நள்ளிரவில் திடீரென விழித்துவிட்டு மீண்டும் உறங்க முடியாமல் அவதியா? காரணமும், தீர்வும் இதுதான்!
இரவு உறக்கத்திற்கு இடையில் விழித்துவிட்டு மீண்டும் உறங்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா?

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிக்க சில மருத்துவகுறிப்புக்களையும் அழகு குறிப்புக்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
நள்ளிரவில் திடீரென்று உறக்கம் கலைய காரணம் என்ன?
உங்களுக்கு திடீரென நள்ளிரவைக் கடந்து ஒரு 2 அல்லது மூன்று மணிக்கு மேல் விழிப்பு வந்துவிடுகிறதா? உறக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? எனில் அதற்கு காரணம் உங்கள் உடலில் திடீரென சர்க்கரையின் அளவு குறைவதுதான். மேலும் எண்ணற்ற காரணங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த சர்க்கரை குறைவது, சிலருக்கு மனஅழுத்தம் கூட காரணமாக இருக்கலாம். அதற்கு நீங்கள் மருத்துவரை அணுகவேண்டும். ஆனால் அதற்கு முன் நீங்கள் இதை முயற்சிக்கலாம்.
என்ன செய்யலாம்?
திடீரென உறக்கம் கலைந்து மீண்டும் உறக்கம் வருவதில்லையா? அப்படி உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டால், எழுந்து ஒரு வாழைப்பழம் அல்லது கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். அல்லது பிஸ்கட்கள் கூட எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் உடலில் ஏற்படும் சர்க்கரை குறைபாட்டை அந்த நேரத்திற்கு சரிசெய்யும். இதனால் உங்களுக்கு உறக்கம் மீண்டும் வரும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது உங்களுக்கு நிவாரணம் கொடுத்தால் தொடரலாம். இல்லாவிட்டால் மருத்துவரிடம் செல்வதுதான் சிறந்த தீர்வாகும் என்று சொல்லப்படுகிறது.