ற வழிகளையும் பின்பற்றுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.