Does Wet Hair Makes you Sick : குளித்துவிட்டு ஈரத்தலையுடன் இருந்தால், அது உங்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்துமா?-does wet hair makes you sick does wet hair after showering make you sick - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Does Wet Hair Makes You Sick : குளித்துவிட்டு ஈரத்தலையுடன் இருந்தால், அது உங்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்துமா?

Does Wet Hair Makes you Sick : குளித்துவிட்டு ஈரத்தலையுடன் இருந்தால், அது உங்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்துமா?

Priyadarshini R HT Tamil
May 27, 2024 06:00 AM IST

Does Wet Hair Makes you Sick : குளித்துவிட்டு ஈரத்தலையுடன் இருந்தால், அது உங்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் அல்லது நிமோனியாவை ஏற்படுத்துமா?

Does Wet Hair Makes you Sick : குளித்துவிட்டு ஈரத்தலையுடன் இருந்தால், அது உங்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்துமா?
Does Wet Hair Makes you Sick : குளித்துவிட்டு ஈரத்தலையுடன் இருந்தால், அது உங்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்துமா?

வீட்டில் நாம் குளித்துவிட்டு தலையை காயவிடாமல் ஈரத்தலையுடன் வெளியே சென்றாலோ அல்லது உறங்கினாலோ நம் வீட்டில் உள்ள பெரியவர்கள், காய்ச்சல் வந்துவிடும் எனவே சரியாக காயவிடு என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எனவே ஈரத்தலையுடன் நாம் வெளியே சென்றாலோ அல்லது உறங்கினாலோ நமக்கு உண்மையிலே உடல் நலன் பாதிக்கப்படுமா?

ஈரத்தலையுடன் இருந்தால் காய்ச்சல் வருமா?

ஈரத்தலையுடன் நாம் வெளியில் செல்லும்போது காய்ச்சல் வராது. ஆனால் தலைக்கு குளித்துவிட்டு, அதை சரியான காயவிடாவிட்டால் அது நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். இல்லாவிட்டால், சுவாச பிரச்னைகள், சளி, இருமல் போன்றவற்றை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நிமோனியா, பாக்டீரியா, வைரஸ், பூஞ்ஜை போன்றவற்றால் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல், சளி, வைரஸ்களால் ஏற்படுகிறது. சளி ஈரத்தலையினால் மட்டுமல்ல அது மற்றவரிடம் இருந்து நமக்கு தொற்றிவிடும். குளிர்ந்த காற்றில், ஈரத்தலையுடன் செல்லும்போது, அது நமது உடலின் வெப்பத்தை குறைக்கிறது. தொற்றுக்களை ஏற்படுத்துகிறது. ஆனால் நமக்கு அது காய்ச்சல் அல்லது நிமோனியாவை ஏற்படுத்தாது.

ஈரத்தலையுடன் உறங்குவதாலோ அல்லது வெளியில் செல்வதாலோ நமக்கு காய்ச்சல் ஏற்படுமா என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் இல்லை. ஆனால், சளி, வைரசால் ஏற்படும் என்பதற்கான ஆய்வுகள் உள்ளது.

சளியை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய கொரோனா வைரஸ், ரினோ வைரஸ் அல்லது சுவாச மண்டலத்தை பாதிக்கக்கூடிய வைரஸ்கள் உள்ளது. நிமோனியா வேறு நோய் கிருமிகளால் ஏற்படக்கூடியது. அது பாக்டீரியாக்கள், இன்புளூயன்சா அல்லது சுவாச வைரஸ்களாலும் ஏற்படக்கூடியது. பூஞ்ஜையாலும் ஏற்படும். நிமோனியா மற்றும் சளி ஆகியவை உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவிழக்கச்செய்யும்.

ஈரத்தலையுடன் உறங்குவதை ஏன் தவிர்க்க வேண்டும்?

முடியை சேதப்படுத்தும்

ஈரத்தலையுடன் உறங்குவது உங்களின் தலைமுடியை சேதப்படுத்தும். ஏனெனில், எளிதில் சேதமடையக் கூடியதாக ஈர முடிகள் உள்ளது. தலையணையில் உருண்டு படுக்கும்போது நமது தலைமுடி சேதமடைகிறது.

உறக்கத்துக்கு இடையூறாகும்

ஈரத்தலை, குறிப்பாக குளிர் காலங்களில், ஏசி அறையில் உறங்கும்போது, உங்களுக்கு சளியை ஏற்படுத்தும். ஏனெனில் அது உங்கள் உடலின் வெப்பநிலையைக் குறைக்கும். இது உறக்கத்துக்கு இடையூறை ஏற்படுத்தும். உங்களுக்கு அசவுகர்யங்களைக் கொடுக்கும்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவிழக்கச்செய்யும்

ஈரத்தலையுடன் உறங்குவது உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவிழக்கச்செய்யும். சளிக்கு ஆளாகி உங்கள் உடலை வருத்தும். இவை ஏற்படும்போது உடலுக்கு தேவையற்ற தொற்றுக்கள் வரும்.

பாக்டீரியா வளர்ச்சியை அதிகரிக்கும்

ஈரமான சூழல்கள்தான் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு இடமளிக்கும். ஈரத்தலையுடன் உறங்கும்போது, உங்கள் தலையணையில் ஈரம்படிந்து ஒரு ஈரத்தன்மையை இரண்டுக்கும் ஏற்படுத்தும். இது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

பொடுகை ஏற்படுத்தும்

ஈரத்தலையுடன் படுத்து உறங்கினால், பொடுகை ஏற்படுத்தும். தலைமுடிக்கால்களில் ஈரத்தன்மை இருந்தால், அங்கு ஈஸ்ட் போன்ற பூஞ்ஜைகள் அதிகம் உருவாகும். இது உங்கள் தலைமுடியில் பொடுகை உண்டாக்கும்.

ஈரத்தலையால் சளி, இருமல், காய்ச்சல், நிமோனியா போன்றவை ஏற்படாது. ஆனால் அது மற்ற பிரச்னைகளை ஏற்படுத்துவது உறுதி. நீங்கள் மாலையில் தலைக்கு குளித்தீர்கள் என்றால், உறங்கச்செல்லும் முன் உங்கள் தலைமுடி காய்ந்துவிட்டது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கும். அதற்காக நீங்கள் ட்ரையர் பயன்படுத்த தேவையில்லை. ஒரு துண்டில் கட்டி வைத்துவிடுங்கள். சூடான, ஈரமில்லாத உறக்கச் சூழல் நல்லது. அது உங்களுக்கு தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.