சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு வித்தியாசமா ஸ்வீட் ரொட்டி செய்து கொடுங்க.. ருசி அட்டகாசமா இருக்கு..
குழந்தைகளுக்கான பிரத்யேக காலை உணவைச் செய்ய வேண்டுமா? இங்கே நாம் இனிப்பு ரொட்டி செய்முறையை கொடுத்துள்ளோம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

காலையில் சாப்பிடும் காலை உணவில் அதிக சத்துக்கள் இருக்க வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஆனால் நாம் செய்து கொடுக்கும் பல உணவுகளை குழந்தைகள் விரும்புவதில்லை. அதனால்தான் அவர்களுக்காக பிரத்யேகமாக சமைக்க வேண்டும். சில சமயம் அவர்களுக்கு இனிப்பு சாப்பிட ஆசையும் இருக்கும். இனிப்புகளை எப்படி ஊட்டச்சத்து நிறைந்ததாகமாற்றுவது என்று தாய்மார்கள் சிந்திக்க வேண்டும். இங்கே நாம் இனிப்பு ரொட்டி அல்லது இனிப்பு சப்பாத்தி செய்முறையை கொடுத்துள்ளோம். இந்த சப்பாத்தி சாப்பிட ஊறுகாய் தேவையில்லை. தனியாக ஒரு குழம்பு, குருமா சட்னி என எதுவும் தேவை இல்லை. அதனால் இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும், இது மிகவும் சுவையாக இருக்கும். தாய்மார்கள் இதைச் செய்வது எளிது. எனவே உங்கள் குழந்தைக்கு அவ்வப்போது இதைச் செய்யுங்கள். காலை உணவாக சாப்பிட்டால், மதியம் சாப்பிடும் வரை பசியே இருக்காது.
ஸ்வீட் ரொட்டி ரெசிபிக்கு தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - கால் கிலோ
வாழைப்பழம் - இரண்டு