Ash Gourd Juice Benefits : குடல், சருமம், இதயம், நரம்பு என உடலின் அத்தனைக்கும் நன்மையளிக்கும்! இதை மட்டும் பருகுங்கள்!
Ash Gourd Juice Benefits : குடல், சருமம், இதயம், நரம்பு என உடலின் அத்தனை உறுப்புகளுக்கும் நன்மையளிக்கும் அந்த ஒரு சாறு எது என்று தெரியுமா?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணிக்காய் சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
பூசணிக்காய் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த காய் ஆகும். இதன் எண்ணற்ற நன்மைகளுக்காக இது காய்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. காய்களிலே உடலுக்கு அதிகளவு நன்மைகளைத் தருவது பூசணிக்காய்தான். காலையில் வெறும் வயிற்றில் பூசணிக்காயை சாறாக்கி பருகவேண்டும். இதனால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது
பூசணிக்காய் சாறு, உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. இந்த பூசணிக்காய் சாறை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் பருகினால், அது உங்களின் உடலின் கழிவுகளை சிறுநீர் வழியான வெளியேற்றிவிடுகிறது. இதனால் உங்கள் ஒட்டுமொத்த உடல் நலனும் சிறக்கச் செய்கிறது.
உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது
பூசணிக்காயில் உள்ள அதிகளவிலான தண்ணீர் உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்கை வழங்குகிறது. உங்கள் உடலில் போதிய அளவு நீர்ச்சத்துக்கள் இருப்பது, உங்கள் உடலின் இயக்கத்துக்கு காரணமாகிறது. இது உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.