தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Drumstick Paya : முருங்கைக்காய் பாயா! மூக்கு முட்ட ஒரு கட்டு கட்டவேண்டுமா? இத மட்டும் செஞ்சுடுங்க போதும்!

Drumstick Paya : முருங்கைக்காய் பாயா! மூக்கு முட்ட ஒரு கட்டு கட்டவேண்டுமா? இத மட்டும் செஞ்சுடுங்க போதும்!

Priyadarshini R HT Tamil
May 10, 2024 10:20 AM IST

Drumstick Paya : ஆட்டுக்கால்லதான் பாயா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. இதோ முருங்கைக்காயில் எப்படி செய்வது என்று பாருங்கள்.

Drumstick Paya : முருங்கைக்காய் பாயா! மூக்கு முட்ட ஒரு கட்டு கட்டவேண்டுமா? இத மட்டும் செஞ்சுடுங்க போதும்!
Drumstick Paya : முருங்கைக்காய் பாயா! மூக்கு முட்ட ஒரு கட்டு கட்டவேண்டுமா? இத மட்டும் செஞ்சுடுங்க போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

கிராம்பு – 2

சோம்பு – கால் ஸ்பூன்

பிரியாணி இலை – 1

பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

தக்காளி – 1 (நறுக்கியது)

புதினா – ஒரு கைப்பிடி

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா – கால் 1பூன்

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் – ஒரு கப்

பச்சை மிளகாய் – 4

கசகசா – ஒரு ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

குக்கரில் எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம், ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு என முழு கரம் மசாலாப் பொருட்களை சேர்த்து தாளிக்கவேண்டும்.

பின்னர் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவேண்டும்.

அடுத்து தக்காளி, புதினா, மல்லித்தழை சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர், மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவேண்டும்.

கடைசியாக அரைத்த மசாலா விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். பச்சை வாசம் போன பின்னர் உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு மற்றும் முருங்கைக்காயை சேர்க்கவேண்டும்.

பின்னர் மூடிபோட்டு ஒரு விசில் மட்டும் விடவேண்டும். அதிக விசில் விடக்கூடாது. முருங்கைக்காய் உடையும் அளவுக்கு வெந்துவிடும்.

இதை கடாயிலும் செய்துகொள்ளலாம். கடாயில் செய்யும்போது, தேவையான அளவு கொதித்தவுடன், மல்லித்தழை தூவி இறக்கிக்கொள்ள வேண்டும்.

சூப்பர் சுவையில் முருங்கைக்காய் பாயா தயார்.

இதை பிரிஞ்சி, ரொட்டி, நாண், பரோட்டா, சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், ஆப்பம், தோசை என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

இதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கக்கூடாது. இது ஹஃப் வெள்ளை நிறத்தில்தான் இருக்கவேண்டும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த முருங்கைக்காய் பாயாவை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்கவேண்டும் என்று நினைப்பீர்கள் அந்தளவுக்கு சுவை நிறைந்ததாக இருக்கும்.

முருங்கைக்காயின் நன்மைகள்

முருங்கைக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது.

முருங்கைக்காய் குடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

ரத்தத்தை சுத்திகரிப்பதில் முருங்கைக்காய்கள் உதவுகின்றன.

சுவாச மண்டல வியாதிகளை தடுக்கிறது.

பெண்களின் செக்ஸ் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்