தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gastric Problem Prevention: வாயு பிரச்னை பெரும் கவலை! இதை மட்டும் செய்தால் இனி இல்லை தொல்லை

Gastric Problem Prevention: வாயு பிரச்னை பெரும் கவலை! இதை மட்டும் செய்தால் இனி இல்லை தொல்லை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 27, 2023 12:47 PM IST

குடல் ஆரோக்கியத்தை சரிவர பேனி பாதுகாக்காமல் விட்டால் வாயு தொல்லை, வயிறு உப்புசம் உள்பட பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். இதிலிருந்து விடுபட சில நடைமுறைகளை தவறாமல் பின்பற்றினாலே உரிய பலனை பெறலாம்.

வாயு தொல்லையில் இருந்து விடுபட எளிய வழிகள்
வாயு தொல்லையில் இருந்து விடுபட எளிய வழிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

குறிப்பாக பருவ மழைகாலங்கள் காலநிலை மாறி மாறி நிலவி வரும் சூழ்நிலையில் சருமம், கண்கள் உள்பட பல்வேறு வெளி உறுப்புகளில் பிரச்னை ஏற்படுகின்றன. இதே போல் உள் உறுப்புகளிலும், உடல் செயல்பாடுகளிலும் ஏதாவது தாக்கங்களும் உண்டாகின்றன. இதன் காரணமாக உடல் நல பாதிப்பும் ஏற்படுகின்றன.

மழை காலங்களில் ஏற்படும் பிரதான பிரச்னைகளில் ஒன்றாக குடல் ஆரோக்கியம் பாதிப்படைவது உள்ளது. இதனால் வாயு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளும் உருவாகின்றன. வயிற்றில் வாயு தங்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாதபோது அதில் இருக்கும் பாக்டீரியாக்களின் மூலம் வாயு உருவாகும். மற்றொரு காரணமாக உணவு செரிமானம் அடையும்போது நிகழும் வேதி வினையில், கார்பன் டை ஆக் சைடு, ஹைட்ரஜன், மீத்தேன் போன்ற வாயுக்கள் வயிற்றில் தங்கி அசெளகரியத்தை ஏற்படுத்துகின்றன.

மழை காலங்களில் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வதால் வயிறு உப்புசம், வாயு தொல்லை, அமிலத்தன்மை, அஜீரண கோளாறு போன்றவை உண்டாகிறது. இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டால் வாந்தி, வயிற்று வலி பாதிப்பால் அவதிக்குள்ளாகிறார்கள்.

உணவை பச்சையாக உண்பது, பாதி சமைத்து உண்பது, சாலையோர உணவுகள், பாக்டீரியா தாக்குதலுக்குள்ளான உணவுகள் போன்றவை வயிற்றில் பிரச்னை ஏற்படுத்துவது மட்டுமின்றி, குடலின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது.

எனவே குடலின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கவும், வாயு தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிரக்கும் பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்களை பார்க்கலாம்

புரொபயோடிக் உணவுகள் சாப்பிடுங்கள் - குடலுக்கு நன்மை தரும் உணவுகளாக இருந்து வரும் தயிர், மோர் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இவை குடலின் செயல்பாட்டை சீராக்கும்.

போதுமான அளவில் தண்ணீர் பருகுங்கள்: செரிமானத்தை சீராக்கவும், உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் குறைந்தது 10 முதல் 12 கிளாஸ் அளவு தண்ணீர் நாள்தோறும் பருக வேண்டும். தண்ணீர் பருகுகிறேன் என்று அளவுக்கு அதிகமாக குடித்தாலும் வேறு சில பிரச்னைகள் சந்திக்க நேரிடும்

பச்சை காய்கறிகளை சாப்பிடாதீர்கள்: பருவ மழை காலங்களில் பச்சை காய்கறிகள் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பச்சை காய்கறிகளில் பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ் தொற்றுக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. காய்கறிகளை நன்கு வேக வைத்து சாப்பிடுவது நலம். இதனால் வயிறு, குடலில் தொற்று பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்

இனிப்பு உணவுகளை தவிர்த்து விடுங்கள்: ஐஸ்க்ரீம், சாக்லேட், சுவிட், டெஸ்ஸர்ட் உள்பட இனிப்பு வகை உணவுகளை முடிந்த அளவில் தவிர்க்க வேண்டும். இவை உடலில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, குடலில் செயல்பாட்டுக்கு கடினமானதாக அமைந்திருக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் வேண்டாம்: சிப்ஸ், கேனில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் எப்போதுமே உடலுக்கு தீங்கை விளைவிப்பதாகவே இருக்கும். அதுவும் வாயு தொல்லை, பருவ மழை காலங்களில் மனம் ஏங்கினாலும் இதை நினைத்து கூட பார்க்ககூடாது.

WhatsApp channel

டாபிக்ஸ்