தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Heart Health: இதய ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த எளிய விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்

Heart Health: இதய ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த எளிய விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 17, 2024 04:35 PM IST

அன்றாட வாழ்க்கை முறையில் சில பழக்க வழக்கங்களை தவறாமல் கடைப்பிடித்தாலே இதய நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். அந்த வகையில் இதய நோய் அபாயத்தை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

இதய ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கும் எளிய வழிகள்
இதய ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கும் எளிய வழிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் இதய நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். அந்த வகையில் நாம் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

உடற்பயிற்சி தவறாமல் மேற்கொள்வது: இதய தசைகள் மீண்டும் மீண்டும் சுருங்கி வேகமாக வெளியேறும்போது அவை வலுவடைகின்றன. எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஏதாவது ஒரு வகையான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது முக்கியம்.

போதிய தூக்கம் தேவை: ஆரோக்கியமான இதயம் மற்றும் வாழ்க்கை முறையை உறுதிப்படுத்த, நாம் தினமும் குறைந்தது 6 முதல் 8 மணிநேரம் தூக்கம் இருக்க வேண்டும். தூக்கமின்மை இதய துடிப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது, இதனால் உங்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது

ஆரோக்கியமாக உணவை சாப்பிடுவது: ஆரோக்கியமான மற்றும் சமச்சீர் உணவை உண்பது மிகவும் முக்கியமானது, சுகாதாரமான சூழலில் வீட்டில் சமைத்த புதிய உணவை சிறந்தது. பருப்பு வகைகள், வெண்ணெய், ஓட்ஸ், ஆலிவ் எண்ணெய், பருப்புகள், பெர்ரி, கீரை மற்றும் சால்மன் போன்ற இதய ஆரோக்கியமான உணவுகளை உங்கள் தினசரி டயட்டில் சேர்க்க வேண்டும்.

வறுத்த உணவுகளை குறைப்பது: வறுத்த உணவுகளில் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதை விட அதிக தீங்குகளை தான் தருகிறது. இவை உடல் தமனிகளுக்கு நல்லதல்ல. இதில் இருக்கும் டிரான்ஸ் கொழுப்புகள் கெட்ட கொல்ஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, பொரித்த மற்றும் வறுத்த உணவுகள் சாப்பிடுவதை வெகுவாக குறைக்க வேண்டும்.

நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளுதல்: நார்ச்சத்து ரத்த அழுத்தத்தைகுறைத்து, வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை அளவையும் கரைக்கிறது.

முழு தானியங்கள், பீன்ஸ், பழங்கள் மற்றும் ஓட்ஸ் போன்றவை நார்ச்சத்து மிக்க உணவுகளாக உள்ளது. நல்ல இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உப்பு அளவை குறைத்தல்: உணவுக்கு சுவை சேர்க்கும் உப்பு ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். ரத்த அழுத்த அளவை பராமரிக்க, சமைக்கும் போது குறைவான அளவில் உப்பு சேர்க்க வேண்டும். மேலும், சாப்பிடும்போது கூடுதலாக உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்

புகைபிடிப்பதை நிறுத்துவது: இதய நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக புகைப்பழக்கம் உள்ளது. எனவே, புகைபிடிப்பதை நிறுத்துவது மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பதற்கும், இதயத்தை ஆரோக்கியமாகப் பேணுவதற்கும் செய்ய வேண்டிய சிறந்த விஷயங்களில் ஒன்றாக உள்ளது.

தியானம் செய்தல்: தியானம் பழக்கத்தை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் நாள்பட்ட இதய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. தியானம் செய்வதால் மனம் அமைதியடைகிறது உங்கள் சுவாசத்தை ஒழுங்குபடுத்தி, இதயம் தொடர்ந்து பம்ப் செய்வதை உறுதி செய்கிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்