தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Foods Kids Should Always Be Encouraged To Eat No Matter How Much They Deny

Kids care: குழந்தைகள் எவ்வளவு அடம் பிடித்தாலும் இந்த உணவுகளை சாப்பிட வையுங்கள்

I Jayachandran HT Tamil
Feb 13, 2023 01:00 PM IST

குழந்தைகள் எவ்வளவு அடம் பிடித்தாலும் இந்த உணவுகளை சாப்பிட வையுங்கள். அவர்களுக்கு பிடித்தமான முறையில் சாப்பிட வைக்கும் முறைகள் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்

குழந்தைகளுக்கான உணவுகள்
குழந்தைகளுக்கான உணவுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

தயிர்

தயிரில் உள்ள லேசான புளிப்புச்சுவை குழந்தைகளுக்கு முகச் சுளிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் குழந்தைகள் வளர்ச்சிக்கான புரோபயாட்டிக்குகள் நிறைந்திருப்பதால் சிறிதளவாவது சாப்பிட வையுங்கள். புளிக்காத தயிரில் தயிர்சாதம் செய்து கொடுங்கள். அதில் அன்னாச்சி பழ முத்துகளை சேர்த்து தந்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்

பட்டாணிகள்

பட்டாணிகளில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அவற்றின் சுவை சற்று குறைவாக இருந்தாலும் நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் குழந்தைகளின் செரிமானத்துக்கு மிகவும் அத்தியாவசியமானவை.

முட்டைகள்

குழந்தைகளுக்கு முட்டை பிடிக்கும். ஆனால் அவற்றின் வாசம் பிடிக்காது. எனவே அவித்து கொடுக்கும்போது லேசாக உப்பு, மிளகுத்தூள் சிறிது சேர்த்துத் தரலாம். அல்லது ஆம்லேட் செய்து தரலாம். ஆரம்பத்தில் வெறும் முட்டை போட்டு ஆம்லேட் செய்யுங்கள் பின்னர் வெங்காயம் சிறிது பொடிப்படியாக நறுக்கி சேர்த்து கொடுங்கள். முட்டை ஒரு முழுமையான சத்தான ஆகாரம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஒரு சிறப்பு என்னவென்றால் அதில் பலவகையான ரெசிப்பிகளை செய்யலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஏராளமான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன.

பால்

பால் குடிப்பது என்றாலே பல குழந்தைகளுக்குப் பிடிக்காது. பால் வாசனை குழந்தைகளுக்கு அவ்வளவாகப் பிடிக்காது என்பது தான் காரணம். ஆனால் பாலில் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. முக்கியமாக எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான போஷாக்கு அதில் உள்ளது. இன்னும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் பாலில் அடங்கியுள்ளன.

கொட்டைகள் மற்றும் விதைகள்

சிப்ஸ் என்றாலே பிள்ளைகளுக்கு கொள்ளைப் பிரியம். ஆனால் பாதாம், முந்திரி போன்ற கொட்டை வகைகள், சியா விதைகள், வெள்ளரி மற்றும் காய்ந்த பூசணி விதைகளில் வைட்டமின்களும், தாதுக்களும் நிரம்பியுள்ளன. எனவே சிப்ஸ்களில் இவற்றை லேசாக வறுத்து சேர்த்துக் கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்கள். குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இருப்பதால் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படுவார்கள்.

முழு தானியங்கள்

முழு தானியங்களில் நிறைய நார்ச்சத்துகளும் வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன. அவற்றை அரைத்து சுவையான பான் கேக்குகளைச் செய்து தரலாம். சிறிது தேன் தொட்டுக் கொள்ளத் தரலாம்.

சீஸனல் பெர்ரீஸ்

பருவத்துக்கு தகுந்தாற்போல் கிடைக்கும் பெர்ரீஸ்களை வாங்கி பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். பெர்ரீஸ்களில் ஆன்டிஆக்ஸிடென்கள், வைட்டமின்கள் உள்ளன. இதில் சர்க்கரை அளவு குறைவாகவே இருக்கிறது என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

சாலடுகள்

ஒரு கிண்ணம் நிறைய பச்சை, ஆர்கானிக், சீசன்களில் கிடைக்கும் காய்கறிகள், பழங்களைக் கொண்டு சாலடுகளை செய்து கொடுங்கள். இதில் நிறைந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. குழந்தைகளை தினமும் சாலடுகளைச் சாப்பிட ஊக்குவியுங்கள்.

காய்கறிகள்

குழந்தைகள் காய்கறிகளைச் சாப்பிட விரும்ப மாட்டார்கள். ஆனால் நமக்குத் தெரியும் காய்கறிகளில் எவ்வளவு சத்துகள் உள்ளன என்று. எனவே குழந்தைகளுக்கு செய்யும் பாஸ்தா, நூடுல்ஸ் போன்றவற்றில் காய்கறிகளை சேர்த்து சமைத்து சாப்பிடக் கொடுங்கள்.

காய்கறி ஜூஸ்கள்

ஃப்ரஷ் காய்கறி ஜூஸ்கள் குழந்தைகளுக்கு உடனடி சத்துகளைத் தரும். பீட்ரூட், கேரட் போன்ற ஜூஸ்களை ஒரு வேளையாவது சாப்பிடக் கொடுங்கள்.

ஸ்மூத்தீ

ஸ்மூத்தியில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அதில் கொட்டைகள் மற்றும் விதைகளை சேர்த்து அரைத்து ஸ்மூத்திகளை செய்து தந்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

கடல் உணவுகள்

கடல் உணவு வாசனை குழந்தைகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நன்கு சமைத்த மீன், நண்டு, ஆய்ஸ்டர்கள், லாப்ஸ்டர்களை சாப்பிட வையுங்கள். அதில் உள்ள ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்கச் செய்யும்.

நல்ல உணவுகள் என நாம் நினைக்கும் பொருட்களை சாப்பிட மாட்டேன் என்று பல குழந்தைகள் அடம் பிடிப்பார்கள். அவர்களை மென்மையாக கையாண்டு சமாதானப் படுத்தி சாப்பிட வைப்பது அவசியம்.

எனவே பெற்றோர் புதுமையான வகையில் உணவுகளைத் தயாரித்து அவர்கள் விரும்பும்படி செய்து தர வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை எக்காரணத்தையும் கொண்டு சாப்பிடத் தர வேண்டாம். அதற்கு மாற்றான உணவுகளை சாப்பிடக் கொடுங்கள்.

காய்கறிகள்,பழங்கள் சாப்பிட வேண்டிய முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள்.

மிகவும் கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்காமல் மெல்ல மெல்ல அவற்றை அதிகளவு சாப்பிடப் பழக்குங்கள்.

இந்த உணவுகள் எல்லாம் அவர்களை புத்திசாலிகளாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் ஆக்கும் என்று பாசத்துடன் பேசி புரிய வையுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்