Beetroot Peel Tea : பீட்ரூட்டின் தோலை தூக்கி வீசாதீர்கள்! அதில் தேநீர் செய்யலாம்! அதன் நன்மைகளைப் பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beetroot Peel Tea : பீட்ரூட்டின் தோலை தூக்கி வீசாதீர்கள்! அதில் தேநீர் செய்யலாம்! அதன் நன்மைகளைப் பாருங்கள்!

Beetroot Peel Tea : பீட்ரூட்டின் தோலை தூக்கி வீசாதீர்கள்! அதில் தேநீர் செய்யலாம்! அதன் நன்மைகளைப் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Sep 16, 2024 03:40 PM IST

Beetroot Peel Tea : பீட்ரூட்டின் தோலை தூக்கி வீசாதீர்கள். அதில் தேநீர் செய்து சாப்பிட முடியும். அந்த தேநீரின் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.

Beetroot Peel Tea : பீட்ரூட்டின் தோலை தூக்கி வீசாதீர்கள்! அதில் தேநீர் செய்யலாம்! அதன் நன்மைகளைப் பாருங்கள்!
Beetroot Peel Tea : பீட்ரூட்டின் தோலை தூக்கி வீசாதீர்கள்! அதில் தேநீர் செய்யலாம்! அதன் நன்மைகளைப் பாருங்கள்!

பீட்ரூட் தோலில் உள்ள நன்மைகள்

பீட்ரூட்டைப்போலவே அதன் தோல்களிலும் எண்ணற்ற ஆரோக்கியம் நிறைந்துள்ளது. பீட்ரூட் தோல்கள் உங்கள் சருமத்தை பாதுகாக்கின்றன. பீட்ரூட் தோல்கள் உங்களின் முகப்பருக்களை போக்குகிறது. முகத்திற்கு பொலிவைத்தந்து, சருமத்திற்கு புத்துணர்ச்சியைத்தருகிறது. பீட்ரூட்டில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பீட்ரூட் தோல்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. பீட்ரூட் தோலை உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் தடவினால், அது தலையில் உள்ள அரிப்பு மற்றும் எரிச்சலைப்போக்குகிறது. இறந்த செல்களை நீக்குகிறது. உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. பீட்ரூட்டைப்போலவே பீட்ரூட் தோலும் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, ரத்தம், சருமம் மற்றும் கல்லீரை சுத்திகரிக்கிறது. உடல் வளர்சிதையை அதிகரிக்கிறது, பீட்ரூட் தோலில் நைட்ரேட்கள் உள்ளன. இவை உடற்பயிற்சியின்போது நீங்கள் விரைவாக செயல்பட உதவும். நீங்கள் கடும் உடற்பயிற்சிகள் செய்யும்போது அதன் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

தேவையான பொருட்கள்

பீட்ரூட் தோல் – சிறிதளவு

(செரிமானத்துக்கு உதவுகிறது)

தேன் – சிறிதளவு

(செரிமானத்தை தூண்டுகிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. மலச்சிக்கலைப்போக்குகிறது)

ஆலிவ் எண்ணெய் – ஒரு ஸ்பூன்

(வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. உங்கள உடலை சுத்தம் செய்கிறது)

செய்முறை

பீட்ரூட் தோல் மற்றும் பூண்டு சேர்த்து அரை லிட்டர் தண்ணீருடன் கொதிக்கவிடவேண்டும். அது கால் லிட்டர் ஆகும் வரை கொதிக்கவிட்டு, வடிகட்டி, அதில் தேன், ஆலிவ் எண்ணெயையும் கலந்து பருகவேண்டும்.

இனிமேல் பீட்ரூட் தோலை தூக்கியெறியாதீர்கள். இதுபோல் செய்து பருகி உங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற பயனுள்ள தகவல்களைப் பெற ஹெச்.டி தமிழுடன் தொடர்ந்து பயணியுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.