World Book Day: 'நல்ல புத்தகங்கள் நல்ல தோழன்' - உலக புத்தக தின வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
World Book Day 2023: உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் 'உலக புத்தக தினம்' ஏப்.23-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாள், 1995-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.
அனைவருக்கும் வாசிப்பு உரிமை, புத்தகங்களின் அவசியம், நூலகங்களின் வளர்ச்சி, படைப்பாளி - பதிப்பாளர் - வாசகர் இணைப்பு, புத்தக வாசிப்பு, பராமரிப்பு, தொகுப்பு, அனைத்து மொழிகளிடையே புத்தகப் பரிமாற்றம் உள்ளிட்ட இலக்குகளை நோக்கிச் செல்வதன் ஓர் உலகளாவிய இயக்கமாகவே 1996-ம் ஆண்டு ஏப்.23 நாளில் உலக புத்தக தின கொண்டாட்டம் தொடங்கியது. இந்தாண்டு உலக புத்தக தினம் "சுதேசி மொழிகள்" என்ற கருப்பொருளில் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வைதை ஓர் இயக்கமாகத் திமுகவினர் முன்னெடுக்கிறோம் என்றும், புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் வகையில், நமது திராவிட மாடல் அரசு மாவட்டங்கள் தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துவதுடன், நூலகங்களுக்கும் புத்துயிர் அளித்துள்ளது என்றும் உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நல்ல புத்தகங்கள் நல்ல தோழன். ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது. நாம் அறியாத உலகத்தைக் காட்டுகிறது. அறிவூட்டுகிறது, நம்மை பண்படுத்துகிறது.
அதனால்தான், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வைதை ஓர் இயக்கமாகத் திமுகவினர் முன்னெடுக்கிறோம்.புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் வகையில், நமது திராவிட மாடல் அரசு மாவட்டங்கள் தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துவதுடன், நூலகங்களுக்கும் புத்துயிர் அளித்துள்ளது. அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம்" என்று பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்