Mor Kulambu : மோர் குழம்புக்கெல்லாம் ப்ரீ மிக்ஸி இருக்குமா? இதோ ரெசிபி! செஞ்சு வெச்சுட்டு நிம்மதியா இருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mor Kulambu : மோர் குழம்புக்கெல்லாம் ப்ரீ மிக்ஸி இருக்குமா? இதோ ரெசிபி! செஞ்சு வெச்சுட்டு நிம்மதியா இருங்க!

Mor Kulambu : மோர் குழம்புக்கெல்லாம் ப்ரீ மிக்ஸி இருக்குமா? இதோ ரெசிபி! செஞ்சு வெச்சுட்டு நிம்மதியா இருங்க!

Priyadarshini R HT Tamil
Jun 01, 2024 09:46 AM IST

Mor Kulambu : மோர் குழம்புக்கெல்லாம் ப்ரீ மிக்ஸி உள்ளது. இதோ ரெசிபி! செஞ்சு வெச்சுட்டு நிம்மதியா இருக்கலாம். வாரத்தில் ஒவ்வொரு நாளும் வித்யாசமான குழம்பு வைக்கலாம்.

Mor Kulambu : மோர் குழம்புக்கெல்லாம் ப்ரீ மிக்ஸி இருக்குமா? இதோ ரெசிபி! செஞ்சு வெச்சுட்டு நிம்மதியா இருங்க!
Mor Kulambu : மோர் குழம்புக்கெல்லாம் ப்ரீ மிக்ஸி இருக்குமா? இதோ ரெசிபி! செஞ்சு வெச்சுட்டு நிம்மதியா இருங்க!

துவரம் பருப்பு – 2 ஸ்பூன்

கடலை பருப்பு – 2 ஸ்பூன்

சீரகம் – 2 ஸ்பூன்

மிளகு – அரை ஸ்பூன்

பெருங்காய்த்தூள் – அரை ஸ்பூன்

அரிசி மாவு – ஒரு ஸ்பூன்

ட்ரை மசாலாப் பொடி அரைக்க தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் – 2

வர மிளகாய் – 4

தேங்காய் துருவல் – அரை கப்

இஞ்சி – ஒரு இன்ச்

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வெந்தயம் – கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் வரமல்லி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், மிளகு, பெருங்காயத்தூள், அரிசி மாவு என அனைத்தும் சேர்த்து டிரையாக வறுக்க வேண்டும்.

முதலில் பருப்புகளை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வறுத்த பின்னர், பொடி வகைகளை சேர்த்து வறுக்கவேண்டும். இவற்றை தனியாக ஆறவிடவேண்டும்.

அடுத்து பச்சை மிளகாய், வரமிளகாய், தேங்காய் துருவல், இஞ்சி சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். அடுத்து கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.

காய்ந்த மிக்ஸி ஜாரில் வறுத்த மசாலாப் பொருட்களுடன் வரமிளகாயை சேர்த்து அரைக்க வேண்டும். அடுத்து அதில் தேங்காய் கலவையை சேர்த்து அரைக்கவேண்டும்.

அரைத்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து, ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவேண்டும்.

கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை ட்ரையாக பொரியவிட்டு, அரைத்த பொடியுடன் சேர்க்கவேண்டும்.

பின்னர் அதில் மஞ்சள் தூள் சேர்க்கவேண்டும். அனைத்தையும் கலந்து ஒரு காற்று புகாத டப்பாவில் சேர்த்து அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்தப் பொடியைப் பயன்படுத்தி மோர் குழம்பு செய்வது எப்படி?

கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கவேண்டும்.

அடுத்து, அதில் அரைத்த மோர்குழம்பு பொடியை சேர்த்து நன்றாக வதக்கவேணடும். பின்னர் அதில் தயிரை அடித்து சேர்க்கவேண்டும்.

சூப்பர் சுவையில் அசத்தலான மோர் குழம்பு ஐந்தே நிமிடத்தில் தயார்.

இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிட சுவை அள்ளும்.

இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம் மட்டுமே கூட போதுமானது அல்லது ஏதேனும் பொரியல் அல்லது வறுவல் இருந்தாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதில் வெண்டைக்காய், பூசணிக்காய் ஆகியவற்றை வேகவைத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதை ஒரு மாதம் வரை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். சூப்பரான சுவையில் அசத்தலாக இருக்கும்.

மோர் குழம்பு

மோர் குழம்பு தமிழ்நாட்டில் செய்யப்படும் குழம்பு வகைகளுள் ஒன்றாகும். இதை காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். காய்கறிகள் இல்லாமலும் செய்யலாம். தென்னிந்தியா முழுவதிலும் பிரபலமான ஒன்றுதான். இதை நீங்கள் சாதம் மற்றும் டிஃபன் இரண்டுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

இது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அடிக்கடி செய்யப்டுகிறது. விருந்துகளில் முக்கிய இடம் பிடிப்பது. இதில் தயிர் சேர்ப்பதால் புளிப்பு, காரம் என கலவையான வித்யாசமான சுவையில் இருக்கும்.

இதில் சேர்க்கப்படும் தயிர் மற்றும் மசாலாக்கள் தான் இதற்கு வித்யாசமான சுவையைக் கொடுக்கிறது. இதை ப்ரீ மிக்ஸி பயன்படுத்தி செய்யாமல் நேரடியாக செய்வது வேறு ஒரு சுவையைத்தரும். மோர் குழம்பில் நிறைய வகைகள் உள்ளது. எளிமையாக செய்யக்கூடியது முதல் கடின முறை வரை உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.