டீக்கடையில் கொடுக்கும் சுவையான சுண்டல்; வீட்டிலே செய்யலாமா? மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  டீக்கடையில் கொடுக்கும் சுவையான சுண்டல்; வீட்டிலே செய்யலாமா? மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது!

டீக்கடையில் கொடுக்கும் சுவையான சுண்டல்; வீட்டிலே செய்யலாமா? மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது!

Priyadarshini R HT Tamil
Oct 08, 2024 11:44 AM IST

டீக்கடையில் கொடுக்கும் சுவையான மசாலா சுண்டலை நீங்கள் வீட்டிலேயே செய்யமுடியும். மாலை சிற்றுண்டிக்கும் ஏற்றது, டிஃபனுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

டீக்கடையில் கொடுக்கும் சுவையான சுண்டல்; வீட்டிலே செய்யலாமா? மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது!
டீக்கடையில் கொடுக்கும் சுவையான சுண்டல்; வீட்டிலே செய்யலாமா? மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது!

டீக்கடை மசாலா சுண்டல் செய்ய தேவையான பொருட்கள்.

சோம் -கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கொத்தமல்லி – சிறிது

புதினா இலைகள் – சிறிது

வேகவைத்த பச்சை பட்டாணி – ஒரு கப்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் – கால் ஸ்பூன்

கரம் மசாலா – கால் ஸ்பூன்

அரிசி மாவு – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

துருவிய கேரட் – கால் கப்

இதற்கு வெங்காயத்தை வறுத்துக்கொள்ள வேண்டும். அந்த வெங்காயத்தை எப்படி வறுப்பது என்று பார்க்கலாம்.

வெங்காயம் வறுக்க தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கடலை மாவு – கால் கப்

அரிசி மாவு – கால் கப்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – கால் ஸ்பூன்

எண்ணெய் – வறுக்க தேவையான அளவு

வெங்காயம் வறுப்பது எப்படி?

பெரிய வெங்காயத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அரை மணி நேரம் ஊறவைத்து அதை கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் அதில் போட்டு வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

டீக்கடை மசாலா சுண்டல் செய்வது எப்படி?

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். இப்போது தண்ணீர் சேர்த்து வறுத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

இப்போது மசாலா நன்றாக குழம்புபோல் வரும். பின்னர் வேக வைத்த பச்சை பட்டாணியை சேர்க்கவேண்டும். அரிசி மாவை தண்ணீரில் கலந்து அந்த மசாலாவில் சேர்க்கவேண்டும். அப்போதுதான் மசாலா கெட்டியாகும்.

அனைத்தும் நன்றாக வெந்து வந்தவுடன் இறக்கவேண்டும். மணமணக்கும் மசாலா சுண்டல் தயார். இதில் துருவிய கேரட், மல்லி, புதினா தழைகள் தூவி இறக்கவேண்டும். தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தையும் பச்சையாக தூவிக்கொள்ளலாம். டீக்கடைகளை நீங்கள் கடந்து செல்லும்போது இந்த மசாலா சுண்டல்தான் உங்களை வலை வீசி இழுக்கும். இதை ஒரு டீயுடன் மழைக்காலத்தின் மாலை நேரத்தில் சாப்பிட்டு பாருங்கள்.

மழை, டீ, மசாலா சுண்டல், இளையராஜா பாடல் என நீங்களும் கவிதை எழுதும் அளவுக்கு கவிஞராகிவிடுவீர்கள். இந்த மசாலா சுண்டல் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை மாலையில் செய்துவிட்டால் இரவில் டிஃபனுக்கு சைட்டிஷ்ஷாக பயன்படுத்திக்கொள்ளலாம். அத்தனை சுவையானது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.