Erectile Dysfunction : விறைப்பு தன்மை பிரச்சனையால் தாம்பத்திய உறவில் சிக்கலா.. இயற்கை முறையில் சரிப்படுத்தலாம் பாருங்க!-erectile dysfunction is it a problem in marital relationship due to erectile dysfunction - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Erectile Dysfunction : விறைப்பு தன்மை பிரச்சனையால் தாம்பத்திய உறவில் சிக்கலா.. இயற்கை முறையில் சரிப்படுத்தலாம் பாருங்க!

Erectile Dysfunction : விறைப்பு தன்மை பிரச்சனையால் தாம்பத்திய உறவில் சிக்கலா.. இயற்கை முறையில் சரிப்படுத்தலாம் பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 22, 2024 05:45 AM IST

Sex Health : மூளை, ஹார்மோன்கள், உணர்ச்சிகள், நரம்பு செயல்பாடு, தசைகள், ரத்த அணுக்கள் இவைதான் ஆண்களின் பாலுறவு ஆசையை பாதிக்கும் காரணிகள். இந்தப் பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்று விறைப்புச் செயலிழப்புக்கு வழிவகுக்கும். கடுமையான மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவையும் இதற்கு காரணமாகலாம்.

Erectile Dysfunction : விறைப்பு தன்மை பிரச்சனையால் தாம்பத்திய உறவில் சிக்கலா.. இயற்கை முறையில் சரிப்படுத்தலாம் பாருங்க!
Erectile Dysfunction : விறைப்பு தன்மை பிரச்சனையால் தாம்பத்திய உறவில் சிக்கலா.. இயற்கை முறையில் சரிப்படுத்தலாம் பாருங்க!

விறைப்புத் திறன் குறைபாடு உள்ளவர்கள் முதலில் உடலுறவைத் தவிர்க்க முயற்சி செய்கிறார்கள். பிரச்சனையை வெளியில் சொல்லாமல் துணையிடம் இருந்து படிப்படியாக ஒதுங்கி விடுவார்கள். உறவில் காதல் படிப்படியாக குறைகிறது. அது அவர்களை தனிமையாக உணர வைக்கிறது. வெளியில் சொல்ல முடியாத வலியால் மெல்ல மெல்ல மன அழுத்தத்திற்குச் செல்கிறார்கள்.

ஆண்களின் விறைப்பு பிரச்சனைக்கான காரணங்கள்:

மூளை, ஹார்மோன்கள், உணர்ச்சிகள், நரம்பு செயல்பாடு, தசைகள், ரத்த அணுக்கள் இவைதான் ஆண்களின் பாலுறவு ஆசையை பாதிக்கும் காரணிகள். இந்தப் பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்று விறைப்புச் செயலிழப்புக்கு வழிவகுக்கும். கடுமையான மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவையும் இதற்கு காரணமாகலாம்.

விறைப்புத்தன்மை உடலில் மறைந்திருக்கும் உடல்நலப் பிரச்சனைகளைக் குறிக்கிறது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்களுக்கு நீண்டகாலமாக எந்த சிகிச்சையும் எடுக்கப்படாவிட்டால், அது இந்த சிக்கலை ஏற்படுத்தும். மேலும் அதிக எடை, முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை வாழ்க்கை முறை ஆகியவையும் விறைப்புத்தன்மைக்குக் காரணங்களாகும்.

இயற்கையாகவே பிரச்சனையைக் குறைக்கும் வழிகள்:

1. உணவுமுறை:

சத்தான உணவை உட்கொள்வது பாலியல் செயல்திறனை அதிகரிக்கும். இதனால் விறைப்புத்தன்மை பிரச்சனையை படிப்படியாக குறைக்கலாம். குறிப்பாக சிவப்பு இறைச்சியைத் தவிர்ப்பது நல்லது. பழங்கள், காய்கறிகள், பருப்புகள், பருப்பு வகைகள் மற்றும் மீன்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

2. உடற்பயிற்சி:

பெரிதாக உடல் அசைவுகள் இன்றி ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வதும் காரணமாகலாம். இதனால் அடிக்கடி உடற்பயிற்சி செய்வது, அதிக எடை மற்றும் இதயம் தொடர்பான நோய்களும் விறைப்புத்தன்மைக்குக் காரணங்களாகும். அதனால்தான் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம், நீச்சல் போன்றவை செய்யலாம்.

3. தூக்கம்:

விறைப்புத் திறனைக் குறைப்பதில் தரமான தூக்கமின்மை முக்கிய பங்கு வகிக்கிறது. தூங்காமல் வேலை செய்பவர்களுக்கு இந்தப் பிரச்னையின் தாக்கம் அதிகமாக இருக்கலாம். சரியான தூக்கமின்மை டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும். இது சிக்கலை அதிகரிக்கலாம். இதனால் தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

4. மது, புகைத்தல்:

மது மற்றும் புகைபிடித்தல் விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும். இந்தப் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இவற்றைத் தவிர்க்க வேண்டும். நோயை உண்டாக்கும் பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.

இந்த மாற்றங்களாலும் பிரச்சனை தீரவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகவும். முறையான சிகிச்சை மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.

விறைப்புத்தன்மை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பிரச்சனை. இது அவர்களை பல வழிகளில் காயப்படுத்துகிறது. எனவே, ஆண்களுக்கு விறைப்புத் திறன் குறைவதற்கான ஆபத்துக் காரணிகளைப் பற்றி அறிந்து அதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம். இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறாமல் தடுப்பதற்கு சீக்கிரம் சிகிச்சை பெறுவது முக்கியம். முறையான சிகிச்சை மூலம் இந்தப் பிரச்னையைச் சமாளிக்கலாம். பாலியல் திறனை மீண்டும் பெற முடியும். இது ஆண் பெண் இருதரப்பினரின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். அவர்கள் வாழ்க்கைய அழகானதாகவும் அர்த்தம் உள்ளதாகவும் மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.