தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Food Combo For Weight Loss: இந்த உணவு காம்போக்களை சாப்பிட்டாலே போதும்! ஈஸியாக எடையை குறைக்கலாம்

Food Combo for Weight Loss: இந்த உணவு காம்போக்களை சாப்பிட்டாலே போதும்! ஈஸியாக எடையை குறைக்கலாம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 28, 2023 12:01 PM IST

உடல் எடையை, தேவையற்ற கொழுப்புகளை குறைக்க டயட்டை நம்பியிருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவு காம்ப்போக்கள் பற்றி பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க உதவும் உணவு காம்போக்கள்
உடல் எடையை குறைக்க உதவும் உணவு காம்போக்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

எடைகுறைப்புக்கு முயற்சிப்போர் பெரும்பாலும் உடற்பயிற்சியை காட்டிலும் டயட் முறைகளை அதிகம் பின்பற்றுகின்றனர். என்னதான் டயட் முறையை பின்பற்றினாலும், உணவில் ஊட்டச்சத்தின் பங்கு மற்றும் உணவின் வெப்ப விளைவு (TEF) ஆகியவற்றை புரிந்துகொண்டால் மட்டுமே உடலின் எடை குறைப்பு பிரதமான இருந்து வரும் கொழுப்பு இழப்புக்கு வழிவகுக்கும்.

ஓட்மீல் மற்றும் நட்ஸ்

உங்ளது நாளை ஒரு குவளை ஓட்மீல், அதனுடன் கையளவு நட்ஸ்களை, முந்தரி, பாதாம், வால்நட் என எதுவாக இருந்தாலும் அதை டாப்பிங் செய்து சாப்பிடுங்கள். உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை குறைப்பதற்கான ஸ்மார்ட் ஐடியாவாக இது உள்ளது.

ஓட்ஸில் அதிக அளவிலான நார்ச்சத்து உள்ளது. இதில் கிரெலின் என்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் பசியை கட்டுப்படுத்துவதுடன் முழுமையாக இருக்கும் உணர்வை தருகிறது. அதேபோல் ஒற்றை நிறைவுற்ற, பாலிஅன்சேச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த நட்ஸ்களும் நிறைவான உணவர்களை தருவதோடு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருகிறது.

தயிர் மற்றும் பெர்ரிக்கள்

பால் சார்ந்த உணவுகளில் புரதம் நிறைந்ததாக தயிர் உள்ளது. இது எடை குறைப்பு பயணத்துக்கு இரட்டை நன்மைகளை தருகிறது. தயிரில் உள்ள அதிக அளவிலான புரதம் உணவின் வெப்ப விளைவு அதிகரித்து செரிமானத்தின் போது அதிக கலோரிக்களை எரிக்க உதவுகிறது.

வெண்ணெய் கலந்த வேர்கடலை மற்றும் ஆப்பிள்

மிகவும் சுவை மிகுந்த உணவு காம்போவாக இருப்பதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை கொடுத்து, எடை குறைப்புக்கும் வழிவகுக்கிறது. ஜெனிஸ்டீன் மற்றும் ரெஸ்வெராட்ரோல் ஆகியவற்றின் ஆதாராமாக வேர்கடலை உள்ளது. இவை கொழுப்பு சேமிப்பு மரபணுக்களின் செயல்பாட்டை எதிர்க்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

அத்துடன் ஒற்றநிறைவுற்ற, பாலிஅன்சேச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் பசி உண்டாவதை தடுக்கிறது. ஆப்பிளில் குறைவான அளவு கலோரிக்களும், நிறைவான நார்சத்தும் உள்ளன. எனவே இவை இரண்டும் சிறந்த காம்போவாக இருப்பதுடன் ஊட்டச்சத்துகளின் மதிப்பை அதிகரிக்கிறது

முட்டை மற்றும் வண்ண குடைமிளகாய்

முட்டை ஊட்டச்சத்துகளின் களஞ்சியம் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். இவற்றில் இருக்கும் கோலின் மற்றும் உயர்தர புரதங்கள் இருப்பு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

அதேபோல் வண்ண குடைமிளகாய் வைட்டமின் சி, கேப்சைசின் நிறைந்த காய்கறியாக உள்ளது. வைட்டமின் சி கார்டிசோலை எதிர்த்துப் போராட உதவுகிறது. தொப்பை இடம்பெற்றிருக்கும் கொழுப்புக்கு காரணமான ஹார்மோன் உருவாவதை வயிறு நிரம்பியிருக்கும் உணர்வை ஏற்படுத்தி தடுக்கிறது.

அவகோடா மற்றும் கீரை வகைகள்

கிரீம் போன்று இருக்கும் அவகோடா மற்றும் கீரை வகைகள் இணைந்த சாலட் சிறந்த ஊட்டச்சத்து காம்போவாக இருப்பதுடன், எடை குறைப்புக்கும் வழிவகுக்கிறது. கீரைகளில் குறைந்த அளவிலான கலோரிக்கள் இருப்பதுடன், நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இவை உணவின் வெப்ப விளைவை அதிகரிக்கிறது.

அவகோடா பழத்தை பொறுத்தவரையில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதுடன், ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளன. எனவே இவர் நல்ல ஆற்றலை தருவதுடன், உடல் எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது.

டார்க் சாக்லெட்கள் மற்றும் நட்ஸ்

குறைந்தது 70 சதவீதம் அளவு கொக்கோ இடம்பிடித்திருக்கும் டார்க் சாக்லெட், கையளவு நட்ஸ்கள் ஆகியவற்றின் காம்போ எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது. டார்க் சாக்லெட்டில் இடம்பிடித்திருக்கும் பாலிபினால்கள், கொழுப்பு உருவாவதை தடுக்கும் சக்தி வாய்ந்த் சேர்மங்களை கொண்டதாக உள்ளது. இவை கொழுப்பு செல்களை அகற்றி கொழுப்புகளை எரிக்கும் வெப்ப விளைவை அதிகரிக்கிறது. நட்ஸில் இடம்பிடித்திருக்கும் ஒமேக 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, எடை குறைப்புக்கு பங்களிப்பு செய்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்