தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fish Cake: மீனே பிடிக்காது - இந்த ரெசிபியை குடுங்க வேணாம்னு சொல்ல மாட்டாங்க..!

Fish Cake: மீனே பிடிக்காது - இந்த ரெசிபியை குடுங்க வேணாம்னு சொல்ல மாட்டாங்க..!

Suriyakumar Jayabalan HT Tamil
May 14, 2023 12:30 PM IST

மீன் பிடிக்காதவர்களுக்குக் கூட இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

மீன் கேக்
மீன் கேக்

ட்ரெண்டிங் செய்திகள்

மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்திருக்கின்ற காரணத்தினால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்காக இந்த உணவைக் கொடுக்கச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். மீன் சாப்பிடும் பழக்கத்தால் பார்வை திறன், பக்கவாதம், இதய நோய், ரத்த உறைவு போன்ற பாதிப்புகள் குறைவதாகக் கூறப்படுகிறது.

பலர் அசைவ உணவு பிரியர்களாக இருப்பார்கள். ஆனால் சிலருக்கு மீன் மட்டும் பிடிக்காது. அதற்குக் காரணம் அதனுடைய வாசனையும், முள்ளும் தான். அப்படிப்பட்டவர்களுக்காக இப்போது ஒரு ரெசிபி முறையைப் பரிந்துரை செய்யவும். சாப்பிடுபவர்களுக்கு இது மீனை வைத்துச் செய்ததா? என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு இந்த ரெசிபிசுவையாக இருக்கும். மீனை விரும்பாதவர்கள் கூட இதனை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த ரெசிபியின் செய்முறையை இங்கே பார்ப்போம்.

செய்முறைக்குத் தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு - 2
  • வெங்காயம் - 2
  • மீன் - 300 கிராம்
  • எலுமிச்சை பழம் - 1
  • கொத்தமல்லி தேவையான அளவு
  • பச்சை மிளகாய் - 2
  • பிரட் - 2
  • உப்பும், மிளகு பொடியும் தேவையான அளவு

செய்முறை

மீனை மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து முதலில் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அதன் முட்களை நீக்கி முடிந்தவரை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் பிரட்டை துண்டு துண்டாக வெட்டி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுப் பொடி போல் அரைத்து வைத்துக் கொள்ளவும். இதற்கிடையில் உருளைக்கிழங்கை அவித்து, தோல் நீக்கி மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் சிறிய துண்டுகளாக வெட்டிய மீன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயம், மசித்து வைத்திருந்த உருளைக்கிழங்கு, மிளகுப் பொடி, பிரட் பொடி உள்ளிட்டவற்றைச் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மொத்தமாகப் பிசைந்து வைத்திருந்த அந்த கலவையில் எலுமிச்சை பழத்தை நறுக்கி அதன் சாறை பிழிந்து சேர்த்துப் பிசைய வேண்டும். அந்த பாத்திரத்தை மூடி வைத்து 15 நிமிடத்திற்கு அப்படியே ஊற வைக்க வேண்டும்.

அதன் பின்னர் கேக் தயார் செய்யும் ஓவனை 200 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 10 நிமிடத்திற்குத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் நன்கு ஊறிய மீன் கேக் கலவையை எடுத்து பேக்கிங் ட்ரேவில் வேண்டிய அளவு நமக்குப் பிடித்த வடிவத்தில் 200 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உள்ள ஓவனில் 15 நிமிடத்திற்கு பேக் செய்து எடுத்தால் சுவையான மீன் கேக் தயாராகிவிடும்.

இதனோடு சேர்த்து நமக்குப் பிடித்த சட்னி வைத்துச் சாப்பிட்டால் அதன் சுவையே தனியாக இருக்கும். மீன் பிடிக்காதவர்களும் கூட இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்