தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Drinking Water Issue : கடல் நீரை ஆவியாக்கி அதில் இருந்து குடிநீர் – அசத்தும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்!

Drinking Water Issue : கடல் நீரை ஆவியாக்கி அதில் இருந்து குடிநீர் – அசத்தும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 27, 2023 11:02 AM IST

Drinking Water Issue : 2025ம் ஆண்டு மூன்றில் 2 பங்கு மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றன. 3 சதவீதம் தண்ணீர் மட்டுமே நன்னீராக இருப்பதும், அவை பெரும்பாலும் பனிப்பாறைகளில் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

Drinking Water Issue : கடல் நீரை ஆவியாக்கி அதில் இருந்து குடிநீர் – அசத்தும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்!
Drinking Water Issue : கடல் நீரை ஆவியாக்கி அதில் இருந்து குடிநீர் – அசத்தும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

குடிநீர் பிரச்னை அதிகரித்து வரும் சூழலில், அதற்கு தீர்வு காணும் முயற்சியில், ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக (UniSA) ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பை வெளியிட்டு அசத்தியுள்ளனர்.

கடலில் மிதக்கும் வயல்வெளிகளை உருவாக்கி, அதன் மூலம் குடிநீர், உணவுப் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். வருங்காலத்தில், சூரியன், கடல் இவற்றைக்கொண்டு, சூரிய ஆற்றல் மூலம் கடல்நீரிலிருந்து குடிநீரைப் பெற ஆய்வுகள் நடத்தி வெற்றி கண்டுள்ளனர்.

சுருக்கமாக, கடல்நீரை ஆவியாக்கி, அதிலிருந்து குடிநீரைப் பெறும் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். பேராசிரியர்கள் Haolan Xu, Gary Owens இருவரும் கூட்டாக ஆய்வு செய்து வெற்றி கண்டுள்ளனர்.

ஆய்வில் 2 அடுக்குகள் கொண்ட அமைப்பு (மேலடுக்கு-கண்ணாடி அறை, கீழடுக்கு-நீரை சேகரிக்கும் இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது) உள்ளது.

முதலில் கடல்நீரில் (உப்புத்தன்மை-35 parts/1000 in concentration என அதிகமாக உள்ளது) உள்ள உப்புகள் நீக்கப்பட்டு, பின் சூரிய ஒளியின் உதவியால் நீர் ஆவியாக்கப்பட்டு, அதை காற்றில் விட்டு, பின் காற்றிலிருந்து சுருங்கல் (Condensation) விதிப்படி, நீரை நகர்த்தும் வடிவமைப்பில் அதை விட்டு, மேலடுக்கில் தாவரங்களை வளர்க்கும் பகுதிக்கு, அந்த நீர் கொண்டு செல்லப்பட்டு, தாவரங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றனர்.

Broccoli, lettuce, bok choy போன்ற தாவரங்களை கூடுதல் தண்ணீரின்றி, 80 சதவீதம் வளர்த்து வெற்றி கண்டுள்ளனர். இந்த ஆய்வில் சூரிய வெளிச்சம் மூலம் ஆற்றல் பெறப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக தொழில்நுட்பம் உள்ளது இதன் சிறப்பம்சம்.

மொத்ததில், சூரிய வெப்பத்தையும், கடல்நீரையும் கொண்டு குடிநீர் தயாரிக்கப்பட்டு மனிதர்களுக்கும், தாவரங்கள் வளர்வதற்குமான திட்டத்தில் வெற்றி அடையப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு நடைமுறைக்கு வந்தால், மக்களின் பெருகிவரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வாக அமைவதுடன், அந்நீரைக் கொண்டு பயிர்களை வளர்த்து மக்களுக்கான உணவு பாதுகாப்பையும் உறுதிசெய்ய முடியும்.

குடிநீர் பிரச்னைக்கு மற்றுமொரு அரிய அறிவியல் கண்டுபிடிப்பு -

பெருகிவரும் புவிவெப்பமடைதல் பிரச்னையை கருத்தில்கொண்டு, சூடான காற்றிலிருந்து (தோராயமாக 40°C வெப்பநிலையில்), சூரியஒளி ஆற்றலை பயன்படுத்தி, நீரைப் பெறும் முயற்சியில், ஆஸ்டின் பகுதியில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வுகள் வெற்றி பெற்று, அதன் சாரம்சம் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் (NAS) ஆய்வேடுகளில் கட்டுரையாக வெளிவந்துள்ளது.

செயற்கை மூலக்கூறு வடிவமைப்பில் உருவான நீரேற்றுக்கூழ் (Molecularly Engineered Hydrogel device) முலம், சூரிய ஒளியை பயன்படுத்தி, சுத்தமான குடிநீரை தயாரித்துக் காட்டி அசத்தியுள்ளனர் ஆய்வாளர்கள். ஒரு கிலோகிராம் கூழ் அமைப்பிலிருந்து 3.5-7 கிலோகிராம் குடிநீர் பெற முடியும் என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

இந்த ஆய்வு பற்றி, பேராசிரியர் Guihua Yu கருத்து கூறுகையில்,

‘காற்றில் உள்ள ஈரப்பதத்தைக் கொண்டு சுருங்கல் (Condensation) முறையில், நீரேற்றுக்கூழ் (Hydrogel) உதவியுடன், காற்றிலிருந்து குடிநீரை பெற முடியும் என்றும், அதற்கான கருவியின் வெளிப்புறத்தில், வெளிப்படையான மூடியை தலைகீழாக நீர் சேகரிக்கும் அமைப்பின் மீது கவிழ்த்து, உள்ளே குறுங்கூழ் (Microgel) அமைப்பின் மூலம் காற்றிலுள்ள ஈரப்பதத்தில் உள்ள நீர், சுருங்கல் முறையில் நீராகி, அது அடியில் உள்ள சேகரிக்கும் கலனை வந்தடைகிறது. அந்த நீரை குடிநீராக பயன்படுத்திக் கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல், பெரிய தொட்டிகளில் நீரை சேகரிக்கும் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்சொன்ன 2 அறிவியல் ஆய்வுகளை தமிழகத்தில்/இந்தியாவில் மேற்கொண்டு நாமும் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்வருவது சிறப்பாக இருக்கும்.

கடல் நீரையும், வெப்பக் காற்றையும், சூரிய ஒளியையும் மக்கள் பிரச்னையை தீர்க்க அரசுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்