தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss : உடல் எடையை வேகமாக குறைக்க ஆளி விதை மற்றும் தயிரை எப்படி சாப்பிட வேண்டும்?

Weight Loss : உடல் எடையை வேகமாக குறைக்க ஆளி விதை மற்றும் தயிரை எப்படி சாப்பிட வேண்டும்?

I Jayachandran HT Tamil
Apr 26, 2023 10:31 AM IST

உடல் எடையை வேகமாக குறைக்க ஆளி விதை மற்றும் தயிரை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

உடல் எடையை வேகமாக குறைக்க ஆளி விதை மற்றும் தயிர்
உடல் எடையை வேகமாக குறைக்க ஆளி விதை மற்றும் தயிர்

ட்ரெண்டிங் செய்திகள்

கோடைகால பானங்களில் ஆளிவிதை பொடியை சேர்த்து சாப்பிடலாம், ஆனால் தயிருடன் சாப்பிடும் போது இது ஒரு மினி சிற்றுண்டியாக மாறும், அதை நீங்கள் மதிய உணவோடு சாப்பிடலாம் என்று இடு கூறுகிறார். ஆளி விதையின் மற்ற நன்மைகளுடன், அதை சரியாக சாப்பிடுவதற்கான வழி என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.

ஆளி விதையின் நன்மைகள் என்ன?

நார்ச்சத்து நிறைந்தது

ஆளி விதைகள் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணும் போது, நாம் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை பெறலாம். செரிமான மண்டலத்தை நார்ச்சத்து நிறைந்த உணவுகள் தூண்டி செயல்பட வைக்கிறது. எனவே உங்கள் குடல் வழியாக உணவை நகர்த்துவதற்கு நார்ச்சத்து உணவை சாப்பிட வேண்டியது அவசியம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது

ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஆளிவிதைகள் வீக்கத்தைக் குறைக்கவும், ஆட்டோ இம்யூன் நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவும். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை மற்றும் நன்மை பயக்க கூடியவை. அதுமட்டுமின்றி, கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் இந்த விதைகள் பெரிதும் உதவும்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது

எடையை குறைக்க புரதத்தின் நல்ல ஆதாரங்களை உட்கொள்வது அவசியம் மற்றும் இதற்கு ஆளிவிதையை விட சிறந்த உணவு வேறு எதுவுமில்லை. 100 கிராம் விதையில் 18 கிராம் புரதம் உள்ளது. இந்த அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்கள் செல்களை சரிசெய்யவும் தசையை உருவாக்கவும் உதவுகிறது. இதில் ம்யூசிலேஜ் எனப்படும் நார்ச்சத்து உள்ளது, இது பசியை அடக்குகிறது, இதனால் அதிகம் சாப்பிடுவதை தடுக்க முடிகிறது.

ஆளி விதையை சாப்பிட சரியான வழி

ஆளிவிதை அதிகமாக சாப்பிடுவதும் சில தீங்கினை ஏற்படுத்தும். ஆளி விதையை சாப்பிடுவதற்கான சரியான வழி இது தான்

இரண்டு வகையான ஆளிவிதைகள்

மஞ்சள் மற்றும் பழுப்பு என இரண்டு வகையான ஆளிவிதைகள் உள்ளன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இரண்டும் சமமான சத்தானவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்க கூடியவை. உங்கள் உணவில் இவற்றை சேர்க்கும் போது நீங்கள் 2 ஸ்பூன் அளவுக்கு மட்டுமே ஆளி விதைகளை உட்கொள்வது நல்லது.

வறுத்த விதைகளை சாப்பிடுங்கள்

ஆளி விதைகளை எப்படி சாப்பிடுவது என்று நீங்கள் குழம்பினால், அவற்றை பச்சையாகவும் சாப்பிடலாம் அல்லது வறுத்தும் சாப்பிடலாம் . நீங்கள் அதை உங்கள் பானங்கள், சாலட் அல்லது தயிரில் கலந்து சாப்பிடலாம். இது தவிர, வறுத்த விதைகளை நைசான பொடியாக அரைக்கலாம். பொடித்த தூளை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். உங்கள் சாலட் அல்லது ஸ்மூத்தியில் ஒரு தேக்கரண்டி இந்த தூள் சேர்க்கலாம்.

தயிர் மற்றும் ஆளிவிதை கலவை

முதலில் இரண்டு ஸ்பூன் ஆளி விதையை ஒரு பாத்திரத்தில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். இதற்குப் பிறகு, ஒரு பாத்திரத்தில் 4 டீஸ்பூன் குறைந்த கொழுப்புள்ள தயிரை எடுத்து, அதில் ஆளி விதை தூள் சேர்த்து கலக்கவும். இப்போது அதன் மேல் கல் உப்பு சேர்த்து சாப்பாட்டுடன் சாப்பிடவும்.

ஆளி விதையை யார் சாப்பிடக்கூடாது?

குறைந்த ரத்த அழுத்தம், குறைந்த ரத்த சர்க்கரை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, ஹார்மோன் பிரச்னைகள், ரத்தப்போக்கு பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த விதைகளை உட்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்