தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Financial Stress : பொருளாதாரம், ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? தப்பிக்க என்ன வழி?

Financial Stress : பொருளாதாரம், ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? தப்பிக்க என்ன வழி?

Priyadarshini R HT Tamil
Aug 11, 2023 11:00 AM IST

Financial Stress : ஆரோக்கியமான வாழ்வுக்கு பொருளாதாரம் மிக அவசியம். நமது தேவையைவிட கூடுதல் செலவு ஏற்படும்போது நாம் அதை சமாளிப்பது எப்படி?

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

பொருளாதார அழுத்தத்தை கொடுப்பது எது?

பொருளாதார பிரச்னைக்கு நம்மிடம் போதிய வருமானம் இருக்காதது காரணமாகிறது. கடன் அதிகம் இருக்கும், செலவுகளும் அதிகம் இருக்கும்போது, பணமோ, சேமிப்போ, எதிர்பாராத செலவுகளோ, பொருளாதார மேலாண்மை செய்ய தெரியாதது இன்சூரன்ஸ் போன்றவற்றை செய்துகொள்ளும் வசதியின்மை ஆகியவற்றால், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகிறது. இவற்றால், நாம் பயம், பதற்றத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.

வருமானத்துக்கும், செலவுக்கும் உள்ள இடைவெளியால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகிறது. வேலையிழப்பு, ஆரோக்கிய அவசரம், முதலீட்டில் வீழ்ச்சி போன்றவை பொருளாதார சிக்கலை அதிகரித்துவிடுகிறது.

பொருளாதார பிரச்னைகள் நிச்சயமாக நமது உடல், மனதை பாதிக்கிறது. மன அழுத்தம் ஏற்பட்டு உச்சகட்டமாக தற்கொலை எண்ணங்களை வரை அழைத்துச் செல்கிறது.

பொருளாதார பிரச்னைகளால் நீண்ட கால மன அழுத்தம் ஏற்படுவது, மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எரிச்சல், சோர்வு, நம்பிக்கையின்டை, மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவை ஏற்படுகிறது. அது பல்வேறு மன நோய்களுக்கும், தற்கொலைக்கும் தூண்டுகிறது.

மன அழுத்தத்தால், தேவையற்ற விஷயங்களை யோசித்துக்கொண்டே இருப்பதால், தலைவலி, உயர் ரத்த அழுத்தம், வலிகள், மயக்கம், மாரடைப்பு, பசியின்மை, டென்சனே போன்ற மனஅழுத்தம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுகிறது. பொருளாதா பாதுகாப்பின்மையால், ஹார்மோன் பிரச்னைகள், மனஅழுத்தம், தோல்வி உணர்வு, அவமானம், தன்னம்பிக்கை இழத்தல் ஆகியவை ஏற்படுகிறது.

பொருளாதார நெருக்கடிகளால் உறவுகளுக்குள் பிரச்னைகள் ஏற்படுகிறது. சண்டையை ஏற்படுத்துகிறது. காதலில் பிரேக் அப், திருமணத்தில் விவாகரத்து, தனிமை, டென்சன் என அனைத்தையும் ஏற்படுத்துகிறது. பொருளாதார மனஅழுத்தம் மனநோயாளியாக்கிவிடுகிறது.

அதிக மனஅழுத்தம் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடுகிறது. இதனால் வேலை பாதிக்கப்படுகிறது. வேலை அளவு குறைந்து வேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பொருளாதார பிரச்னைகள் உங்கள் குணநலன்களையே மாற்றிவிடுகிறது. பொருளாதார பிரந்னைகள் குறித்து பேசுவதை தவிர்க்கச் செய்கிறது. செலவிடும் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உணர்வு ரீதியான பிரச்னைகளுடன், சமூகத்தில் இருந்து விலகச்செய்துவிடுகிறது.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அல்லது எதிர்கொள்ள

உங்கள் செலவை கணக்கெடுத்து அதற்கேற்றார்போல் பட்ஜெட்டை போடுங்கள். கடன் தேவையென்றால் மட்டுமே வாங்குகங்கள்.

தேவையற்ற செலவுகளை தவிர்த்துவிடுங்கள், ஆனால் தேவையானதை வாங்காமல் இருக்காதீர்கள். மருத்துவ செலவினங்களை தவிர்த்துவிடாதீர்கள்.

கூடுதல் வருமானத்துக்கு வழியை தேடுங்கள்.

கடன் தொல்லையை தவிர்க்காமல் எப்படி கொடுப்பது என்று கடன்காரர்களுடன் பேசி முடிவு செய்யுங்கள்.

தனியாக இருக்காதீர்கள். மன அழுத்தத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள். பிரச்னைகளை எதிர்கொள்ள பழகுங்கள்.

பொருளாதார நெருக்கடியால் தற்கொலை எண்ணத்தில் இருந்தீர்கள் என்றால், நிச்சயமாக நிபுணர்களை நாடுங்கள்.

குடும்பத்தினரோ, நண்பர்களோ அல்லது உறவினர்களோ அல்லது நிபுணர்களோ யாருடனாவது உங்கள் குடும்ப பிரச்னைகளை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். அதில் யாராவது கூட உங்களுக்கு உதவுவார்கள். எதையும் குறித்து அச்சமின்றி முன்னேறி சென்றீர்கள் என்றாலே பாதி பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும்.

அனைத்துக்கும் மேல் ஆரோக்கியம் முக்கியம். தேவையற்ற பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு என்ற நம்பிக்கையுடன் தீர்வை நோக்கி நகருங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்