பணம் கொட்டுது! பிரச்னை விலகுது! ரிஷபம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025
மாய சிந்தனையை உருவாக்கும் நிலையை ராகு பகவானும், ஞான சிந்தனையை உருவாக்கும் நிலையை கேது பகவானும் அளிக்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் இருக்கும் வீட்டின் உடைய அதிபதியின் பலன்களை தரும் தன்மைகளை பெற்று உள்ளன.

18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 19, 2025 01:29 PM62 ஆண்டுகளுக்கு பின் இன்று பாரிஜாத யோகம்.. எந்த 3 ராசிகளுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும் பாருங்க!
Apr 19, 2025 07:00 AMகுபேர ராசிகள்: 4 ராஜ யோகங்கள்.. 3 குபேரன் ராசிகள்.. அக்ஷய திருதியை நாளில் லட்சுமி தேவி பண மழை.. உங்க ராசி என்ன?
Apr 19, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : 19 ஏப்ரல் 2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 18, 2025 01:26 PM'வியாபாரத்தில் நஷ்டம், வாழ்க்கைத்துணையுடன் மோதலுக்கு வாய்ப்பு': ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 18, 2025 01:20 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பணமழை கொட்டும் ராகு.. அதிர்ஷ்டமான ராசிகள்.. கும்பத்தில் யோகம் பிறக்குது!
Apr 18, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியினரே.. ஏப்ரல் 18, 2025 ல் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
ரிஷபமும் ராகுவும்
ரிஷபம் ராசிக்கு வாழ்கை மாற்றி அமைக்கும் காலமாக ராகு கேது பெயர்ச்சி அமைய போகிறது. உங்கள் செயல்களுக்கு வெற்றிகள் உண்டாகும். பெரும் பதவிகள் மற்றும் பொறுப்புகளுக்கு வருவீர்கள். 11ஆம் இடத்தில் இருந்து வந்த ராகு 10ஆம் இடத்திற்கு வர உள்ளார். இதனால் எதிர்மறை எண்ணங்கள் மாறி நேர்மறை எண்ணம் உண்டாகும். மறைமுக வருமானம் பெருகும். வெளிநாடு மற்றும் வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். ராகு பகவான் சதயம் நட்சத்திரத்திற்கு வரும் போது யோகமும், திடீர் அதிஷ்டமும் உண்டாகும்.
வேலை சார்ந்த விவகாரங்களில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தடைப்பட்டு இருந்த பணவரவு கிடைக்கும். வேலை தேடும் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்திலும், சமூகத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு மற்றும் மரியாதை உண்டாகும். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். கடன் மற்றும் நோய் உள்ளிட்ட பிரச்னைகள் அகலும். தொழில் ஸ்தானமான 10ஆம் இடத்திற்கு ராகு பகவான் வருவது தொழிலில் அனுகூலங்களை சேர்க்கும். அரசியல்வாதிகளுக்கு பேச்சுத் திறமை கூடும். புதிய முதலீடுகளை செய்ய திட்டமிடுவீர்கள்.
ரிஷபமும் கேதுவும்
காதல் திருமணம் கைக்கூடும். உங்கள் காதலுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். தாயார் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். தாய் வழி சொந்தங்கள் மூலம் பிரச்னைகள் வரலாம். வீடு, வாகனங்களில் செலவுகள் கூடும். விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பயணங்களில் கவனம் தேவை. வாகன பழுதுகளால் தொந்தரவு ஏற்படலாம். சிலர் புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். இயந்திரம் சார்ந்த தொழிலில் உள்ளவர்களுக்கு இயந்திரங்கள் பழுது ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகள் உடன் இருந்த சிக்கல்கள் தீரும், அரசு மற்றும் அரசியல்வாதிகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உயர்க்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு சில தடைகள் ஏற்படலாம் என்பதால் கவனமாக படிப்பது முக்கியம். கேது பகவான் மகம் நட்சத்திரத்திற்கு வரும் போது வாழ்கையில் வெற்றிகள் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
