சாற்றை பிழிந்துவிட்டு எலுமிச்சையின் தோலை தூக்கி வீசுகிறீர்களா? அதன் நன்மைகளும்; பயன்படுத்தும் விதமும் இதோ!
சாற்றை பிழிந்துவிட்டு எலுமிச்சையின் தோலை தூக்கி வீசுகிறீர்களா? அதையுமே உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதன் நன்மைகளும்; அவற்றை உணவில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து எடுத்துக்கொண்டு, எலுமிச்சை பழத்தின் தோலை மட்டும் தூக்கி வீசப்போகிறீர்கள் என்றால் அதன் நன்மைகளையும், அதை உணவில் எப்படி பயன்படுத்தலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள். நாம் எலுமிச்சை பழத்தின் தோல்களை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால் எலுமிச்சை பழத்தின் சாற்றைவிட அதன் தோல்களில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள. எலுமிச்சை தோல் உங்கள் உணவுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கிறது. உங்கள் உணவில் எலுமிச்சையை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று பாருங்கள்.
பேக்கிங்
நீங்கள் பேக் செய்யும் உணவுகளில் சிறிதளவு எலுமிச்சை தோலை துருவி சேர்த்துக்கொள்ளலாம். இதன் சிட்ரஸ் மற்றும் புத்துணர்வு குணம், நீங்கள் பேக் செய்யும் உணவுகளின் சுவையை அதிகரிக்கும். இதை துருவி பயன்படுத்தும்போது, கசக்காது. அதன் வெள்ளை நிறப்பகுதியை துருவிவிடக் கூடாது. அதில்தான் கசப்புத்தன்மை இருக்கும்.
எண்ணெய்
எலுமிச்சையை ஊறவைத்த எண்ணெயை நீங்கள் உங்கள் சாலட்கள், பாஸ்தாக்கள், கிரில் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் மீன் உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். இது உங்களுக்கு சுவையை மட்டும் கொடுக்காது. வீக்கத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதய ஆரோக்கியத்துக்கும் நன்மையைத் தருகிறது.
மிட்டாய்கள் செய்வதில் சேர்க்கலாம்
எலுமிச்சை பழத்தின் தோலை நீங்கள் இனிப்புடன் சேர்த்து, மிட்டாய்கள் செய்ய பயன்படுத்த முடியும். சர்க்கரைப் பாகில் எலுமிச்சை பழத்தின் தோலை ஊறவைக்கவேண்டும். இதை காயவைத்து, சர்க்கரையில் பிரட்டி எடுக்கவேண்டும். மிட்டாயான எலுமிச்சை பழத்தின் தோலை நீங்கள் ஸ்னாக்ஸாக சாப்பிடலாம் அல்லது கேக், ஐஸ்கிரீம் போன்ற இனிப்புகளை அலங்கரிக்கப் பயன்படுத்தலாம்.
எலுமிச்சை தோல் டீ
எலுமிச்சை பழங்களை தண்ணீருடன் கொதிக்க வைத்து, வடிகட்டி பருகலாம். மெல்லிய சிட்ரஸ் சுவை இதில் இருக்கும். இதை சூடாகவும், குளுமையாகவும் பயன்படுத்தலாம். சுவையை அதிகரிக்க இதனுடன் இஞ்சி அல்லது புதினா இலைகளை சேர்த்துக்கொள்ளலாம்.
சூப்களில் எலுமிச்சை தோல்
உங்கள் சூப்களில் எலுமிச்சையின் தோலை சேர்த்துக்கொள்ளுங்கள். அது அதன் சுவையை அதிகரிக்கும். எலுமிச்சை தோலை சூப்பில் சேர்ப்பதால், அதன் செரிமானத்திறகும் அதிகரிக்கும். இது உங்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலைத் தரும். குறிப்பாக குளிர்காலத்துக்கு சிறந்தது.
ஆரோக்கியம் மற்றும் சமையல்
எலுமிச்சையில் தோல்களை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்த முறை நீங்கள் எலுமிச்சை சாற்றை பிழிந்து எடுத்துவிட்டு, அதன் தோல்களை தூக்கிவீசாதீர்கள்.
நார்ச்சத்துக்கள் நிறைந்தது
எலுமிச்சை தோல்களில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் உங்கள் செரிமான மண்டலத்தை காக்கிறது. உங்களின் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
ஹெஸ்பெரின் மற்றும் டி லிமோனெனே போன்ற ப்ளாவனாய்ட்கள், வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து பாதுகாப்பு கொடுக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
எலுமிச்சை பழத்தோலில் உள்ள பெக்டின், பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்