தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dengue Myth : உயிரிழப்பை அதிகரிக்கும் ப்ளேட்லெட்! டெங்கு - கட்டுக்கதைகளும், உண்மைகளும்!

Dengue Myth : உயிரிழப்பை அதிகரிக்கும் ப்ளேட்லெட்! டெங்கு - கட்டுக்கதைகளும், உண்மைகளும்!

Priyadarshini R HT Tamil
Aug 29, 2023 01:04 PM IST

கொசுவினால் பரவக்கூடியது டெங்கு, 2018ம் ஆண்டு முதல் இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒரு காய்ச்சலாக டெங்கு உள்ளது. டெங்குவால் நிறைய மரணங்கள் கூட ஏற்பட்டிருக்கின்றன. அதுகுறித்த கட்டுக்கதைகளும் பல உள்ளன. ஆனால் உண்மைகளை தெரிந்துகொள்வதே நமக்கு நல்லது. எனவே இங்கே விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டெங்கு கட்டுக்கதைகளும், உண்மைகளும்
டெங்கு கட்டுக்கதைகளும், உண்மைகளும்

ட்ரெண்டிங் செய்திகள்

மழைக்காலம் கொசுக்கள் பெருகுவதற்கு ஏதுவான ஒரு சூழலை ஏற்படுத்தி தருகிறது. அது கொசுக்கள் அதிகரிக்க வாய்ப்பாகிறது. மழைக்காலத்தில் தண்ணீரை நிறைய இடங்களில் தேங்குவதற்கு வாய்ப்பாகிவிடுகிறது. அதனால் கொசுக்களுடன், டெங்குவை பரப்பும் கொசுக்களும் அதிகரித்துவிடுகின்றன.

கட்டுக்கதை 1

டெங்கு ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு எளிதாக பரவி விடுகிறது.

உண்மை – ஒருவரிடம் இருந்த மற்றொருவருக்கு பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசு கடிப்பதன் மூலம் மட்டுமே பரவுகிறது.

கட்டுக்கதை 2

ஏடிஸ் ஏஜிப்தி கொசுக்கள் மட்டுமே டெங்குவை பரப்புகின்றன?

உண்மை - ஏடிஸ் ஏஜிப்தி கொசுக்கள் பெரும்பாலும் டெங்குவை பரப்பினாலும், ஏடிஸ் அல்போபிக்டசும் டெங்கு வைரஸை பரப்புகிறது.

கட்டுக்கதை 3

ஒவ்வொரு முறை டெங்கு ஏற்படும்போதும், ப்ளேட்லெட் மாற்றம் தேவைப்படுகிறது?

உண்மை - ஒருவருக்கு வழக்கமாக இருக்கக்கூடிய ப்ளேட்லெட்களின் அளவு 1.50 லட்சம் முதல் 4.10 லட்சம் வரை ஆகும். அது 50 ஆயிரம் முதல் 1.50 லட்சம் என டெங்கு எற்பட்ட 4 அல்லது 5ம் நாளில் குறைந்தால், டெங்கு அதிதீவிரமாக உள்ளது என்று பொருள். 10 ஆயிரத்துக்கும் கீழ் ப்ளேட்லெட் குறைந்தால்தான் ப்ளேட்லெட்கள் ஏற்றப்படும் அல்லது உடலினுள் எங்கேனும் ரத்தக்கசிவு இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே ப்ளேட்லெட்கள் ஏற்றப்படும்.

கட்டுக்கதை 4

ப்ளேட்லெட்கள் ஏற்றப்பட்டால் மட்டுமே ப்ளேட்லெட் எண்ணிக்கைகள் அதிகரிக்கும்?

உண்மை - ப்ளேட்லெட்களை இயற்கையான முறையில் அதிகரிக்கலாம்.

பப்பாளி இலைச்சாறு பருகுவதன் மூலம் ப்ளேட்லெட்கள் அதிகரிக்கும்.

மாதுளை சாறு, இளநீர், ஓஆர்எஸ் கரைசல் எடுத்து உடலில் நீர்ச்சத்துக்களை தக்க வைப்பதன் மூலம் ப்ளேட்லெட்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

ஃபோலேட்கள் அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரஞ்ச், கிவி, க்ரான்பெரி, பப்பாளி, தக்காளி மற்றும் டிராகன் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முழு தானியங்களும் ப்ளேட்லெட்கள் அதிகரிக்க உதவும்.

கட்டுக்கதை 5

எந்த உணவை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாமா?

எண்ணெய், வறுத்த உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. இவை ரத்த அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.

டெங்குவை தடுக்க

தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.

இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வேண்டும்.

பெரும்பாலான உடல் பகுதியை முடிய ஆடைகளை அணிய வேண்டும்.

கொசு வலைகளை பயன்படுத்த வேண்டும்.

வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

டெங்குவுக்கு மருந்தோ, தடுப்போ கிடையாது எனவே பாதுகாப்புடன் இருப்பது மட்டுமே சிறந்த வழி.

WhatsApp channel

டாபிக்ஸ்