தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Exercises To Avoid Painful Sex : நீங்கள் வலி நிறைந்த செக்ஸை உணர்கிறீர்களா? பெண்ணுறுப்பில் தசை விரியச்செய்யும் பயிற்சி!

Exercises to avoid Painful Sex : நீங்கள் வலி நிறைந்த செக்ஸை உணர்கிறீர்களா? பெண்ணுறுப்பில் தசை விரியச்செய்யும் பயிற்சி!

Priyadarshini R HT Tamil
Aug 01, 2023 11:45 AM IST

Exercises to avoid Painful sex : உடலுறுவின்போது பெண்களுக்கு பிறப்புறுப்பில் வலி ஏற்படுகிறதா? அதற்கு தீர்வுகாண இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த எளிய பயிற்சிகளை செய்யுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாய் முழுவதும் நீங்கள் அமர்ந்துகொண்டே வேலை செய்பவரா? அப்போது நீங்கள் எந்த நிலையில் வேண்டுமானாலும் அமர்ந்திருப்பீர்கள். அதுவும் உங்களுக்கு உடலுறவில் வலி ஏற்பட காரணமாக இருக்கிறது.

அமர்ந்துகொண்டு இருபுறமும் வளைந்து, கையை உயர்த்தி செய்யும் பயிற்சியை நீங்கள் செய்ய வேண்டும். அது உங்களுக்கு இடுப்பு பகுதி தசைகளுக்கு நல்ல மசாஜை கொடுக்கும்.

சேரில் அமர்ந்து கொண்டு ஒரு கையை தலைக்கு மேல் தூக்கி காதருகே வைத்துக்கொள்ள வேண்டும். இதை நீங்கள் படுத்துக்கொண்டும் செய்யலாம்.

உங்களின் முதுகு நேராக இருக்க வேண்டும்.

ஒருகையை இடுப்பில் வைத்துக்கொண்டு மற்றொரு கையை தூக்கி வளையுங்கள்.

இதுபோல் இரண்டு புறமும் செய்யுங்கள்.

ஒவ்வொரு முறையும் போஸை மாற்றும்போதும், நேராக அமர்ந்து இடைவெளிவிட்டு இருபுறமும் வளைந்து செய்ய வேண்டும்.

பாயில் படுத்துக்கொண்டு, காலை மடக்கி கட்டிக்கொண்டு, காலை தூக்கி பிடித்துக்கொண்டு, கால் விரல்களை உங்கள் கையால் பிடித்துக்கொள்ளுங்கள்.

இப்போது முட்டிகள் இரண்டையும் விலக்கி, சேருங்கள்.

அப்போது மூச்சை நன்றாக உள்ளே இழுத்து, வெளியேற்றுங்கள்.

இந்த பயிற்சி உங்களுக்கு இடுப்புப்பகுதி தசைகளை வலுவடையச் செய்யும். இது இடுப்புப்பகுதியில் உள்ள எந்த ஒரு வலிக்கும் இந்த பயிற்சி தீர்வாகும்.

முதுகை நேராக வைத்து சேரில் அமர்ந்துகொண்டு, ஒரு காலை மற்றொரு காலின் தொடையின்மேல் வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் இடுப்புப்பகுதி சதுர வடிவில் இருக்க வேண்டும்.

மேலே போடப்பட்டுள்ள காலை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் நன்றாக குனிந்து நிமிரவேண்டும். எந்த பயிற்சியின்போதும் முதுகு வளையக்கூடாது.

உடலை கால் மேலே உள்ள பகுதிக்கு வளைத்து திருப்பி பயிற்சி செய்ய வேண்டும்.

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இதை திரும்ப செய்யவேண்டும்.

இதுபோன்றவற்றை நீங்கள் செய்யும்போது, உங்கள் இடுப்பு பகுதிக்கு நல்ல மசாஜ் கிடைத்து உடலுறவின்போது உங்களுக்கு வலிகள் ஏற்படாமல் தடுக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்