தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chana Masala: ருசியான பஞ்சாபி ஸ்டெயில் சென்னா கிரேவி.. பூரி சப்பாத்திக்கு அட்டகாசமான காமினேஷேன்!

Chana Masala: ருசியான பஞ்சாபி ஸ்டெயில் சென்னா கிரேவி.. பூரி சப்பாத்திக்கு அட்டகாசமான காமினேஷேன்!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 12, 2023 10:30 AM IST

பூரி சப்பாத்திக்கு மசால் செய்து அழுத்து விட்டதா ஒரே ஒரு முறை இப்படி பஞ்சாபி ஸ்டெயிலில் சென்னா மசாலா செய்து பாருங்க

சென்னா கிரேவி
சென்னா கிரேவி

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

வெள்ளை சுண்டல்

பட்டை

கிராம்பு

ஏலக்காய்

கல்பாசி

டீ டிக்காஷன்

உப்பு

மல்லி விதை

சீரகம்

மிளகாய் வத்தல்

வெந்தயம்

நெய்

வெண்ணெய்

வெங்காயம்

தக்காளி

இஞ்சி பூண்டு பேஸ்ட்

கொத்தமல்லி

கறிவேப்பிலை

செய்முறை

ஒரு ஒரு கப் வெள்ளை சுண்டலை 8 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த சுண்டலை ஒரு குக்கரில் சேர்த்து அதில் இரண்டு துண்டு பட்டை, 2 ஏலக்காய், கொஞ்சம் கல்பாசி, உப்பு, கொஞ்சமாக டீ டிக்காஷன் தேவையான தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து 3 விசில் விட்டு எடுத்து கொள்ள வேண்டும்.

இதையடுத்து ஒரு வாணலியில் 2 ஸ்பூன் மல்லி விதை, ஒரு ஸ்பூன் சீரகம், 2 மிளகாய் வத்தல், ஒரு துண்டு பட்டை, பிரியாணி இலை, கல்பாசி, அரை ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். வறுத்த பொருட்களுடன் ஒரு கைபிடி கஸ்தூரி மேத்தியை சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொள்ள வேண்டும். பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடான பிறகு ஸ்பூன் சீரகம். கொஞ்சம் ஓமத்தை கசக்கி சேர்த்து கொள்ள வேண்டும். சீரகம் பொரிந்த உடன் ஒரு சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருந்த மசாலா பவுரை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் வேக வைத்த சுண்டல் கடலையை சேர்த்து கொள்ள வேண்டும். இதில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கொத்திக்க விட வேண்டும். இதில் ஒரு டீ ஸ்பூன் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.

மேலும் இரண்டு மிளகாயை லேசாக கீறி விட்டு சேர்த்து கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் வற்றிய பிறகு கடைசியாக ஒரு கைபிடி அளவு நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து ஒரு ஸ்பீன் வெண்ணெய்யை சேர்த்து இறக்கி விடலாம். இஞ்சியை குட்டி குட்டியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.

இது சூடான பூரி சப்பாத்திக்கு அட்டகாசமான காமினேஷன்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்