அதிகாலையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு இந்தப்பெயரை சூட்டுங்கள் – அவர்கள் வாழ்வு வளம்பெறட்டும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அதிகாலையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு இந்தப்பெயரை சூட்டுங்கள் – அவர்கள் வாழ்வு வளம்பெறட்டும்!

அதிகாலையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு இந்தப்பெயரை சூட்டுங்கள் – அவர்கள் வாழ்வு வளம்பெறட்டும்!

Priyadarshini R HT Tamil
Nov 16, 2024 11:50 AM IST

அதிகாலையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு இந்தப்பெயரை சூட்டினீர்கள் என்றால் அவர்களின் வாழ்வு வளம்பெறும்.

அதிகாலையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு இந்தப்பெயரை சூட்டுங்கள் – அவர்கள் வாழ்வு வளம்பெறட்டும்!
அதிகாலையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு இந்தப்பெயரை சூட்டுங்கள் – அவர்கள் வாழ்வு வளம்பெறட்டும்!

ஆருஷ்

ஆருஷ் என்றால் சூரியனின் முதல் ஒளி என்று பெயர். ஆருஷ் என்பது நம்பிக்கை, இதம் மற்றும் நேர்மறை எண்ணம் ஆகியவற்றைக் குறிக்கும். சூரியனின் கதிர்கள் போல், இந்த உலகத்துக்கு வெளிச்சம் தருபவர் என்று பொருள். உங்கள் வாழ்வின் ஒளி என்ற அர்த்தமும் உண்டு.

அன்ஷீல்

அன்ஷீல் என்றால், பளபளப்பு, சூரியனின் ஒளி என்று பொருள். இது அன்பு, இதம் மற்றும் மற்றவர்களிடம் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் ஒளியை பரப்புவது என்று பொருள். இதமான சூரியனின் கதிர்களைப் போன்றவர் என்பதை குறிக்கிறது.

ரித்துல்

ரித்துல் என்றால் தூய்மை, நேர்மை, தெளிவு என்று பொருள். சூரியனின் ஒளி எவ்வாறு இருளை அகற்றுகிறதோ அதுபோல், உங்கள் வாழ்வின் இருளை அகற்றுபவர் என்று பொருள். உலகுக்கு உண்மை மற்றும் ஒளியைக் கொண்டுவருபவர் என்று பொருள்.

ஆதித்யா

ஆதித்யா என்றால் சக்தி, அறிவாற்றல் மற்றும் ஞானம் என்று பொருள். சூரியனின் வாழ்வு தரும் ஆற்றலை பிரதிபலிப்பவர் என்று பொருள். இந்தப் பெயர் பலம் பொருந்தியவர் மற்றும் மிளரும் குணம் கொண்டவர் என்பதைக் குறிக்கிறது. வாழ்வில் ஒளி கொண்டு வந்த நபர் என்பதை இந்தப்பெயர் குறிக்கிறது.

உதய்

சூரியன் உதயமாவது, புதிய துவக்கம், வளர்ச்சி மற்றும் வெற்றி ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. இது சிறப்பான ஒன்றைக் குறிக்கிறது. விடியலை வாழ்வில் சூரியன் கொண்டுவருவதைப்போன்றது என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

திவ்யான்ஷ்

திவ்யான்ஷ் என்றால் தெய்வீகமானவர் என்று பொருள். ஒளி மற்றும் வானில் உள்ள பொருட்களை பிரதிபலிப்பது மற்றும் தூய்மை என்று பொருள். காலையின் ஆற்றலில் பிறந்த ஆண் குழந்தைக்கு மிகவும் உகந்த பெயர் இது.

இஷான்

இஷான் என்றால் சிவனின் அங்கம் என்று பொருள். சிவனின் பெயர். சூரியனையும் குறிக்கும். வடகிழக்கு திசையின் பாதுகாவலர் என்று இந்தப்பெயருக்கு இன்னொரு பொருளும் உண்டு. இந்தப்பெயர் தெய்வீகம், ஞானம் மற்றும் தெய்வீக ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்கும். இது காலை சூரியனின் சக்திவாய்ந்த அமைதிப்படுத்தும் குணம் என்பதை குறிக்கும்.

விஹான்

விஹான் என்றால் விடியல் அல்லது அதிகாலை என்று பொருள். விஹான் என்பது புதிய துவக்கம், நேர்மறை எண்ணம் மற்றும் வாழ்க்கை பயணத்தின் புதிய ஆரம்பம் போன்ற பொருள்களை தரக்கூடியது. உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு இந்த அழகிய பெயர்களை சூட்டி, அவர்கள் வாழ்வு வளம்பெற வழிவகுத்துக்கொடுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.