தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raayan Release Date: பட்டையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக்.. ‘சம்பவம் தரமா இருக்கணும்..’ - ராயன் ரிலீஸ் தேதி இங்கே!

Raayan Release Date: பட்டையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக்.. ‘சம்பவம் தரமா இருக்கணும்..’ - ராயன் ரிலீஸ் தேதி இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
May 06, 2024 02:36 PM IST

Raayan Release Date: நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இயக்கி இருக்கும் திரைப்படம் ராயன்.

ராயன் ரிலீஸ் தேதி!
ராயன் ரிலீஸ் தேதி!

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இயக்கி இருக்கும் திரைப்படம் ராயன். இந்தப்படத்தில் காளிதாஸ், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப்படம் ஜூன் 13ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக, இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட் சம்பந்தமான வேலைகளை இயக்குநர் செல்வராகவன்தான் செய்தார் என்று தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு செல்வராகவன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்தார்.

அந்த விளக்கத்தில், “   'என் தம்பியை நினைத்துப் பெருமைப் படுகிறேன்' என்றுகூறிய செல்வராகவன், "நண்பர்களே, 'டி 50 ராயன்' படத்துக்கு நான் ஸ்கிரிப்ட் எழுதியதாக செய்திகள் வந்தன. எனக்கும் 'ராயன்' கதைக்கும் திரைக்கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். 

இது முழுக்க முழுக்க, என் தம்பி தனுஷின் கனவுக் கதை. இப்போது அதை அவர் எழுதி இயக்கி, முக்கிய பாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நான் ஒரு நடிகன் மட்டுமே’’ என்று குறிப்பிட்டு இருந்தார். 

மேலும் அவர் , "உங்கள் அனைவரையும் போலவே நானும் ராயன் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க வெகுநாட்கள் காத்திருக்க முடியாது. எனது சகோதரர் தனுஷின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு குறித்து நினைத்துப் பெருமைப்படுகிறேன்’’ எனப் பதிவிட்டு இருந்தார். ராயன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, அண்மையில் தனுசும், ஐஸ்வர்யாவும் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர். இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருந்தார். 

அவர் பேசும் போது, “தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா ஒரு இயக்குனநராக இருந்த போதும், அந்த காலகட்டத்தில் அவரால் வீட்டு வாடகை கூட கட்ட முடியாத நிலையே இருந்தது. தனுஷின் சிறு வயது காலங்கள் அனைத்துமே வறுமையாலும், கஷ்டத்தாலும் நகர்ந்தவையே.

அப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து நடிகர் தனுஷ் படிப்படியாக வளர்ந்து, ஒரு நடிகராக மாறி, ரஜினிகாந்தின் வீட்டிற்கு மருமகனாக மாறுவது என்பது கதைகளில்தான் நடக்கும். ஆனால் அது நிஜத்தில் நடந்தது.

அது நடந்த பொழுது, கோலிவுட்டின் பெரும்பான்மையான பிரபலங்கள், தனுஷை மிகவும் பொறாமையுடனும், எரிச்சலுடனுமே பார்த்தார்கள். ஆனால் தனுஷின் சில நலம் விரும்பிகள், பையன் சரியான இடத்திற்கு தான் சென்றிருக்கிறார் என்று நினைத்தார்கள்.

இப்படி இருந்த தனுஷ், இன்று இப்படி ஒரு விவாகரத்து முடிவை எடுத்து இருக்கிறார் என்றால், அதன் பின்னால் இருப்பது என்ன என்பதை நான் சில பேரிடம் விசாரித்தேன். அப்படி விசாரிக்கும் பொழுது நான் கேட்ட தகவல்கள் அனைத்தும் எனக்கு பேரதிர்ச்சியை தந்தன. ஆம், இந்த விவாகரத்தே ஒரு ஏற்பாடு என்று சொல்கிறார்கள். நேற்று வரை கூட, ஐஸ்வர்யாவும் தனுஷும் போனிலும், வாட்ஸ் அப்பிலும் நன்றாக தான் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

தனுஷ் தான் வாங்கி இருக்கும் பல கோடி சொத்துக்களை மனைவி ஐஸ்வர்யாவின் பெயரில் இணைத்து தான் வாங்கி இருக்கிறாராம். ஆனாலும், அது அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம். இப்போது 2கே கிட்ஸ் மத்தியில், சிச்சுவேஷன் சிப் என்ற ஒரு ரிலேஷன்ஷிப் பரவலாக பேசப்பட்டு வருகிறது; அதாவது தன்னுடன் பயணிக்கு நபர், தன்னுடன் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

தன்னிடம் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு முறை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால், உடனே விலகி விட வேண்டும். தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தும் இந்த சிச்சுவேஷன்ஷிப் என்ற பெயரிலேயே நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

இதை தனுஷின் நெருக்கமான வட்டாரங்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களுடைய குழந்தைகளும் இருதரப்பு வீட்டாருக்கும் சகஜம் போல சென்று வருகிறார்களாம். அந்த மகன்களுக்கு அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட்டார்கள் என்ற ஒரு நினைப்பே வரவில்லையாம். அந்த அளவுக்கு அவர்கள் இயல்பாக நடந்து கொள்கிறார்களாம்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்