‘மனச்சோர்வு’ என்பது ஒரு நோயா? - மாற்று வழிகள் என்ன?
நரம்பு மண்டலத்தின் செயல்களை மாற்ற மனச்சோர்வைப் போக்கும் வேலைகளை செய்து அதற்கு கற்பிக்க வேண்டும்.
கொரோனா தொற்றுநோய்களின் அதிகரிப்பு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளுக்குள் சிக்கித் தவிக்கின்றனர். அதனால் அவர்களின் இயக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளில் அசையாத நிலை ஏற்படுகிறது. மனச்சோர்வு பிரச்சனை முன்னிருப்பதை விட தற்போது அதிகமாக உள்ளது.
சைக்கியாட்ரிக் டைம்ஸின் கூற்றுப்படி, மனச்சோர்வு என்பது உலகின் மிகப்பெரிய உடல்நலப் பிரச்சினையாகும், இது மற்ற நோய்களை விட அதிக இயலாமையை ஏற்படுத்தும். ஆனால் நாம் அதை எப்போதும் மனநோய் என்று கூறுகிறோம். மனச்சோர்வுக்கும் உயிரியல் அம்சத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
உளவியலாளர் நிக்கோல் லெபெரா, மனச்சோர்வு மற்றும் பல்வேறு காரணங்களை வேறு லென்ஸ் மூலம் எடுத்துரைத்தார்.
இதுகுறித்து அவர், “ ஒரு நபர் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் வருத்தமாகவும் அர்த்தமற்றதாகவும் உணரும் வகையில் மனநிலை பாதிக்கப்பட்டால் அது மனச்சோர்வு என்று குறிப்பிடப்படுகிறது . இப்படி பாதிப்புக்குள்ளானவர்கள் மெதுவாக ஆர்வத்தை இழக்க முனைகிறார்கள். மேலும் உத்வேகம் தரும் விஷயங்களில் தங்களை இணைப்பதில் எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள்.
மனச்சோர்வு ஒரு "மனநோய்" என்று மட்டுமே கூறப்பட்டாலும், இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறையைச் சமாளிப்பதற்கான உடலின் பாதுகாப்பு முறையாகும். மன பிரச்சனை, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற பணி, சீரற்ற கலாச்சாரம் மற்றும் இயற்கைக்கு மாறான எதிர்பார்ப்புகள் ஆகியவை நம் மனதையும், உடலையும் ஆழமான பாதிப்புக்குள்ளாகின்றன. இது இயற்கையோடு நாம் எப்படி உருவாகி இருக்கிறோம் என்பதற்கு நேர் எதிரானது.
எனவே, உடல் ஆபத்தை உணர்கிறது மற்றும் தன்னியக்க நரம்பு மண்டலத்திலிருந்து (ANS) பதிலை உருவாக்குகிறது, மேலும் அசையாமையால் (மந்தமான செயல்பாடுகள்) உண்டாகும் மனச்சோர்வு உருவாக வழிவகுக்கிறது. நாம் உயிர்வாழவும், பாதுகாப்பாக இருக்கவும் உதவும் உடலின் முயற்சியில், டார்சல் வேகஸ் நரம்பு அசையாமையை (மந்தமான செயல்பாடுகள்) ஏற்படுகிறது. இந்த அறிகுறிகளில், உணர்ச்சியற்ற விளைவைக் கொண்டிருப்பது கூட அடங்கும்.
உடலின் தற்சார்பு பாதுகாப்பு முறையில், ஆபத்து சந்தர்ப்பங்களில் குறைவான வலி அல்லது துன்பத்தை உணருவது என்பது இயற்கையானது. இருப்பினும், அசையாமை (மந்தமான செயல்பாடுகள்) என்பது உடலால் குறுகிய கால விளைவுகளாக இருக்க வேண்டும். நாம் இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறையில் சிக்கிக்கொண்டதால் இந்த அறிகுறிகள் நீண்டு அதிக கால விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
மனச்சோர்வுக்கான சிகிச்சையில் நாங்கள் எப்போதும் மருந்து அல்லது உரையாடல் தெரபி கொண்டு சிகிச்சை செய்ய முனைகிறோம். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பெரிய முன்னோக்கு தன்னம்பிக்கை கொண்டிருப்பது நல்லது. மேலும் சுய கட்டுப்பாடு, நமது சகிப்புத்தன்மை வரம்புகளை விரிவுபடுத்துதல், நம்மைப் பாதுகாப்பாக உணரவைக்கும் நபர்களுடன் ஒத்துழைப்புடன் இருத்தல் போன்ற செயல்களை செய்ய வேண்டும்.
தொடர்ந்து, நரம்பு மண்டலத்தின் வேலைகளை இதுபோல் செயல்பாடுகள் கொண்டு கற்பிக்க வேண்டும். அதேபோல் பாதுகாப்பாகவும் ஒற்றுமையோடு இருப்பதாகவும் உணரும் இடத்தை உருவாக்குவது மிக முக்கியமான ஒன்றாகும்” என தெரிவித்தார்.