Porn Addiction: ஆபாச வீடியோக்களை பார்க்கும் பழக்கம் அதிகமாகிறதா.. ஆபத்தான போதையில் இருந்து வெளியேற உதவும் சூப்பர் டிப்ஸ்
Porn Addiction: ஆபத்தான ஒன்று ஆபாச வீடியோக்களை பார்ப்பது. இந்த பழக்கம் இப்போது இளைஞர்களிடம் பரவலாக அதிகரித்துள்ளது. இன்டர்நெட், மொபைல், டேப்டாப், கம்யூட்டர் போன்ற வசதிகள் எளிதில் கிடைப்பதால் வயது வித்தியாசமின்றி பலரும் இந்த ஆபத்துக்கு பழகி வருகின்றனர்.
Porn Addiction: பழக்கத்திற்கும் போதைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. கெட்ட பழக்கங்களை கைவிடுவது ஓரளவு எளிது. ஆனால் அதுவே ஒருமுறை அடிமையாகிவிட்டால், அதிலிருந்து மீண்டு விடுபடுவது மிகவும் கடினம். அப்படிப்பட்ட ஒன்றுதான் ஆபாச வீடியோக்களை பார்ப்பது. இந்த பழக்கம் இப்போது இளைஞர்களிடம் பரவலாக அதிகரித்துள்ளது. இன்டர்நெட், மொபைல், டேப்டாப், கம்யூட்டர் போன்ற வசதிகள் எளிதில் கிடைப்பதால் வயது வித்தியாசமின்றி பலரும் இந்த ஆபத்துக்கு பழகி வருகின்றனர். இதிலிருந்து வெளியேற முயற்சிக்கும் சிலரும் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளனர். இதனால் மனதில் குற்ற உணர்வு ஏற்படுகிறது. இது அவர்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது. அவர்களுக்கு மன அழுத்ததை அதிகரிக்கிறது.
போதையாகிவிட்டதா?
நீங்கள் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையா இல்லையா என்பதை முதலில் கண்டறிவது மிகவும் முக்கியம். இந்த வீடியோக்களைப் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால் அது இன்னும் ஆபத்தானது. அதன் முக்கிய அம்சங்கள் இதோ
ஆபாச வீடியோக்களைப் பார்த்த பிறகு நீங்கள் மிகவும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பீர்கள். ஏதோ தவறு செய்கிறீர்கள் என்று நினைக்கலாம். ஆனால் அதற்காக தனியாக நேரம் ஒதுக்குவீர்கள். புதிது புதிதாக தேட ஆரம்பிப்பீர்கள். அந்த வீடியோவைப் பற்றி நிறைய யோசிப்பீர்கள். அடிக்கடி அந்த வீடியோக்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தனியாக இருக்க விரும்புவீர்கள். ஒரு கட்டத்தில் செக்ஸ் மீதான ஆர்வம் குறைந்து, இந்த வீடியோக்கள் போதையாக மாறும். பொதுவாக மது, புகை போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் அவை இல்லாமல் வாழ முடியாது. அந்த வகையில் இந்த வீடியோக்களைப் பார்க்காத போது எதையாவது இழந்துவிட்டதாக உணர்ந்தால், அதற்கு அடிமையாகி விடுவது போலாகும்.
இந்த வீடியோக்களை பார்ப்பதை குறைப்பது எப்படி:
உங்கள் மொபைலில் முதலில் பெற்றோர் பூட்டை ( பேரண்டிங் லாக்) செட் செய்து வையுங்கள். இது ஒவ்வொரு முறையும் மோசமான வீடியோக்களை நீங்கள் பார்க்க விரும்பும் போது பார்க்க கூடாது என்பதை இது உங்களுக்கு நினைவூட்டுகிறது. பெற்றோர் பூட்டு பொதுவாக குழந்தை பராமரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் அதைப் பயன்படுத்தினால், அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தட்டச்சு செய்யும் நேரத்தில் கூட நீங்கள் அதிலிருந்து வெளியேற விரும்புகிறீர்கள் என்பதை அதன் கடவுச்சொல் உங்களுக்கு நினைவூட்டும்.
பலவீனமான தருணங்கள்:
ஒவ்வொரு போதைக்கும் பழக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. சில காரணங்களுக்காக நீங்கள் இதுபோன்ற வீடியோக்களைப் பார்க்க பழகலாம். தனியாக இருப்பது, மனஅழுத்தம், வலி, மனச்சோர்வு போன்றவற்றில் இருந்து வெளிவர, சலிப்பாக இருக்கும் போது அந்த வீடியோக்களைப் பார்க்கத் தோன்றும். இதனால் முதலில் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். இது இந்தப் பழக்கத்தைத் தவிர்க்கலாம்.
பழக்கம்:
நல்ல பழக்கவழக்கங்கள் ஒரு மனிதனை அழகாக மாற்றும். புத்தகம் வாசிப்பது, இசை மற்றும் பாடல்களை கேட்பது, உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, நடப்பது போன்றவற்றைப் பழக்கப்படுத்துங்கள். உங்கள் மனதிலும் எண்ணங்களிலும் நிறைய மாற்றம் ஏற்படும். தியானம் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துகிறது.
நீக்குங்கள்
முதலில் உங்கள் போன் அல்லது கம்ப்யூட்டர்களில் உள்ள ஹார்ட் காப்பிகள் மற்றும் சாஃப்ட் காப்பிகள் இருந்தால் அவற்றை நீக்குகள். மொபைலில் நீங்கள் புக்மார்க் செய்திருந்தால், அதை நீக்கவும். இணையதளங்கள், புத்தகங்கள், பத்திரிக்கைகள் தொடர்பான தரவு ஏதேனும் இருந்தால், அவற்றை அகற்றவும். இவை அனைத்தும் மிகவும் உதவும். இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட உடனடியாக இதைச் செய்யுங்கள்.
படிப்படியான மாற்றம்:
நல்லதோ கெட்டதோ எந்தப் பழக்கத்தையும் மாற்றுவது கடினம். மாற்றம் ஏற்பட சில காலம் எடுக்கும். இதனால் உடனடியாக நிறுத்த முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொண்டால், நீங்கள் விரைவாக வெளியேறுவீர்கள்.
அன்புக்குரியவர்களுடன் இருங்கள்
போதை பெரும்பாலும் தனிமையில் எழுகிறது. எனவே இதிலிருந்து விடுபட ஓய்வு நேரத்தில் தனியாக இருக்காமல், உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். இப்படிச் செய்வது உங்கள் கவனத்தைத் திசை திருப்பும்.
அதிலிருந்து விடுபட பல முயற்சிகளுக்குப் பிறகும் உங்கள் போதை தொடர்ந்தால், ஒரு நிபுணரை அணுகவும். பீதி அடைவதற்குப் பதிலாக, உங்கள் அடிமைத்தனத்தை விட்டொழிப்பதில் உறுதியுடன் இருங்கள். இவற்றுடன் தியானம், உடற்பயிற்சி போன்றவற்றையும் செய்து மனதை அமைதியாக வைத்துக்கொள்வது நல்லது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
ஆரோக்கியம் தொடர்பான சுவாரஸ்மான தகவல்களை தொடர்ந்து அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்