Peanut Candy Recipe: இனி வீட்டிலேயே செய்யலாம் கடலை மிட்டாய்! சிம்பிள் ஸ்டெப்ஸ் உங்களுக்காக!
கடைகளில் வாங்கி தின்னும் உணவு பொருட்கள், ஸ்நாக்ஸ் மட்டுமே எப்போதும் குழந்தைகளுக்கு பிடிக்கின்றது. கடையில் வாங்கும் ஸ்நாக்ஸ் போலவே வீட்டில் செய்து தருவது சிறிது சிக்கலான ஒன்றுதான்.
வீடுகளில் மாலை நேரங்களிலும், விசேஷச காலங்களிலும் பல விதமான இனிப்பு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. சில நேரங்களில் கடைகளில் இருந்தும் பலகாரங்கள் வாங்கி சாப்பிடும் வழக்கமும் உள்ளன. கடைகளில் வாங்கி தின்னும் உணவு பொருட்கள், ஸ்நாக்ஸ் மட்டுமே எப்போதும் குழந்தைகளுக்கு பிடிக்கின்றது. கடையில் வாங்கும் ஸ்நாக்ஸ் போலவே வீட்டில் செய்து தருவது சிறிது சிக்கலான ஒன்றுதான். கடைகளில் தயாரிக்கப்படும் பொருட்களில் சுவை மற்றும் நிறத்தை கூட்டுவதற்கு பல வேதி பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.இனி இந்த பிரச்சனை இருக்கத் தேவையில்லை. ஏனெனில் வீட்டில் இருந்த வரை பிள்ளைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் கடலை மிட்டாய் செய்யும் எளிமையான முறையை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் நிலக்கடலை
2 கப் வெல்லம்
அரை கப் அளவுள்ள தண்ணீர்
2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
100 கிராம் நெய்
ஒரு சிட்டிகை உப்பு
செய்முறை
நிலக்கடலையில் தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் உரித்த நிலக்கடலையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். பின்னர் அதனை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு ஆற விட வேண்டும். வெல்லம் மற்றும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் காய வைத்து நன்கு கரைத்து பாகு பதத்தில் வருமாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது சதுரங்க வடிவில் ஒரு தட்டை எடுத்து அதில் நன்கு நெய்யை தடவி வைக்கவும். அடுத்து கேரமல் செய்ய ஒரு கடாயில் மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வெல்லப்பாகை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி ஊற்றி கேரமல் அளவிற்கு சரியான பதம் வரும் வரை அதை ஒரு கரண்டியால் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
கேரமல் சரியான பதம் வந்ததும் அதில் 100 கிராம் அளவு நெய் மற்றும் ஏலக்காய் தூளை போட்டு அதை நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதனை கீழ் இறக்கி அதில் வறுத்து ஆற வைத்து எடுத்து வைத்திருந்த வேர்க்கடலையை போட்டு, அதை நன்கு கிளறி விட வேண்டும். கிளறி விட்டதும் நெய்யை தடவி வைத்திருக்கும் தட்டில் இந்த கலவையை கொட்டி நன்கு சமமாக பரப்பி அதை நன்கு ஆற விட வேண்டும். அது ஆறிய உடன் தட்டை அப்படியே கவுத்தி அதை எடுத்து ஒரு கத்தியின் மூலம் சதுரங்க வடிவில் நறுக்கவும். சுவையான மற்றும் சத்தான கடலை மிட்டாய் ரெடி. இதை உங்கள் வீட்டில் இருக்கும் குட்டிஸோடு சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
அனைவரும் விரும்பு கடலை மிட்டாய்
பல காலமாக கடலை மிட்டாய் நமது முக்கியமான தின்பண்டமாக இருந்து வருகிறது. இதில் வெல்லம் சேர்த்து இருப்பதால், இதில் சர்க்கரையில் கெடுதலும் தவிர்க்கப்படுகிறது. பெரியவர் முதல் சிறியவர் வரை என வீட்டில் உள்ள அனைவரும் சுவையாக சாப்பிட்டு மகிழலாம். எனவே நீங்களும் உங்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு இந்த கடலை மீட்டதையை செய்து தனது மகிழ்ச்சி படுத்துங்கள். மேலும் இது நீண்ட நாட்களுக்கு கேட்டு போகமாலும் இருக்கும்.
டாபிக்ஸ்