Exclusive : உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு தினமும் அரை மணி நேரம் இதை செய்யவேண்டும் - மருத்துவர் அறிவுறுத்துவது என்ன?
தினமும் அரை மணி நேரம் நாம் நடைப்பயிற்சி ஏன் செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தினமும் நீங்கள் நடப்பது உங்கள் மூட்டு வலிகளை மட்டும் குறைக்காது. உங்கள் உடலுக்கு எண்ணற்ற ஆற்றலையும் தருகிறது. உங்களை அமைதிப்படுத்துகிறது. உங்கள் உடல் மற்றும் மனஆரோக்கியத்தை அதிகரிக்கவேண்டுமெனில் நீங்கள் தினமும் அரை மணி நேரம் கட்டாயம் மிதமான வேகத்தில் நடக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். நீங்கள் உங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலை நோய்களில் இருந்து காக்கிறது. இது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, உங்கள் முழு உடல் ஆரோக்கியத்துக்கும் நீங்கள் எடுக்கும் முதல் படி. உங்கள் ஆரோக்கிய வாழ்வின் முதல் படியை நீங்கள் ஏன் எடுத்துவைக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு உடற்பயிற்சி கருவிகள் தேவையில்லை. நீங்கள் ஜிம்முக்குத்தான் செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. டாக்டர் சாரா எபி, விளையாட்டு மருத்துவ நிபுணர் கூறுவது என்ன? மேலும் அவர் நடைப்பயிற்சியின் எண்ணற்ற நன்மைகளையும் எடுத்துக்கூறுகிறார்.
நடைப்பயிற்சி உங்களுக்கு என்ன செய்கிறது?
வளர்ந்த நபர் வாரத்தில் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். அதற்கு நடை மிகவும் சிறந்தது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இது உங்களுக்கு இதய நோய் ஏற்படுத்தும் ஆபத்தைக் குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கிறது. மன நோய், மனஅழுத்தம் மற்றும் சில வகை புற்றுநோய்கள் ஏற்படாமல் காக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை முறையாகப் பராமரிக்கிறது. எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிணுது. உடல் எடை குறைக்கவும், நல்ல உறக்கத்துக்கும் உதவுகிறது. இதை ஆரோக்கிய நடைபயிற்சி சங்கம் வைத்துள்ள நர்ஸ் ஜீலி ஸ்கிமியட் கூறுகிறார்.
இதன் மற்ற நன்மைகள் என்ன தெரியுமா? இது மூட்டுகளில் குறைவாக அழுத்தத்தைப் போடுகிறது. உங்கள் இதயம் மற்றும் நுரையீரலை வலுப்படுத்தும் குறைவாக பாதிப்புக்களை ஏற்படுத்தும் உடற்பயிற்சியாகும். உங்களுக்கு இதய நோய் இருந்தாலும், இதயத்தில் அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டிருந்தாலும் கவலைவேண்டாம். உங்களுக்கு மெது நடைப்பயிற்சி எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது.
