தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Detox Water : இந்த தண்ணீர் போதும்! உங்கள் உடலில் உள்ள கழிவுகள் மொத்தமும் நீங்கிவிடும்!

Detox Water : இந்த தண்ணீர் போதும்! உங்கள் உடலில் உள்ள கழிவுகள் மொத்தமும் நீங்கிவிடும்!

Priyadarshini R HT Tamil
Oct 18, 2023 10:02 AM IST

உடலில் அதிகம் உள்ள தண்ணீரை வெளியேற்ற உலகிலேயே சிறந்த கழிவுநீக்க பானம். இதை குடித்தால் உங்கள் உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படும்

Detox Water : இந்த தண்ணீர் போதும்! உங்கள் உடலில் உள்ள கழிவுகள் மொத்தமும் நீங்கிவிடும்!
Detox Water : இந்த தண்ணீர் போதும்! உங்கள் உடலில் உள்ள கழிவுகள் மொத்தமும் நீங்கிவிடும்!

ட்ரெண்டிங் செய்திகள்

எலுமிச்சை பழம் – 1

லெமன் புல் – 2 இன்ச்

வெள்ளரிக்காய் – அரை துண்டு

புதினா - சிறிதளவு

செய்முறை

இஞ்சி, எலுமிச்சை பழம், லெமன் புல், வெள்ளரிக்காய், புதினா ஆகிய அனைத்தையும் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 300 மிலி தண்ணீர் சேர்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டி பருக வேண்டும்.

இதை நீண்ட நேரம் வேண்டுமானாலும் ஊற வைக்கலாம். 4 முதல் 6 மணி நேரம் வரை ஊறவிட்டு பருகலாம். ஆனால் அப்போது தண்ணீர் கொஞ்சம் கசக்கும். உடலுக்கு நல்லது. நல்ல கழிவு நீக்கத்துக்கு உதவும்.

நமது உடலில் கழிவு நீக்கம் ஏன் செய்ய வேண்டும்?

நமது மாறிவிட்ட வாழ்க்கை முறை, உணவுப்பழக்கங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால், நமது உடலில் அன்றாடம் கழிவுகள் அதிகளவில் சேர்ந்துவிடுகின்றன. இந்த கழிவுகள் நமது உடலில் தங்கதங்க அது நோயாக உருமாற்றம் அடைகிறது. இதனால் நாம் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகிறோம்.

எனவே நமது உடலில் அதிகப்படியாக சேரும் கழிவுகளை நாம் வெளியேற்ற வேண்டும். நமது உடலின் சுத்திகரிப்பு இயக்கத்தில் அவை மலமாக, சிறுநீராக, வியர்வையாக, சளியாக என பல்வேறு வழிகளிலும் வெளியேறிவிடுகிறது. ஆனால் அதையும் கடந்து சில கழிவுகள் உடலிலேயே தங்கி வியாதியை ஏற்படுத்திவிடுகின்றன.

எனவே அந்த கழிவுகளை நீக்குவதற்கு சரியான முறையை நாம் தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும். அதற்கு முதலில் நமது உடல் இயக்கம் மற்றும் கழிவுகள் வெளியேறுவதன் அவசியம் ஆகியவற்றை தெரிந்துகொண்டு, இயற்கை முறையில் கழிவுகளை வெளியேற்றுவது குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.

நமது உடலில் இதுபோன்ற முறைகளை பின்பற்றி கழிவுகளை இயற்கை முறையில் வெளியேற்றிவிட்டால், நாம் நோய் தொற்றுகளுக்கு உள்ளாவதை அது தடுத்துவிடுகிறது. எனவே இந்த பானத்தை கட்டாயம் எடுத்துக்கொண்டு உங்கள் உடலில் அதிகப்படியாக தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுங்கள்.

இந்த பானத்தில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் உடல் கழிவுநீக்கம் செய்ய உதவக்கூடியவைதான். எனவே தினமும் தவறாமல் எடுத்து பயன்பெறுங்கள். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்